ஒரு குற்றத்தை மறைக்க, அடுத்தடுத்து குற்றச்செயல்களை செய்து, சிக்கிக்கொண்டு ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பலர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மோசடி நபரின் கில்லாடி வேலை இது...
சாதாரணமாக வங்கியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டும் என்றாலே ஆயிரத்தெட்டு விவரங்களை கேட்டு மக்களை சில வங்கிகள் படாதபாடுபடுத்தி விடுகின்றன. இதில் கடன் என்று வங்கியின் வாசல்படியை மிதிக்கும் நடுத்தரவர்க்கத்தினரை, சில அதிகாரிகள் அலைகழிக்கவிடுவது, லோன் வாங்கும் எண்ணத்தையே கைவிடச் செய்து விடுகிறது. ஆனால் மோசடி செய்யும் நோக்கத்தில் வங்கிகளை அணுகுபவர்களை சிலர், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது வேடிக்கையாக உள்ளது.
அப்படித்தான் சென்னையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை 20க்கும் மேற்பட்ட வங்கி களில் போலி டாக்குமென்ட் கொடுத்து பல கோடியை சுருட்டியுள்ளார் தி.நகரை சேர்ந்த சுப்பிரமணியன். இன்ஜினியரிங் படித்த இவருக்கு மோசடி செய்வது அல்வா சாப்பிடுகிற மாதிரி என்கின்றனர் காவல் துறையினர்.
வங்கி மோசடி வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இன்ஜினியர் சுப்பிரமணியன், இந்த முறை வங்கி மோசடியை விட்டு வேலை வாங்கி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தனது வலை யில் வீழ்த்தினார். இதற்காக கோடம்பாக்கத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தினார். சுப்பிரமணியன் உறுதியளித்து போல யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஏமாந்தவர்கள் கொடுத்த வழக் கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்ய தீவிரம் காட்டினர்.

இதையறிந்த சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முனைந்தார். ஜாமீன் தொகையாக ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆவணங்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டாக்குமென்ட்டை சைதாப் பேட்டை கோர்ட்டில் சுப்பிரமணியன் சமர்பித்தார். அந்த டாக்குமென்ட் போலி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சுப்பிரமணியன் மீது போலி டாக்குமென்ட் தாக்கல் செய்ததாக இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் பேசினோம். "சுப்பிரமணியன் மீது வங்கி மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கடந்த 2009ல் வழக்குப்பதிவு செய்தோம். இந்த வழக்கில் 139 பேர் புகார் கொடுத்துள்ளனர். இதில் முன்ஜாமீன் பெறுவதற்காக சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சுப்பிரமணி தரப்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து டாக்குமென்ட் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த டாக்குமென்ட் குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது பெயரில் இருந்தது. இந்த டாக்குமென்ட்டில் சில சந்தேகங்கள் ஏற்பட, அது தொடர்பாக விசாரிக்க கோர்ட் எங்களுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் டாக்குமென்ட் குறித்து விசாரித்தோம். அப்போது அந்த சொத்து தாம்பரம் சேலையூரை சேர்ந்த சாந்திக்கு என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அவரது சொத்தை போலியாக சொக்கலிங்கம் எனபவருக்கு மாற்றியிருப்பதை கண்டுப்பிடித்தோம். இதையடுத்து சுப்பிரமணியன், சொக்கலிங்கத்தை கைது செய்துள்ளோம்' என்றனர்.
ஜாமீனுக்கு ஆவணங்களை தயாரித்து கொடுப்பதே வேலையாக வைத் திருக்கும் சொக்கலிங்கம் குறித்து விசாரித்தோம். "எழும்பூர் கோர்ட்டில் சூரிட்டி கொடுப்பதே சொக்கலிங்கத்துக்கு வேலை. அறிமுகம் இல்லாத யாருக்கும் பணத்தை வாங்கிக் கொடுத்து சூரிட்டி கொடுத்து வந்துள்ளார் சொக்கலிங்கம். இதே போன்றுதான் சுப்பிரமணியனிடமும் சில ஆயிரங் களை பெற்றுக் கொண்டு சொக்கலிங்கம் பெயரில் போலியாக டாக்குமென் ட் ரெடி செய்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று போலி டாக்குமென்டை சூரிட்டியாக கொடுப்பவர்கள் வழக்கில் ஆஜராகாமல் எஸ்கேப்ஆகி விடுவது வாடிக்கையாக உள்ளது" என்கின்றனர் காவல்துறையினர்.
சமீபகாலமாக நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் சூரிட்டிகளில் பெரும் பாலானவைகள் போலியாக இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் சூரிட்டிகளை முறையாக விசாரித்தால் மோசடிகள் தடுக்கப்படும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இன்ஜினியர் சுப்பிரமணியன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சூரிட்டி தகவல்கள் மட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நீதி வழங்கும் நீதிமன்றங்களிலேயே போலி டாக்குமெண்ட் கொடுத்து ஏமாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

No comments:
Post a Comment