கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் நடிப்பில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
’அனேகன்’ வெளியான நிலையிலும் பல மால்களின் உள்ள திரையரங்களில் ‘என்னை அறிந்தால்’ ஹவுஸ் ஃபுல் காட்சிகள் ஓடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஜித் படங்களில் முதல் முறையாக ‘என்னை அறிந்தால்’ எலைட் க்ளப்பில் இணைந்துள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் தமிழ் படங்களில் ஒரு மில்லியன் வசூலை கடக்கும் படங்கள் இந்த க்ளப்பில் இணைவது வழக்கம்.
ரஜினி, கமல், ஷங்கர் படங்கள் இந்த எலைட் க்ளப்பில் எப்போதும் இணைவது வழக்கம். இதில் சென்ற வருடம் புதிதாக இணைந்தார் விஜய். ‘கத்தி’ அமெரிக்க மார்கெட்டில் அடித்த வசூல் எலைட் க்ளப்பில் விஜய்யை இணைத்துள்ளது.
இவரை அடுத்து விக்ரமின் ‘ஐ’ படம் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித்தும் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு கிடைத்த வசூலால் எலைட் க்ளப்பில் இணைந்துள்ளார்.
No comments:
Post a Comment