சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும் போட்டோதெரப்பிக் கருவி!

ருத்துவக் கருவிகள் தயாரிக்கும் பீனிக்ஸ் மெடிக்கல் சிஸ்டம் நிறுவனம், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டி-ரெவ் என்ற அமைப்புடன் இணைந்து, பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் "பிரில்லியன்ஸ் ப்ரோ, மேம்பட்ட போட்டோ தெரப்பி" கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இதற்கான அறிமுக விழாவில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் குமுதா, மேத்தா மருத்துவமனை மருத்துவர் சண்முகம் மற்றும் டி-ரெவ் நிறுவனம் ஏ.ஜெ வியோலா ஆகியோர் கலந்து கொண்டனர் .
குழந்தைகளைப் பெருமளவில் தாக்கும் நோய் மஞ்சள் காமாலை. பிறந்த ஐந்து நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளை, இந்த நோய் அதிகம் தாக்குகிறது. பிறந்து இரண்டு வாரம் ஆகியும் குழந்தையின் கல்லீரல் போதிய வளர்ச்சி இல்லாமல் இருத்தல், தாய் - சேயின் ரத்தப்பிரிவுகள் வெவ்வேறாக இருப்பது இவற்றால் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில், 'பிளுரூபின்' அளவு அதிகமாகும்போது, மஞ்சள் காமாலை நோய் தாக்கி, மூளை பாதிப்பு, நரம்பியல் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்குச் சித்த வைத்தியம், ஆங்கில மருந்துகள் எடுபடாது. ஏனெனில்,பெரியவர்களுக்கு வரும் மஞ்சள் காமாலை வேறு, பச்சிளம் குழந்தைகளுக்கு வருவது வேறு.

இதில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இன்றிக் கண்களை மறைத்து, கருவியின் மூலம் குழந்தையின் தோல் மீது நீல நிற ஒளிபடும்படி, குறிப்பிட்ட இடைவெளியில் சிகிச்சை அளித்து, ரத்தத்தில் 'பிளுரூபின்' அளவை கணக்கிட்டு குறைத்து, மஞ்சள் காமாலையைக் கண்டிப்பாகக் குணப்படுத்திவிட முடியும். இந்தப் 'பிரில்லியன்ஸ் போட்டோ தெரப்பி'க் கருவி மேம்பட்ட திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உரிய முறையில் நல்ல சிகிச்சை அளிக்கலாம்" என்றார் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் குமுதா,.


இன்குபேட்டர், ரேடியன்ட் வாமர் (குழந்தைகளுக்குக் கதகதப்பை அளிக்கும் கருவி) ரிசசிடேசன் கருவி, போட்டோ தெரப்பிக் கருவி, சிபிஏபி (ஆக்சிஜன் சப்ளை செய்யும் கருவி), எடை கருவி போன்ற பல மருத்துவக் கருவிகளைத் தயாரித்து வழங்கி வரும் பீனிக்ஸ் நிறுவன சசிக்குமார், போட்டோ தெரப்பிக் கருவி குறித்துப் பேசுகையில்,

''கிராமப்புற மருத்துவமனைகளில் கூட, எளிய முறையில் கையாளும் அளவுக்கு அதிநவீன முறையில், 'பிர்ல்லியன்ஸ் போட்டோ தெரப்பி'க் கருவியினை அறிமுகப்படுத்தியுள்ளோம். மருத்துவர்களும், மக்களும் கருவியினை எப்படிப் பயன்படுத்த விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றபடி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில், குழந்தையின் மீது, நீல நிற ஒளி சமஅளவில் படரும் வகையில் அமைக்கப்பட்டு, ஒளி பரவும் அளவினை நிர்ணயிக்கக் கூடிய 'லைட் மீட்டர்' இணைக்கப்பட்டுள்ளது.
சிறிய இடத்தில்கூடப் பயன்படுத்தும் அளவுக்கும் , எடை குறைவாகவும் வடிவமைத்துள்ளோம் . அது தவிர, தூசிகள் படிந்து நோய்த் தொற்று வராமலிருக்கும் வகையிலும் கருவியின் பாகங்கள் சமதளமாக உள்ளன. மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தக் கருவி முப்பதாயிரம் ரூபாய்க்கே வழங்க உள்ளோம்" என்றார்.



No comments:

Post a Comment