செவ்வாய் கிரகத்திற்கான ஒருவழி பயணத்திற்கு மூன்று இந்தியர்கள் உள்ளிட்ட 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியை படித்துவிட்டு விண்வெளியில் குடியேறுவது எல்லாம் சாத்தியமா, தேவையா என்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தால் இதை கவனியுங்கள்.
பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், 'விண்வெளி பயணத்திலும், வேற்று கிரகங்களில் குடியேறுவதிலும்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
நம் காலத்தின் மிகச்சிறந்த அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக கருதப்படும் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது விண்வெளி பயணத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

'கெஸ்ட் ஆப் ஹானர்' எனும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பரிசுப்போட்டியில் வெற்றி பெற்றவருடன், லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தை சுற்றிபார்த்த படி, அவர் கேட்ட கேள்விகளுக்கு ஹாகிங் பதில் அளித்தார்.
அப்போது மனிதகுலத்தின் எந்த குணம் மாறவேண்டும், எந்த குணத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்த போட்டியாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஹாகிங், ''மனிதகுலத்திடம் மாற வேண்டும் என நான் நினைக்கும் குணம் அடுத்தவரை தாக்கும் மூர்க்கமான குணம். குகைகளில் வாழ்ந்த காலத்தில், அதிக உணவை பெறவும், துணையை தேர்வு செய்யவும் இது தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த குணம் இப்போது மனித குலத்திற்கே தீங்காக மாறியிருக்கிறது. பெரிய அளவிலான அணு ஆயுத போர், மனிதகுலத்திற்கு அழிவை ஏற்படுத்திவிடலாம். எனவே, மனிதர்களிடம் பரிவு மேலும் மேம்பட வேண்டும்'' என்றார்.
விண்வெளி பயணம் பற்றி குறிப்பிட்ட ஹாகிங், ''நிலவுக்கு மனிதனை அனுப்பியது நாம் இன்னும் புரிந்துகொள்ளாத வகையில், மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துள்ளது. இது பூமியின் உடனடி பிரச்னையை தீர்த்துவிடவில்லை என்றாலும், இவை குறித்த புதிய புரிதலை ஏற்படுத்தி, நமக்கு உள்ளேயும் வெளியேவும் பார்க்க வைத்திருக்கிறது.
நீண்டகால நோக்கில் மனிதகுலத்தின் எதிர்காலம் விண்வெளியில்தான் இருக்கிறது என நம்புகிறேன். எதிர்கால வாழ்க்கைக்கான ஆயுள் காப்பீடாக இது இருக்கிறது. மற்ற கிரகங்களில் குடியேறுவதன் மூலம் மனிதகுலம் அழிவதை தடுக்கலாம்'' என்றார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், இயந்திர மனிதர்கள் உள்ளிட்ட செயற்கை அறிவு சார்ந்த விஷயங்களால் மனித குலத்திற்கு ஆபத்து என ஹாகிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment