சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Feb 2015

தமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருவதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு: 

* கடந்த 4 ஆண்டுகளில் 3,315 மெகாவாட் மின்னணு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.


* மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

* திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.330 கோடி செலவில் நீர் சேமிப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* குடிநீர்த் தேவையை சமாளிக்க பூண்டி ஏரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

* மீஞ்சூர், நெமிலிச்சேரியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

* இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இது உகந்த தருணம் இல்லை.

* தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெற தீவிர முயற்சி.

* மாநிலம் முழுவதும் 200 பொதுச்சேவை மையம் அரசு கேபிள் டிவி மூலம் அமைக்கப்படும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

* மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தேசிய நதிநீர் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வு.

* தமிழ் வளர்ச்சிக்காக ரூ.42.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அரசு கேபிள் டிவி சேவை மூலம் ஏழை மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை.

* சரக்கு, சேவை வரிவிதிப்புக்கு ஒத்தகருத்து ஏற்படுத்த தமிழகம் வலியுறுத்துகிறது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக  செயல்படுகின்றன.

* விலைவாசியை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

* 4,680 கோடி ரூபாயில் 2.4 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருகிறது.

* தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

* இலங்கை அகதிகள் அமைதியான வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ரூ.43.98 கோடியில் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தமிழ்ச்சங்க கட்டடம் கட்டப்படும். 

* மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக்கு பாராட்டு.No comments:

Post a Comment