2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணியை முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வழிமொழிந்தார். அதை தொடர்ந்து முதல்வர் பதவி வேட்பாளராக அன்புமணியை ராமதாஸ் அறிவித்து ஒரு பேனாவை பரிசளித்தார்.
அந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ''தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி. அடுத்த ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு வருவது உறுதி. ஆட்சிக்கு வந்த பிறகு நான் அளித்த பேனாவின் மூலம் அவர் முதல் கையெழுத்தைப் போட வேண்டும். அந்த முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மது ஒழிப்பாகத்தான் இருக்கும்.

பா.ம.க. தொடங்கி 26 ஆண்டுகளாகிவிட்டன. என் தலைமையில் பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. பா.ம.க. முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணிக்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புபவர்கள். வேறு யாராலும் மாற்றத்தைக் கொடுக்க முடியாது. இந்த மாற்றத்துக்குத் தகுதி, அரசியல் முதிர்ச்சி வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. அதற்குத் தகுதி வாய்ந்த கட்சி பா.ம.க. மட்டுமே.
தமிழகத்தில்தான் மதுப் பழக்கம் காரணமாக அதிகமாக சாலை விபத்துகள் நிகழ்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஊழல், லஞ்சம்தான். இந்த இரண்டும் இல்லாத ஆட்சியை பா.ம.க. தரும். நல்லாட்சி எப்படிக் கொடுப்பது எனப் பட்டியலிட்டு வைத்துள்ளோம். தமிழகத்தில் 50 ஆண்டுகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி செய்தது, என்ன மாற்றம் கண்டுள்ளது. விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு என எதிலும் வளர்ச்சி ஏற்படவில்லை. தமிழகத்தில் பா.ம.க. தான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ் முழுமையாக அரியணை ஏறும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு இளைஞரும் பாடுபட வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்க வேண்டும். இளைஞர்கள் சக்தியை எந்த நாடு பயன்படுத்துகிறதோ, அந்த நாடு வளர்ச்சி அடையும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கூறியது, உயர் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்கிறது என்றால் அதற்கு பா.ம.க. தான் காரணம்.
அன்புமணிக்கு ஒருமுறை வாய்ப்புக் கொடுங்கள். அதன் பிறகு அடுத்த அடுத்த முறையும் அவருக்குத்தான் வாக்கு அளிக்க வேண்டும் என நினைப்பீர்கள். பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தான் கிடைக்கும்" என்றார்.

No comments:
Post a Comment