சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2015

உலகக்கோப்பை கிரிக்கெட்டும், சற்று குழப்பமான அடுத்தச் சுற்றுகளும்...!

ந்த முறை உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் புதுமையைப் புகுத்தியிருக்கிறது ஐ.சி.சி. முதல் சுற்று ஆட்டங்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை. காலிறுதி, அரையிறுதி சுற்று ஆட்டங்களில் எந்த அணிகள் எந்த ஆடுகளத்தில் அல்லது எந்த நாளில் விளையாடும் என்பதைப் பிரிவு ‘ஏ’ அணிகளுக்குச் சாதகமாக முன்கூட்டியே கணிக்கும் வகையிலும், பிரிவு ‘பி’ அணிகளுக்கு முன்கூட்டியே யூகிக்க முடியாத அளவிலும் வடிவமைத்து இருப்பது தான் குழப்பத்திற்குக் காரணம்.
காலிறுதி சுற்று: 

வழக்கமாக முதல் சுற்றில் எந்தெந்த இடங்களை அணிகள் பிடிக்கிறதோ அதன் அடிப்படையில் அடுத்தச் சுற்றுப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் இந்தமுறை போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிவு ‘ஏ’ வில் தரவரிசையில் முன்னனியில் இருக்கும் இங்கிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய அணிகளுக்குக் காலிறுதி சுற்றுக்கான ஆடுகளத்தையும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானிக்கின்ற வகையில் காலிறுதி சுற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு அணிகளும் காலிறுதிக்கு தகுதிபெறும் பட்சத்தில் அந்நாட்டு ரசிகர்கள் போட்டியை காண முன்பதிவு செய்ய ஏதுவாகவும், ஆஸி மற்றும் நியூசி அணிகளுக்கு அதன் சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறைப்படி மார்ச் 18 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் இலங்கையும், மார்ச் 19 ஆம் தேதி மெல்போர்னில் இரண்டாவது காலிறுதியில் இங்கிலாந்தும், 2௦ ஆம் தேதி அடிலைடில் மூன்றாவது காலிறுதியில் ஆஸ்திரேலியாவும், 21 ஆம் தேதி வெலிங்டனில் நான்காவது காலிறுதியில் நியூசிலாந்தும் விளையாடும்.
முதல் சுற்றில் முதல் நான்கு இடங்களுக்குள் எந்த இடத்தை இந்த அணிகள் பெற்றாலும் மேற்கண்ட தேதியிலும், ஆடுகளத்திலும் மாற்றம் இருக்காது.
ஒருவேளை இந்த அணிகளில் எதாவது ஓர் அணி காலிறுதிக்கு தகுதி பெறவில்லை எனில், அதற்குப் பதில் தகுதி பெறும் அணி அந்த இடத்தில் விளையாடும். உதாரணமாக, இலங்கைக்குப் பதில் பங்களாதேஷ் தகுதி பெற்றால், அந்த அணி 18 ஆம் தேதி சிட்னியில் விளையாடும்.
துரதிஷ்டவசமாக இந்த நான்கு அணிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறவில்லையெனில், தகுதி பெறும் புதிய அணிகளின் முதல்சுற்று நிலையைப் பொறுத்துக் காலிறுதியில் முதலில் விளையாட அனுமதி தரப்படும். உதாரணமாக ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் முறையே முதல் நான்கு இடங்களைப் பிடித்துக் காலிறுதிக்கு தகுதி பெற்றால், ஏற்கனவே குறிப்பிட்டது போல், இங்கிலாந்து 19 ஆம் தேதியும், ஆஸ்த்திரேலியா 2௦ ஆம் தேதியும் விளையாடும். 18 ஆம் தேதி போட்டி முதல் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பங்களாதேஷ் அணிக்கும், 21 ஆம் தேதி போட்டி முதல் சுற்றில் நான்காவது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்திற்கும் வழங்கப்படும்.
பிரிவு ‘ஏ’ வில் எந்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன என்பது தெரிந்த பின்பு தான், பிரிவு ‘பி’ அணிகள் எந்தத் தேதியில் காலிறுதி போட்டியில் விளையாடும் என்பது தெரியவரும். ஒருவேளை பிரிவு ‘பி’ யில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றால், அது பிரிவு ‘ஏ’ வில் நான்காவது இடம் பிடிக்கும் அணியுடன் விளையாட வேண்டும். பிரிவு ‘ஏ’ வில் நான்காவது இடம் யார் என்பது தெரியும் வரை இந்தியாவிற்குக் காலிறுதி எங்கே விளையாட போகிறோம் என்பது புரியாத புதிர் தான்.
அதேபோல் பிரிவு ‘பி’ யில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணி, பிரிவு ‘ஏ’ வில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணியுடனும், பிரிவு ‘பி’ யில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணி, பிரிவு ‘ஏ’ வில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடனும், பிரிவு ‘பி’ யில் நான்காவது இடம் பிடிக்கும் அணி, பிரிவு ‘ஏ’ வில் முதல் இடம் பிடிக்கும் அணியுடனும் காலிறுதியில் விளையாடும்.
ஏ1 Vs பி4
ஏ2
Vs பி3
ஏ3 
Vs பி2
ஏ4 
Vs பி1
அரையிறுதி சுற்று:
காலிறுதி சுற்று அளவுக்கு அரையிறுதியில் பெரிய குழப்பம் இல்லையென்றாலும் கூட, இதிலும் போட்டியை நடத்தும் ஆஸி, நியூசி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
முதல் அரையிறுதி போட்டி மார்ச் 24 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ஒருவேளை நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இந்தப் போட்டியில் விளையாடும். இரண்டாவது அரையிறுதி மார்ச் 26 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும். ஆஸி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இந்தப் போட்டியில் விளையாடும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், முதல் சுற்றின் முடிவில் இந்த இரு அணிகளில் யார் முன்னிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சொந்த மண்ணில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். முதல் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தையோ அல்லது இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தையோ பிடித்துக் காலிறுதியிலும் வெற்றி பெற்றால் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா., நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை எனில், மார்ச் 21 ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறும் நான்காவது காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, மார்ச் 26 ஆம் தேதி சிட்னி அரையிறுதியில் விளையாடும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல், ஏ1, பி4 இடையேயான காலிறுதியில் வெற்றி பெறும் அணியும் ஏ3, பி2 இடையேயான காலிறுதியில் வெற்றி பெறும் அணியும் ஒரு அரையிறுதியில் சந்திக்கும். ஏ2, பி3 இடையேயான காலிறுதியில் வெற்றி பெறும் அணியும் ஏ4, பி1 இடையேயான காலிறுதியில் வெற்றி பெறும் அணியும் மற்றொரு அரையிறுதியில் சந்திக்கும்.
(ஏ1 Vs பி4) க்ஷி (ஏ3 Vs பி2)
(ஏ2Vs பி3) க்ஷி (ஏ4 Vs பி1)
இறுதிப் போட்டி எந்தக் குழப்பமும் இல்லாமல் மார்ச் 29 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது. 


No comments:

Post a Comment