சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Feb 2015

உங்கள் அன்பு, ஆதரவுடன் நான் நலமாகவே உள்ளேன்: நடிகை மனோரமா

உங்கள் அன்பும், ஆதரவுடன் நான் நலமாகவே உள்ளேன் என்று நடிகை மனோரமா கூறினார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை மனோரமா. ‘ஆச்சி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மனோரமா உடல்நலம் குறித்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வதந்தி பரவியது. இதில், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அவரது மகன் பூபதிக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது, மனோரமா உடல்நலத்துடன் இருப்பதாக கூறிய பின்னரே, இந்த தகவல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது.

இந்த வதந்தி குறித்து நடிகை மனோரமா கூறும்போது, ''எனக்கு உடல் நலக்குறைவு எதுவுமில்லை. உங்கள் அன்பும், ஆதரவுடன் நான் மிகவும் நலமாகவே இருக்கிறேன். எனது உடல்நலனில் அக்கறை காட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது.

நான் இறந்து விட்டதாக பரவிய வதந்தியை ஒரு திருஷ்டி கழிப்பாகவே எடுத்துக்கொள்கிறேன். என் ஆசை, நான் நடித்து கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும் என்று கடவுளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நடிப்புதான் என் உயிர்மூச்சு. ரசிகர்களின் கைதட்டல் எங்களை வாழவைக்கும் டானிக் போன்றது. அது எனக்கு முழுமையாக கிடைத்தது. எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டினேன் என ரசிகர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.No comments:

Post a Comment