சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Feb 2015

வைரல் ஃபீவர்

ஒரு வழியாக சாதனை முடிவுக்கு வந்தது. 20 வருடங்கள் ஓடிய ’தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ இந்தித் திரைப்படம் 20-ம் தேதி காலை காட்சியுடன் தனது சாதனையை முடித்துக்கொண்டது. மொத்தம் 1,009 வாரங்கள். ரொமான்டிக் ஜோடிகளான ஷாரூக்கானும் கஜோலும் இணைந்து நடித்த இந்த மெகாஹிட் திரைப்படம் இந்தி சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர். 20 வருடங்களாக ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை 1,009 வாரங்கள் கழித்து படத்தை எடுத்துவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். சமீபத்தில் 1,000 வாரங்களைத் தாண்டி ஓடிய படம் என்ற மிகப்பெரிய சாதனையைப் படைத்ததற்காக விருந்து ஒன்றை வைத்திருந்தார் ஷாரூக்கான். இந்த நிலையில் திடீரென்று படத்தை தூக்கப்போவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவிக்க, அதிர்ச்சியான ஷாரூக் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்த்தனர். ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களிலும் படத்தை சிலாகித்தும், படம் பார்த்த அனுபவங்களையும் பலர் பகிர கடந்த வாரம் முழுவதும் வைரலில் இருந்தது ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ ம்ம்ம்... தமிழ் சினிமாவில் இப்போ 3 நாட்கள் ஓடினாலே வெற்றி விழாவாம்!


லகக்கோப்பை கிரிக்கெட்தான் இந்த வார டாப் வைரல். ‘நாங்க திரும்பத் தர மாட்டோம்’ என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் வைரலில் இருக்க, நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்குல்லம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய போட்டியில் சவுத்தீயின் அபார பந்துவீச்சில் 33 ஓவரில் 123 ரன்களுக்கு இங்கிலாந்து சுருள, பின்னர் பேட் பிடித்த நியூசிலாந்து 12.2 ஓவரில் 123 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் 25 பந்தில் 8 பவுண்டரி 7 சிக்ஸர் என 77 ரன்கள் விளாசினார். மொத்தப் போட்டியும் 45 ஓவரிலேயே முடிந்தது. மிக மிக மோசமான தோல்வியைப் பெற்ற இங்கிலாந்தை வறுத்து தள்ளினர் நெட்டிசன்ஸ். மெக்குல்லம் தாண்டவத்தை ஆ... ஆசம் என புகழ்ந்து தள்ளினர். இங்கிலாந்துக்கே இந்த நிலைமைனா இந்தியா என்னாகுமோ?

ஃபேஷன் டிசைனர், பாடகி, நடிகை என பன்முகத் திறமைகொண்ட பாப் பாடகி ரிஹான்னாவின் பிறந்தநாள் உலக அளவில் வைரலானது. செக்ஸியான குரலில் வளைந்து நெளிந்து குழைந்து இவர் பாடும் ஆல்பங்கள் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் ‘ஏ’ ஹிட். வெள்ளை தேகம், ஹிட்ஹாட் ரசிகைகள் என ஜஸ்டின் பெய்பர் ஏ கிளாஸ் ஹிட் என்றால், கருப்பு நிறம், அதிக டவுன்லோடு என ரிஹான்னா தரை டிக்கெட் ஹிட். கடந்த வாரம் 27-வது பிறந்தநாளை ஆஃப்லைனில் அமைதியாக ரிஹான்னா கொண்டாட, ஆன்லைனில் நெட் ஹிட் அடித்து தாரை தப்பட்டை கிழிய வைரலாக்கினார்கள் ரிஹான்னா ரசிகக் கண்மணிகள். தல-தளபதி ரசிகர்கள் கவனத்துக்கு!

சுடர்க்கொடி என்ற தமிழ்ப் பெண்மணி ஒருவர் #தமிழ் வாழ்க என்ற ஹாஷ்டேக்கை முன்னிலைப் படுத்தி ட்வீட் தட்ட, ஐ ‘தமிழ்’ ஐ யம் ப்ரவுட் டு பீ ‘தமிழன்’ என்ற ரீதியில் ஆங்கிலமும், தமிழும் கலந்து பலர் தமிழ் வாழ்க ஸ்டேட்டஸ் போட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் கொண்டு வந்தனர். அதிரடியாக இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்தது #தமிழ்வாழ்க ஹாஷ்டேக். தி.மு.க தலைவர் கருணாநிதி  தன் பாணியில்  ‘உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பது தான் இந்த மண்ணுக்கே சொந்தமான பண்பாடு #தமிழ்வாழ்க’ என ட்ரெண்ட் பிடித்து ஸ்டேட்டஸ் அடிக்க தமிழ் வாழ்க எகிடுதகிடு ஹிட்டானது!



No comments:

Post a Comment