சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2015

மாஷா அண்ட் தி பியர்: குழந்தைகளின் குதூகல உலகம்!

குழந்தைகளுக்கான பெரும்பாலான கார்ட்டூன் சீரியல்கள், வன்முறை நிரம்பியதாகவோ, வயதுக்கு மீறிய விஷயங்களை சொல்வதாகவோ இருக்கிறது. இவற்றுக்கு முற்றிலும் மாறாக, குழந்தைகளுக்கே குழந்தைகளுக்கானதாக இருக்கிறது, ரஷ்யாவில் ஒளிபரப்பாகும் ‘மாஷா அண்ட் தி பியர்’ கார்ட்டூன் சீரியல்.

அங்கு இது செம செம ஹிட் ஆக, உலகம் முழுக்க உள்ள குழந்தைகளிடம் எடுத்துச் செல்லும் தெம்பு கிடைத்தது, அதன் தயாரிப்பு நிறுவனத்திற்கு. இப்போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் வந்துவிட்டார்கள்.

 ‘மாஷா அண்ட் தி பியர்’! குறி வைத்ததென்னவோ குழந்தைகள் என்றாலும், இப்போது பல அடல்ட்களும்  மாஷாவுக்கும் அந்தக் கரடிக்கும் அடிமை. கண்ணைக் கவரும் காடு, அதில் அட்டகாசமான மர வீடு. அங்கே தான் வாழ்கிறது சர்க்கஸில் வேலை பார்த்து ரிட்டையர் ஆன கரடி. சமைப்பது, மீன் பிடிப்பது, தேனீக்கள் வளர்த்து தேன் எடுப்பது, புத்தகம் படிப்பது என தன் உலகத்தை ரசனையாக்கிக் கொள்கிறது இந்தக் கரடி.
உடைக்கு மேட்சிங்காக ஷூ, ஸ்கார்ஃப், முட்டைக் கண்கள், பளீர் சிரிப்பு என்று அள்ளிக் கொஞ்சத் தோன்றும் சுட்டிப் பெண் மாஷா. கரடி வசிக்கும் காட்டிலிருந்து தள்ளி, ஒரு தனி வீட்டில் தன் பன்றி, ஆடு மற்றும் நாயோடு வசிப்பவள். மாஷாவுக்கும், கரடிக்கும் இருக்கும் சிநேகம் அவளால் கரடி படும் பாடு... இவைதான் கார்ட்டூனின் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் எபிஸோடுகள்.

தவிர, கரடியின் கேர்ள் ஃப்ரெண்ட் கரடி, இரண்டு ஓநாய்கள், புலி, முள்ளம்பன்றி, முயல் என்று மொத்தம் 14 கேரக்டர்கள்தான் இந்தக் கார்ட்டூனில். ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கின்றன.
குழந்தைகளின் உலகை சந்தோஷமாக்குகிற, அவர்களுக்கு தேவையற்ற வார்த்தைகளையோ, விஷயங் களையோ கற்றுத் தராத இந்த கார்ட்டூனை, உங்கள் வீட்டுக் குட்டீஸ்களை தாராளமாக பார்க்க அனுமதிக்கலாம்.

அஃபீஷியல் லிங்க்: http://mashabear.com/ .  மேலும் இந்த வலைதளத்தில், மாஷாவின் கார்ட்டூன் கேரக்டர்களுக்கு உங்கள் குழந்தைகளே வண்ணம் தீட்டி மகிழும் வசதியும் உள்ளது!

மாஷா, கரடி மற்றும் உங்கள் வீட்டு சுட்டீஸ்!


No comments:

Post a Comment