சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Feb 2015

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று - சிறப்பு பகிர்வு...

பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் . 1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது . மொழியெல்லாம் ஒரு சிக்கலா என்று இன்றைக்கு பலபேர் கேட்கலாம். ஆனால்,மொழி தேசங்களை கூறுபோடும் வல்லமை படைத்தது என்பதே உண்மை. மதத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் என்கிற தேசத்தை உருவாக்கினார்கள். ஆனால்,மிகக்குறைவான மக்கள் பேசிய உருதுவை மட்டும் தேசிய மொழியாக அறிவித்துவிட்டு வங்க மொழியை புறக்கணித்தார்கள் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள். அதை எதிர்த்து இதே தினத்தில் போராடிய எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பின்னர் மொழிசார்ந்த சிக்கல் தனி வங்கதேசத்துக்கே வழிவகுத்தது.

தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை ;ஒரு இனத்தின் பண்பாடு,கலாசாரம்,வாழ்க்கைமுறை,சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றும்,நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு அன்னை ,மொழிக்கு உண்டு . அன்னை மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமான நிகழ்வு . உலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள் ! ஆங்கில மொழியின் சொற்கள் தன்னுடைய மொழியில் கலக்கக்கூடாது என்று சட்டமியற்றுகிற அளவுக்கு மொழிப்பற்று கொண்ட அவர்களுக்கும் இங்கிலாந்துக்கும் சில நாட்டிகல் மைல் தான் தூரம்.
அன்னை மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அறிவியலில் அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்தினார்கள்.
ஏசு காலத்தில் பேசப்பட்ட அராமிக் மொழி மற்றும் ஹீப்ரு மொழியில் யூதர்களின் இஸ்ரேல் நாட்டால் இரண்டாவது மொழி உயிர்த்திருக்கிறது. ஏசு பேசிய அராமிக் உயிர் பெறவே இல்லை. ஐஸ்லாந்து மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியை சில லட்சம் பேரே பேசுகிறார்கள். தாய்மொழியை பயன்படுத்துவது என்பது பெருமைக்குரிய ஒன்றாக அவர்களால் பார்க்கப்படுகிறது. சூடான் நாட்டில் தூய அன்னை மொழியில் மட்டுமே பேசுவார்கள். ஆங்கில வார்த்தையின் கலப்பைக்கூட பார்க்க முடியாது. ஆங்கிலம் இணைப்பு மொழி என்பதும்,வேலை வாய்ப்பில் அது பங்காற்றுகிறது என்பது ஒருபுறம் இருக்க புரிதலுக்கு அன்னை மொழியே பெருமளவில் உதவும் என்பதும்,சரிசமானமான கல்வி வழங்கப்படும் பொழுது தாய்மொழியே தனித்து மின்னும் என்பதும் உண்மை.

பாரதி காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார் ." உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே ? "என கேள்வி எழுப்ப,"இனிமேல் அவ்வாறே செய்கிறேன் நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் ?" என காந்தி கேட்க பிறர் மனம் நோக எழுதும் பொழுது அன்னை மொழியை உபயோகப்படுத்த கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார் பாரதி .தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப்பாடம் நடத்தினார் பாரதி . அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல ;அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்


No comments:

Post a Comment