தடதடவென ஒரே மாதத்தில் ஒரு பைக்கையே ரெடி பண்ணி அசத்திவிட்டார் அக்ஷய் வர்தே. மும்பையில் ‘வெர்டென்சி’ என்னும் ரீ-மாடல் பைக் நிறுவனத்தின் ஓனர்தான் அக்ஷய்.
‘எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருக்கிறதே’ என்று மூளையில் சின்னதாகப் பொறி தட்டினால்...... கரெக்ட்.... ஷாட்சாத் நடிகை சமீரா ரெட்டியின் கணவரும் இவரே! அக்ஷய்க்கு சமீராவை விட ரொம்பப் பிடித்த விஷயம் பைக்குகள். இதற்காகவே மும்பையில் ‘வெர்டென்சி’ என்னும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். வெர்டென்சியின் ஸ்பெஷல் - ஏற்கெனவே இருக்கும் பைக்குகளை டோட்டலாக ரீ-மாடல் செய்து பைக் மாறாட்டம் செய்து தருவது; அல்லது புதிதாக சந்தையிலேயே இல்லாத பைக்குகளை உருவாக்குவது என்று பைக்குகளை வைத்து அழிச்சாட்டியம் செய்வதில் வல்லவர் அக்ஷய் வர்தே. இப்போது டோலிவுட்டில் நடிகர்/நடிகைகளுக்கு இணையாகப் பேசப்படுகிறது அக்ஷயின் பைக். தெலுங்கில் லேட்டஸ்ட்டாக ரிலீஸான ‘கோபாலா கோபாலா’ படம் வெங்கடேஷும் பவன் கல்யாணும் இணைந்து நடித்தது. படத்தில் இதைவிட இன்னொரு ஸ்பெஷல் - அக்ஷய் வர்தே கைவண்ணத்தில் உருவான வெர்டென்சி பைக். ‘ஒருவேளை ஹார்லி டேவிட்சனா இருக்குமோ?’ ‘இல்ல மச்சான்... ஹயபூஸாடா’ என்று படம் பார்த்த பைக் ரசிகர்களைக் குழப்பியடித்துவிட்டதாம் வெர்டென்சி பைக். செயின் டிரைவ்வுக்குப் பதிலாக பெல்ட் டிரைவ், லாரிக்கு இணையான ட்யூப்லெஸ் டயர்கள், படு
இது பற்றி அக்ஷய் கூறும்போது, ‘‘திடீரென்று வெங்கடேஷ்-பவன் கல்யாண் டீம் என்னிடம் வந்து, ‘சார், அடுத்த மாசம் ஷூட்டிங். படத்துல பைக்கும் ஒரு முக்கிய கேரக்டர். பவனுக்கு ஏத்தமாதிரி ஒரு அசத்தல் பைக் ரெடி பண்ணணும்’ என்றும், பட்ஜெட் பற்றிப் பிரச்னை இல்லை என்றும் சொன்னார்கள்.
வெங்கடேஷ் என்னுடைய நண்பர். அவரை மனதில் வைத்தே இந்த பைக்கை ரெடி பண்ணினேன். நினைத்தபடியே அசத்திவிட்டது என் பைக்!’’ என்று மகிழ்கிறார் அக்ஷய்.
ஏற்கெனவே அக்ஷய்குமார் நடித்த ‘ஓ மை காட்’ படத்திலும், பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் ஒன்றிலும் அக்ஷய் வர்தே, பைக் வண்ணம் நிகழ்த்தி இருக்கிறார். ‘கோபாலா கோபாலா’ படத்திற்கு இவர் தயாரித்திருக்கும் பைக்கின் விலை 15 லட்சம்! அடுத்து, ஜாக்கி ஷெராப்புக்காக 25 லட்சம் செலவில் மனித எலும்புக்கூட்டைப் போலத் தோற்றமளிக்கும் ‘ஸ்கெலிடர்’ என்னும் ஒரு பைக்கைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் அக்ஷய். |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
24 Feb 2015
15 லட்ச ரூபாய் இந்திய பைக்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment