அடுத்ததா ஒரு டாக்டர்தான் முதல்வராகணும்னு ராமதாஸ் தன்னோட ஆசையை சொன்னாலும் சொன்னார். நாங்க மட்டும் குறைச்சலா என மற்ற சமூகங்களும் தங்களோட ஆசைய சொல்றாங்க.....நியாயமாக இருந்தா கேட்டுக்குவோமே.....
ஜோசியக்காரர்:
நம்ம நாட்டுல யார் முதல்வரானாலும் பதவியேற்கிறதுல இருந்து, ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வர்றப்பவும், அடிக்கல் நாட்டுறப்பவும் , ஜோசியக்காரங்களைக் கேட்டு ஆலோசனை பண்றாங்க. பேசாம இம்புட்டு முக்கியத்துவமான ஜோசியர்களை, மாநில முதல்வராக ஆக்கிவிட்டால் ஒவ்வொரு செயலும் வாஸ்துபடி, ஜாதகப்படி, நல்ல நேரப்படி அமர்க்களமா நடக்கும்ல?
பொறியாளர்: நாட்ல இருக்கிற ஏரி, குளம், கண்மாயை விட இன்ஜினீயரிங் கல்லூரிகள்தான் அதிகமா இருக்கு. நாட்ல எந்தப் பக்கம் பார்த்தாலும் கல்வித் தந்தைகளாத்தான் திரியிறாங்க. இப்பேர்ப்பட்ட நாட்ல ஒரு பொறியாளர் முதல்வரானால், அந்த மாணவர்களுக்கும், கல்வித் தந்தைகளுக்கும் பெருமை.
இன்ஜினீயரிங் முடிச்ச கையோட வெளிநாட்டுக்குப் பறக்கிறவங்களை, வலை போட்டு இழுத்து இந்தியா விலேயே உட்கார வைக்கிறதுக்காவது ஒரு பொறியாளர் முதல்வரானால்தான் பாஸ் முடியும். அது மட்டுமா, நம்ம நாட்டோட மொத்த மானத்தையும் வாங்குற சென்னை விமான நிலைய மேற்கூரையை சரிபார்த்து, டிங்கரிங் பண்ணி, பெவிக்கால் ஒட்டி, இனிமேல் விழாம பண்றதுக்கு ஒரு பொறியாளர் முதல்வராகிறதுதான் தீர்வே!
'குடி'மகன்: தமிழ்நாடே டாஸ்மாக் வருமானத்தை வெச்சுதான் இயங்கிட்டு இருக்கு. ஆனா, அங்க போய் குடிக்கிற குடிமக்களுக்கு கிடைக்கிறதெல் லாம் போலிச் சரக்குதான். இந்த கவலையினால் இன்னும் இன்னும் அதிகமா குடிச்சி அரசுக்கு வருமானம் ஈட்டித்தர்றான். அதுமட்டுமில்லாம குடிமக்களின் பிரச்னையை மொடாக்குடி குடிக்கிற ஒருத்தராலதான் புரிஞ்சுக்க முடியும்.
அவராலதான் குடிமக்களை நல்லபடி வழிநடத்தவும், அவர்களுக்கான வசதிகளைச் செய்து தரவும் முடியும். அவர் ஆட்சிக்கு வந்தாதான் நடுத் தெருவில் விழுந்து கிடக்கும் குடிமக்களின் பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நான் சரியாத்தான பேசுறேன் பாஸ்?
அடகுக் கடைக்காரர்: ஒரு டீக்கடைக்காரர் முதல்வராகவும், பிரதமராகவும் வர்றப்போ அடகுக் கடைக்காரர் வரக் கூடாதா? ஊழல் அரசியல்வாதிகளால் உலக அரங்கில் அடகு வைக்கப்பட்ட நம்ம மாநிலத்தோட மானத்தையே மீட்டெடுக்க அடகுக் கடைக்காரர்களால்தான் முடியும். தேவைப்பட்டா, பாத்திரம் பண்டத்தை அடகு வைத்தாவது காவிரியை மீட்டு வரவும் நாங்கள் தயங்க மாட்டோம்!
நகைக் கடைக்காரர்: அடகுக் கடைக்காரரெல்லாம் ஆசைப்படும்போது நகைக் கடைக்காரங்க நாங்க ஆசைப்படுறதுல என்ன தப்பு? நாட்டோட கரன்ஸி மதிப்பே எங்களை வெச்சுதான்.
தினமும் காலையில் பேப்பர்ல ராசிபலன் பாக்கிறதை விட தங்க விலை நிலவரம் பார்க்கும் மக்கள்தான் அதிகம். தங்கத்துக்காக அடிச்சுக்கிற மக் களுக்குத் தேவை ஒரு தங்கமான தலைவர்தான். அந்தத் தங்கமான தலை வர் தங்க நகைக் கடைக்காரராதான் இருக்க முடியும் பாஸ்!
ஜவுளிக்கடை அதிபர்: அரசியல்வாதிகள் என்றாலே அவங்களோட வெள் ளை வேட்டி சட்டைதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அது மட்டு மில்லாம, நம்ம நாட்டோட பாரம்பரியமான சேலை, வேட்டி, சட்டைனு அத்தனையிலும் இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி புதுமையைப் புகுத்தி, பாரம்பரியம் கெட்டுப் போகாமல் கட்டிக் காப்பாத்துறதும் நாங்கதான்! அது மட்டும் இல்லாம, மேலைநாட்டு நாகரீகங்களையும் உடனுக்குடன் இங்கே கொண்டுவர்றதும் நாங்கதான்! அப்படிப்பட்ட பெருமைக்குரிய நாங்க முதல்வராகுறது தான் தமிழ்நாட்டுக்கே பெருமை!
அவ்வ்வ்வ்வ்வ்.....................

No comments:
Post a Comment