சென்ற தேர்தலில் வெறுமனே 28 தொகுதிகளை மட்டுமே வென்ற ஆம் ஆத்மி, இப்போது அசுரப் பெரும்பான்மை பெற்று டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒருவகையில் இதற்கு மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி சொல்ல வேண்டும்.
‘‘ஒருவர் வெறுமனே தர்ணா மட்டும் செய்துகொண்டு ஊடகங்களில் இடம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஊடகங்களில் இடம் பிடிப்பது எளிது. ஆனால் ஆட்சி நடத்துவது கடினம்’’
’’நான் இப்போது டெல்லிவாசியாகவே மாறிவிட்டேன். கிரண்பேடியை ஜெயிக்கவைத்தால், டெல்லியை அவர் பொறுப்பில் விட்டுவிட்டு நிம்மதியாக மற்ற மாநிலங்களைக் கவனிக்க ஆரம்பிப்பேன்.’’
’’கருத்துக்கணிப்புகள் நம்பத்தகுந்தவையல்ல. தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்யானவை.’’
இவை எல்லாம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி உதிர்த்த முத்துகள். உண்மையிலேயே இதைப் பேசும்போது மோடிக்கு சிரிப்பு வந்ததா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் படித்த நமக்கு சிரிப்பு வந்தது. ஒபாமா வரை தன் சுயவிளம்பர மோகத்தை நிரூபித்த மோடி, கெஜ்ரிவாலை விளம்பர மனிதர் என்றதும் கருத்துக்கணிப்புகளை வைத்து ‘மோடி அலை வீசுகிறது‘, ‘ஆப் கி பார் மோடி சர்க்கார்’ என்று பிரசாரம் செய்யவைத்தவர் ‘கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள்’ என்றும் பிரசாரம் செய்தபோது சிரிக்காமல் என்ன செய்ய?
மோடி ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் ஆகிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி என்ற பிம்பத்தால் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதாவது நன்மை நிகழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால் நினைவுக்கு எட்டியவரை அப்படி எதுவும் இல்லை. ‘பொருளாதாரக் கொள்கைகளிலும் வெளியுறவுக் கொள்கைகளிலும் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வித்தியாசம் இல்லை’ என்று நடுநிலை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்த கருத்துகளையே மோடி தன் நடவடிக்கைகளால் நிரூபித்திருக்கிறார். ரயில்வே துறையில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு, ஈழப்பிரச்னையில் தமிழர் விரோதப் போக்கு என்று காங்கிரஸின் பாதையிலேயே காங்கிரஸை விட வேகமாக அடியெடுத்து வைத்தார் மோடி.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் எப்படி உடன்பாடு ஏற்பட்டது என்பதை மோடி மக்களுக்குத் தெரிவிக்கவே இல்லை. ‘அணு விபத்து ஏற்பட்டால் அமெரிக்க நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது’ என்பதுதான் அந்த சமரசம் என்று தகவல்கள் வெளியாகின. ஒருபுறம் ‘மேட் இன் இண்டியா’ என்று போலியாக முழக்கத்தை வைத்துக்கொண்டே இன்னொருபுறம் அமெரிக்காவுக்கு நிபந்தனையில்லாமல் அடிபணிந்தார் மோடி. அதிலும் தனக்கு நெருக்கமான அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலிய சுரங்க ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்ததன் மூலம் நேர்மையும் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளானது. ஒருபுறம் ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் திறந்துகொண்டே மற்றொருபுறம் பெருநிறுவனங்களின் வங்கிக்கணக்குகளில் பணத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகள்தான் மோடியின் செயல்பாடுகள்.
மோடிக்கும் மன்மோகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே மக்கள் கருதத் தொடங்கிவிட்டனர் என்பதற்கான அறிகுறிதான் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த பலத்த அடி. காங்கிரஸைவிட மோடி அரசில் இருக்கும் கூடுதல் ஆபத்து, அதன் மதவாத நடவடிக்கைகள். இந்தி, சமஸ்கிருதம், இந்துத்துவம் ஆகியவற்றை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோடி அரசு திணிக்கத் தவறுவதில்லை. ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று மாற்றியது, கிறிஸ்துமஸ் அன்று ‘ஆளுமை தினம்’ என்று வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடுவது, ‘கோட்சே தேசபக்தர்; கோட்சேவுக்குக் கோயில் கட்டுவோம்’, ‘ராமரை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள்’ என்ற வெறுப்புப் பேச்சுகள் என்று எல்லாவற்றுக்கும் மோடி எந்த எதிர்வினையும் செய்வதில்லை. நாடாளுமன்றத்திலும் பேசுவதில்லை; பத்திரிகையாளர்களையும் சந்திப்பதில்லை. ரேடியோவில் மட்டும் தவறாமல் பேசுகிறார். ரேடியோவில் பேசுவதற்காகவா மக்கள் மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள்?

கடந்த சில நாட்களில் நடந்த இரண்டு சம்பவங்கள்தான் மக்களுக்கு மோடியின் மீதான வெறுப்பை அதிகப்படுத்தியிருக்கக்கூடும். சட்டையில் தன் பெயரைப் பொறித்துக்கொண்டு ஒபாமாவை மோடி சந்தித்தது சுயமோகத்தின் உச்சம். இந்திய அரசியல்வாதிகள் தங்கள் பெயர்களைக் கட்டடங்களுக்குச் சூட்டுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்குச் சூட்டுவதும் புதிது அல்ல. ஆனால் குறைந்தபட்சம் அதனால் சிலராவது பலன் அடைகிறார்கள் என்று ஆறுதல் அடையலாம். ஆனால் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் ஒரு வெளிநாட்டு அதிபர் முன்னிலையில் மோடி தன்னைத் தானே விளம்பரப்படுத்திக்கொண்ட, கோமாளித்தனமான சுயமோக நடவடிக்கை மக்களிடம் அருவெறுப்பை ஊட்டியிருக்கக்கூடும். இரண்டாவது கிரண்பேடி பா.ஜ.க.வில் சேர்ந்தவுடனே அவரை டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம். காங்கிரஸில் இருந்து வந்த நஜ்மா ஹெப்துல்லாவுக்கு அமைச்சர் பதவியைத் தந்தது, கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது என்று தொடரும் பா.ஜ.க.வின் சந்தர்ப்பவாத அரசியல் எரிச்சலூட்டக்கூடியது.
இவையெல்லாம் சேர்ந்துதான் பா.ஜ.க.வின் தோல்வியைத் தீர்மானித்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்து பிரதமர் ஆனவுடனே ‘தான்தான் ஹீரோ; தனக்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள்’ என்ற தவறான எண்ணம் மோடிக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் விதவிதமான காஸ்ட்யூம்களில் மேடைகளில் தோன்றத் தொடங்கிவிட்டார். ஆனால் உண்மையில் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் மோடியை வெற்றிபெற வைத்தார்கள். தேர்தல் அரசியல் ஜனநாயகத்தில் ஓர் அரசியல் கட்சியைத் தோற்கடிக்க, அதற்குச் சமமான இன்னொரு கட்சியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இந்த எதார்த்தம்தான் மோடி வெற்றிக்கான காரணம். காங்கிரஸுக்கு மாற்றாக பா.ஜ.க இல்லையென்றால் மக்கள் ஆம் ஆத்மியையோ அல்லது வேறு கட்சியையோ தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் டெல்லி முடிவுகள் பா.ஜ.க.வுக்குத் தெரிவிக்கும் செய்தி.
இதே செய்திதான் கெஜ்ரிவாலுக்கும். ‘தனக்காகத்தான் மக்கள் ஓட்டுப் போட்டார்கள்’ என்ற மமதையில் மோடியின் பாதையில் கெஜ்ரிவால் நடை போட ஆரம்பித்தால், அவரும் விரைவில் வீழ்ச்சியைத்தான் சந்திப்பார். இதுவரை கெஜ்ரிவால் செய்துவந்தது எல்லாம் விமர்சன அரசியல். இனிதான் அவர் ‘தான் ஒரு சிறந்த நிர்வாகி’ என்பதை நிரூபிக்க வேண்டும். அதிலும் மத்திய அரசு என்ன குடைச்சல்களைக் கொடுக்குமோ தெரியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை நிரூபிப்பதுடன் காங்கிரஸ், பா.ஜ.க அரசியலுக்கு மாற்றுப்பாதைகளையும் முன்வைக்க வேண்டும்.
காங்கிரஸுக்கு டெல்லி சட்டமன்றத் தேர்தலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலும் சொன்ன செய்தி என்னவென்று காங்கிரஸுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸோ எதையும் கற்றுக்கொண்டதற்கான அறிகுறிகளே இல்லை!

No comments:
Post a Comment