செல்ஃபியால் ஏற்படும் பாதிப்பு குறித்து பளார் என அறைந்து காட்டுகிறது இலங்கை, யாழ்ப்பாணத்துக்காரரான தர்ஷணனின் ‘எக்ஸ்-செஃபி’ என்னும் வீடியோ பாடல்! இதுவரை 2 லட்சம் பார்வையாளர்களை கடந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாடலின் படைப்பாளி தர்ஷணன், இதற்கு முன் எடுத்த ‘அஞ்சல’ என்னும் விழிப்பு உணர்வு குறும்படமும் நெட் ஹிட். தர்ஷணனுடன் ஒரு மினி பேட்டி..!
‘‘நான் இப்போது யாழ்ப்பாணம் கல்லூரியில் வணிகப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் பல வகையான பாடல்கள் வரும் போது பாடலுடன் சமூகத்திற்கு ஒரு கருத்தும் பகிரப்பட வேண்டும் என உருவாக்கப்பட்டது தான் இந்தப் பாடல். இணையத்தில் உலவிவரும் பல அந்தரங்க காணொளிகளால் பலர் தமது வாழ்க்கையை இழந்துள்ளனர். குறிப்பாக, பெண்கள். இதைக் கருவாகக் கொண்டே இப்பாடலை உருவாக்கினோம்.
இசை, வரிகள், இயக்கத்துடன், இப்பாடலை பாடியதும் நானே. இப்பாடல் ஒரு சொல்லிசை பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலுக்கான ஒளிப்பதிவினை நிரோஷன் மற்றும் தினேஷ் செய்துள்ளனர். கிருத்திகன், திலக் ஷன், திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 லட்சம் பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது மகிழ்ச்சியான விடயம். இனி வரும் எனது படைப்புகளும் பொழுதுபோக்கோடு சமூக கருத்தையும் உணர்த்துவதாக அமையும்!’’ - சுருக்கமாகப் பேசும் தர்ஷணனுக்கு, தமிழில் நல்லதொரு சமூக கருத்தைப் பேசும் படத்தை இயக்குவதே கனவு!
பாடலைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=zE4a-fLE3-c
No comments:
Post a Comment