சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Feb 2015

வினோத் காம்ப்ளியும்... அந்த அழுகாச்சி காவியமும்...!

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை,கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான அந்த அரையிறுதிப் போட்டியை எந்த இந்திய ரசிகர்களாலும் மறக்க முடியாது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த  அந்த போட்டியை காண, சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

முதலில் பேட் செய்த இலங்கை அணியும் பிரமாதமாக விளையாடி இமாலய ரன்களை குவித்துவிடவில்லை. அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போன ஜெயசூர்யா, கலுவித்ரன ஜோடி ஒன்று மற்றும் பூஜ்யத்தில் அடுத்தடுத்து வீழ்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 252 ரன்கள்தான் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இலங்கை அணியின் துணை கேப்டன் அரவிந்த டி சில்வா 66 ரன்களும், மகானாமா 58 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.  இது ஒன்றும் இமாலய ஸ்கோர் கிடையாது. நிதானமாக விளையாடினாலே இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று மைதானத்தில் குழுமியிருந்த  இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

பலத்த கரகோசத்துக்கிடையே இந்திய அணி பேட் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களில் சித்து 3 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த மஞ்ச்ரேக்கர் சச்சினுக்கு பக்கபலமாக இருந்தார். சச்சின் 63 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இந்திய அணியின் ரன் 98 ஆக இருந்தது.மேலும் 20 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் அசாருதீன்0, மஞ்ரேக்கர் 25 ரன்கள் ஜடேஜா 0 என அவுட்டானது ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.  

வினோத் காம்ப்ளி மட்டும் தட்டுத்தடுமாறி இலங்கை பந்துவீச்சை சமாளித்து விளையாடிக் கொண்டிருந்தார். இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்திருந்தபோது, ஸ்ரீநாத்தும், ஆஷிஷ் கபூரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து மைதானத்திற்குள் வன்முறை வெடித்தது. மைதானத்திற்குள் கற்களையும், பாட்டில்களையும் எடுத்து வீசத் தொடங்கினர். மேலும் இருக்கைகளுக்கு தீ வைக்கவும் முயன்றனர். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் கழித்து போட்டியை தொடங்கினாலும் ரசிகர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போட்டி நடுவர் கிளைவ் லாயிட் போட்டியை ரத்து செய்ய, பிட்சில் இருந்த வினோத் காம்ப்ளி கண்ணீரும் கம்பளையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதுதான் ஹைலைட்டாக அமைந்தது. அடுத்த நாள் அனைத்து செய்திதாள்களிலும் முதல் பக்க படமாகவும் கண்ணீர் காம்ப்ளி இடம் பெற்றிருந்தார்.  வினோத் காம்ப்ளியின் அந்த அழுகாச்சி புகைப்படம் கூட  இந்திய  வீரர்கள் மீது பச்சாதாபத்துக்கு  பதிலாக கோபத்தையே ஏற்படுத்தியது.



No comments:

Post a Comment