சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

அவர் வருவாரா..?- ஏங்கி நிற்கும் பாஜக!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. போதாக்குறைக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமியும் சுயேட்சையாக களத்தில் குதித்துள்ளார்.


திமுக முதலில் வேட்பாளரை அறிவித்ததோடு, பிரசாரத்திலும் முந்திக் கொண்டது. தேர்தல் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பில் முந்திக் கொள்ளும் ஜெயலலிதா, இந்த இடைத்தேர்தலில் பின்னுக்கு சென்று விட்டதோடு, வளர்மதி என்ற பெண் வேட்பாளரை அறிவித்தார். அவர் வேட்பாளரை அறிவித்த அன்றே தலைமைச் செயலகம் வெறிச்சோடியது. முதலமைச்சரை தவிர்த்து அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கி பிரசாரத்தில் குதித்தனர்.
இந்நிலையில்  வாக்காளர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட பல்வேறு கவனிப்புகள் அரங்கேறி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பதாக திமுகவினரும், அதிமுகவினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் அதிமுகவினர் வெளிப்படையாகவே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
 

இதனிடையே  பாஜக கூட்டணியில் யார் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்ற இழுபறி நிலை ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் தடாலடியாக அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கூட்டணி கட்சியான பாமக அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த பாஜக, மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக ஆதரவை நாடியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி இடைத்தேர்லில் போட்டியிடும் என்று தெரிவித்தார். தேமுதிகவும் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறது என்று கூறப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் சுப்பிரமணியம் போட்டியிடுவார் என்று தமிழிசை அறிவித்துவிட்டார்.

இதனால், தேமுதிக தனித்து போட்டியிடும் என்று பேசப்பட்டது. இதனிடையே, மீண்டும் விஜயகாந்த்தை சந்தித்து பேசி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தமிழிசை. இந்நிலையில், "தேமுதிக வேட்பாளர் நிற்பது போன்று கட்சியினர் தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டும்" என்று கூறி அக்கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர்கள் தங்கள் கட்சியினரை பா.. வேட்பாளருக்கு ஆதரவாக களமிறக்கினர்

பாஜக தரப்பில் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களான தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் தீவிர வாக்குவேட்டையில் இறங்கியுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர்கள் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் நாளையோ அல்லது நாளை மறுதினமோ ஸ்ரீரங்கத்தில் தங்கள் பிரசாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, பிரசாரத்திற்கு ஸ்ரீரங்கம் வருமாறு விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுக்க தமிழிசை சென்றதாகவும், அவரை பார்க்க விஜயகாந்த் மறுத்துவிட்டதாகவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் சுப்பிமணியனும் விஜயகாந்த்தை பார்க்க சென்றுள்ளார். அவரையும் பார்க்க விஜயகாந்த் மறுத்துவிட்டதாகவும், அவரது மைத்துனர் சுதீஷை சந்தித்துவிட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைக்கான பிரசாரம் வரும் 11ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில், வரும் 10ஆம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்ய வருவார் என்று திருச்சி தேமுதிக மற்றும் பாஜக நிர்வாகிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு வருவாரா என்பது விஜயகாந்த்துக்கே வெளிச்சம்.

பாஜக அழைப்பு விடுத்தும் பிடிகொடுக்காமல் விஜயகாந்த் நழுவுகிற நிலையில், திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட தேமுதிக நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் அதிமுகவில் நேற்று தங்களை இணைத்துக் கொண்டனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜயகாந்த் பிரசாரத்துக்கு செல்வாரா அல்லது பாஜகவுக்கு  ஏமாற்றத்தை அளிப்பாரா  என்பது வரும் 11ஆம் தேதி தெரிந்துவிடும்.





No comments:

Post a Comment