சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

புல்லட்ப்ரூஃப் முதலீடு... பங்குச் சந்தையில் லாபம் பெற பத்து கட்டளைகள்!

மிழ்நாடு இன்வெஸ்டர் அசோசியேஷன் தனது 25வது பிறந்தநாளை வரும் ஏப்ரலில் கொண்டாட இருக்கிறது. இதனை யொட்டி புல்லட்ப்ரூப் இன்வெஸ்ட்டிங் என்கிற தலைப்பில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

 இந்தக் கூட்டத்தில் யூடிஐ மியூச்சுவல் ஃபண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரி அனூப் பாஸ்கர், ஈக்விட்டி இன்டலிஜென்ஸின் நிறுவனர் பொரிஞ்ச் வெலியத், பரக் பரீக் எஃப்ஏஎஸ்ன் முதன்மை முதலீட்டு அதிகாரி ராஜீவ் தாக்கர், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி ஆனந்த் ராதாகிருஷ்ணன் என முக்கியமானவர்கள் பேசினார்கள்.

மிகச் சிறந்த முதலீட்டாளரும் 'தாட்ஃபுல் இன்வெஸ்டர்புத்தகத்தை எழுதிய ஆசிரியருமான பஸந்த் மஹேஸ்வரி பங்குச் சந்தையில் நிதி சுதந்திரத்துக்கான பயணத்தில் வெற்றி பெறுவதற்கான வழிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசியதிலிருந்து முக்கியக் கருத்துகள் இதோ....
1 லாபம் 3,000 மடங்கு!
''பங்குச் சந்தையின் முதல் பலம் அதன் கணக்கிட முடியாத வளர்ச்சிதான். அதேபோல்தான் அதன் வீழ்ச்சியும். கணக்கிட முடியாத வளர்ச்சி பெறவேண்டுமென்றால், 100 சதவிகித வீழ்ச்சியைக்கூடச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். இதற்கொரு உதாரணம், ஏசியன் பெயின்ட்ஸ். இந்தப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு, இப்போதுவரை சுமார் 3,000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த வளர்ச்சியை வேறு எந்த முதலீட்டிலாவது பெற முடியுமா..?
2ஆட்டிட்யூடை மாத்துங்க!
லாபத்தைப் பெறுவது சொத்து உருவாக்குவதல்ல. சொத்து உருவாக்குதல் என்பது ஒருமுறை மட்டும் முதலீடு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு நம் வாழ்க்கையை நடத்திக் கொள்வதுதான். இந்தச் சொத்து உருவாக்கத்தில் இத்தனை சதவிகிதம் சம்பாதித்தால் போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்வதல்ல. சந்தையைவிட எத்தனை மடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்பதுதான் சொத்து உருவாக்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இன்ட்ரா டே டிரேடிங்கில் ஒருநாளைக்கு நஷ்டமடைவதில் தொடங்கி 15,000 ரூபாய் வரை கூட லாபமாகப் பெறலாம். அதற்கும் கூடுதலாக லாபம் பெறுவது எல்லாம் ஓர் அதிர்ஷ்டம்தான். இந்த இன்ட்ரா டே டிரேடிங் நானும் பங்குச் சந்தையில் இருக்கிறேன் என்கிற தோற்றத்தை உருவாக்குமே ஒழிய, சொத்துக்களை அல்ல. எனவே, சொத்து உருவாக்கத்துக்கு இன்ட்ரா டே டிரேடிங் சரிப்பட்டு வராது.
சந்தையில் நாம் வர்த்தகம் செய்யத் தொடங்கும்போது எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. காரணம், யாரும் சந்தையில் உள்ள அனைத்தையும் அறிந்தவராக இருக்க முடியாது. சந்தையின் ஏற்றங்களில் சந்தோஷப்படும் நீங்கள், அதன் இறக்கங்களினால் ஏற்படும் நஷ்டத்தையும் எதிர்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்.
3முதலீடு ஹாபி அல்ல!
முதலீடு செய்வதை ஒரு ஹாபியாகச் செய்யாதீர்கள். ஹாபி என்பது நீங்கள் ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கு அல்லது ஓய்வாக இருக்கும் போது செய்வது. உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகும் ஒரு முதலீட்டை ஹாபி என்று சொல்லாதீர்கள். ஹாபியாக நீங்கள் செய்துவந்தால், இனி அதைத் தவிர்த்துவிடுங்கள்.
4 நஷ்டக் கணக்கில் வைக்காதீர்கள்!
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை நஷ்டக் கணக்கில் வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் முதலீடு செய்யும்போதே அதை நஷ்டம் என்று கணக்கிட்டால், அதில் நிச்சயம் உங்கள் முழுக் கவனமும் இருக்காது. அதனாலேயே  உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் இழப்பீர்கள்.
எனக்கு 10%, 20% வருமானம் வேண்டும் என்று கணக்கிடுவதை மாற்றி 10 மடங்கு, 20 மடங்கு வருமானம் வேண்டும் என்று பெரிதாக நினையுங்கள். அதற்குப் பொறுமையும் மிக, மிக அவசியம்.
5தெரிந்துகொண்டு செயல்படுங்கள்!
எல்லா நுணுக்கமும் எல்லா நேரத்திலும் செயல்படலாம், செயல்படாமலும் போகலாம். எனவே, கற்றுக் கொள்ளுங்கள். முதலீட்டில்  எது உங்களுக்கு சரிபட்டுவரும் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்துங்கள்.  சரிபட்டு வராதவைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். பங்குச் சந்தையில் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள இது மிகவும் அவசியம்.
6தங்கத்தை நம்பாதீர்கள்!
சொத்துக்களை உருவாக்க தங்கம் மற்றும் எஃப்டிகளை நம்பாதீர்கள். அதெல்லாம் சொத்துகளை உருவாக்கியபின் ஓய்வுக்காலத்தில் செய்ய வேண்டிய முதலீடுகள்.

7அளவுகோலைப் பாருங்கள்!
ஒரு பங்கின் முதலீடு செய்யும்முன் இந்த அளவுகோல்களின்படி இருக்கிறதா என்று பாருங்கள்
நல்ல நிர்வாகம், நல்ல தொழில் - விப்ரோ
கெட்ட நிர்வாகம், நல்ல தொழில் -  யுனைடெட் பிரீவரீஸ்.
நல்ல நிர்வாகம், கெட்ட தொழில் -  டாடா ஸ்டீல்
கெட்ட நிர்வாகம், கெட்ட தொழில் -  கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்
8பாதுகாப்பு முதலில்; லாபம் பிறகு..!

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது ராணுவ வீரார்கள் எதிரிகளைத் தாக்குவது போலத்தான். முதலில் வீரர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டுதான் தாக்குதலுக்கு முற்படுவார்கள். அதுபோலத்தான் முதலீடும். முதலில் உங்கள் முதலீட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதன்பின் அதிக லாபத்தை அடைய முதலீடு செய்யலாம். அதேபோல், சந்தையில் அதிக வருமானத்தைப் பெறவும், நஷ்டத்தைத் தவிர்க்கவும் எந்தச் சூத்திரமும் கிடையாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய தொலைத்தொடர்புத் துறையின் அபரிமித வளர்ச்சியால் பங்குச் சந்தையில் ஒரு தலைமுறை என்பது மூன்று வருடமாகச் சுருங்கியுள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீடாக 5  - 7 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது இரண்டு, மூன்று தலைமுறையைக் கடந்து நிற்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்படித் தரமான பங்குகள் நாம் எதிர்பார்க்கும் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் கிடைக்காது. சற்று அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருக்கும். சொத்துக்களை உருவாக்க சற்று அதிக விலை கொடுத்துதான் முதலீடு செய்யுங்களேன்.
ஒரு நிறுவனம் வருடத்துக்கு 26% வளர்ச்சி அடைகிறது என்றால், 10 வருடத்தில் அந்த நிறுவனம் 10 மடங்கு வளரும். அதேபோல் இந்தியாவிலேயே வெறும் 15% நிறுவனங்களின் பங்குகள் மட்டும்தான் நீண்ட கால முதலீட்டுக்குத் தகுந்த பங்குகள். உங்களால் எப்போது தூங்க முடியவில்லையோ, அப்போது நீங்கள் வாங்கிய பங்குகளை விற்றுவிடலாம். அந்தப் பங்கு லாபத்திலும் இருக்கலாம், நஷ்டத்திலும் இருக்கலாம்.

9    நிறுவனங்களைப் பற்றி அறியுங்கள்!
நீங்கள் வாங்குகிற நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அதன் விற்பனை, வருவாய் மற்றும் லாபம் எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர்ந்து அதிகரித்திருந்தால், தானாகவே அந்த நிறுவனத்தின் பங்கின் விலையும் அதிகரிக்கும்.
செக்டார் லீடர்களின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யுங்கள். அவர்கள்தான் அந்தக் காலத்தின் ட்ரெண்டாக இருப்பார்கள். நம்மில் பலர், இருக்கும் ட்ரெண்டை விட்டுவிட்டு வரப்போகும் ட்ரெண்டை கணிக்கத் தொடங்குகிறோம். அதேபோல், செக்டார் லீடராக இருக்கும் நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் குறையத் தொடங்கினாலோ அல்லது தேக்கமடையத் தொடங்கினாலோ அந்த ட்ரெண்டின் தாக்கம் குறையத் தொடங்கி, வேறொரு ட்ரெண்ட் உருவாகத் தொடங்குகிறது என்று அர்த்தம்.
10 கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்!
உங்கள் போர்ட்ஃபோலியோவில் 6  - 8 பங்குகளை வாங்கி அதைச் சரியாக நிர்வகிப்பதே பெரிய விஷயம். நீங்கள் 40 நிறுவனங்களின் பங்குகளை வாங்கியிருந்தால், உங்கள் வீட்டில் 40 குழந்தை இருப்பது போலத்தான். அந்த 40 குழந்தையில் எந்தக் குழந்தைக்கு என்ன கொடுத்தோம் என்கிற குழப்பம்தான் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளுக்கும்.
கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஸ்டீல், நிலக்கரி போன்ற அரசு தலையிடும் துறைகளில் முதலீடு செய்யாதீர்கள். அரசின் ஆணை எப்போது, எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாததால், அவை சொத்து உருவாக்க பயன் படாது. எனவே, அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.''    





No comments:

Post a Comment