அம்பாசிடர் கார் தயாரிப்பை நிறுத்திட்டாங்க. ஆனா நிக்காம ஓடுகிற அம்பாசிடர்ஸ் நம்ம தமிழ் ஸ்டார்ஸ்தானே. பிராண்ட் அம்பாசிடர்ஸை பத்திச் சொல்றேன் பாஸ். அவங்க ஓட்டுற விளம்பரங்களுக்கு நடுவுலதானே நாம புரோகிராம்ஸ் பார்க்க முடியும். இன்னும் எப்படியெல்லாம் இதை செம்மைப்படுத்தலாம்னு கொஞ்சம் யோசனைகள்.
ட்ராவல் சைட்ஸ் பத்தி நெறைய விளம்பரங்கள் வருது. குறிப்பா பஸ் புக்கிங் பற்றிய விளம்பரங்கள். அதுல யார் யாரோ வர்றாங்க. பஸ் ஏறுவதில் எக்ஸ்பெர்ட்டான விஷாலைப் போட்டு எடுங்கப்பூ... சும்மா பிச்சிக்கும், உங்க சைட்டே ஜாம் ஆகிடும். அவ்ளோ பேரு க்யூ கட்டுவாங்க. ரெட் பஸ்ஸுக்கு இனி க்ரீன் சிக்னல்தான்!
கிஸ்கால் கம்பிக்கு நமீதா வர்றது பழசு. பிரமாண்ட நமீயை அருண் எக்ஸ்செல்லோ அபார்ட்மென்ட்ஸுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடலாம். இப்போதைக்கு கிஸ் டிரெண்டுல இருக்கிற நம்ம லெட்சுமி மேனனை வெச்சி ‘கிஸ்’ கால் விளம்பரம் எடுத்தா சரியா இருக்கும். நம்பிக் கட்டலாம்!
எல்லாத்தையும் வித்திடுங்கனு தனுஷ் சொல்றாப்ல. சிம்பு சார் நீங்க ஏன், வாங்குங்க வாங்குங்கனு சொல்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுக்கு தூதரா இருக்கக் கூடாது? அவரு விக்கச் சொன்னா, நீங்க வாங்கச் சொல்லுங்க. அப்போதானே சேர்ந்து நின்னு செல்ஃபி தட்ற உங்க ரெண்டு பேரோட நட்புக்கு மரியாதை!
பால், தயிர், சீஸ் எவ்ளோ விளம்பரங்கள் வருது? நம்ம பசுநேசன் ராமராஜன்தானே பாஸ் முதல் சாய்ஸ். வேற யாரையாவது யோசிக்க முடியுமா? மறந்துட்டாங்களே... செண்பகமே செண்பகமே!
பிரியாணி கடை அட்வர்டைஸ் மென்ட்டுக்கு பெஸ்ட் சாய்ஸ் யாரு? தின்னே, தட்டில் எலும்பு மலை குவிக்கிற நம்ம மஞ்சப்பை ராஜ்கிரண்தானே. அவரை விட்டுப்போட்டு, என்றா இது? நாட்டாமை. தீர்ப்பை இல்ல, நாட்டாமையையே மாத்தச் சொல்லு!
‘என்னமா இப்படி பண்றீங்களேமா,’ ‘என்னமா இப்படி இருக்கீங்களேமா’ - இப்படி நம்ம லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வெச்சி 15 நாளைக்கு டீசர் போட்டு, இப்படி பண்ணுங்கனு சிக்கன் மசாலா விளம்பரம் போட்டா வைரலாக வாய்ப்பிருக்கே!
உடல் எடையைக் குறைக்க, கூட்டனு ஒரே கம்பெனி ரெண்டு பானங்களை விக்கிறாங்க. அப்போ யார் இதுக்கு சரியா வருவா? அவரேதான், சீயான். அப்புறம் ஆர்பிட்ரேக் மாதிரியான எக்ஸர்சைஸ் விளம்பரத்துக்கும் அவரே சரி... அதுக்கும் மேல!
நளாஸ் ஆப்பக் கடையெல்லாம் இன்னும் நல்லா வரணும்னா, நம்ம பரோட்டா சூரியை புக் பண்ணணும்!
இவ்ளோ ஐடியா கொடுத்து இருக்கோமே, ஒரு கிஃப்ட் கூப்பனாவது கொடுப்பாய்ங்களா?
No comments:
Post a Comment