சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Feb 2015

ஒரு குழந்தை, ஒரு அப்பா, இரண்டு அம்மா!

ரு ஆண், இரண்டு பெண்கள் என மூன்று பெற்றோருக்கு ஒரு குழந்தையைப் பிறக்க வைக்கும் மரபணு முயற்சிக்கு, உலகிலேயே முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது இங்கிலாந்து நாடாளுமன்றம். மரபியல் விஞ்ஞானிகள் இதற்கு நன்றி தெரிவித்து வரவேற்க, மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ஒரு ஆண், இரண்டு பெண்கள், ஒரு குழந்தை... எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம். பெண்ணின் கரு முட்டையில் ஒரு நியூக்ளியஸும், பல மைட்டோகாண்ட்ரியாக்களும் இருக்கும். செல்லுக்கு சக்தி தரும் இந்த மைட்டோகாண்ரியாக்களில் டிஎன்ஏ கூறுகள் இருக்கும். அந்த மைட்டோகாண்ட்ரியாவில் பாதிப்பு ஏற்படும்போது, அது மரபணுக் குறைபாடுடைய குழந்தை பிறப்பிற்கு காரணமாகும். இதைத் தவிர்க்கும் வழியாக மரபியல் விஞ்ஞானிகள் கண்டறிந்த தீர்வுதான், ‘மைக்டோகாண்ட்ரியா டோனர்!’.


அதாவது, மைட்டோகாண்ட்ரியாக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருந்து அவற்றை நீக்கிவிட்டு, மற்றொரு டோனர் பெண்ணின் கருமுட்டையில் உள்ள ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாக்கள் செலுத்தப்படும். இந்த செயல்முறை, விந்தணுவுடன் அந்த முட்டை கருவுரும் முன்னோ, கருவுற்ற பின்னோ மேற்கொள்ளப்படும். இந்த வகையில்தான் அந்தக் குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் ஆகிறார்கள்.

இதில், அந்தக் குழந்தை 99.8 சதவீதம் தன் பெற்றோரின் மரபையும், 0.2 சதவீதம் டோனர் பெண்ணின் மரபையும் பெற்றிருக்கும். அறிவியலின் இந்த முயற்சிக்கும், வழக்கம்போல ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தங்களின் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.
‘‘இது இயற்கைக்கு எதிரானது. மதக்கொள்கைக்குப் புறம்பானது’’ என்று ஒரு தரப்பினர் கூற, ‘‘மரபணுக் குறைபட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பெற்றுள்ள குடும்பங்களைக் கேட்டுப்பாருங்கள் அதன் வலி என்ன என்று. அந்த இயற்கைப் பிழையை சரிசெய்யக்கூடிய, ஆரோக்கியமான குழந்தைகளுக்கு வழிவகுக்கும் இந்த மரபியல் முயற்சி பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது’’என்கிறார்கள் பலர்!



No comments:

Post a Comment