சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

பணத்துக்கு மயங்காத முதல்தலைமுறை வாக்காளர்கள்!

"எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று வீடுவீடாக வந்து பணத்தையும், பரிசு பொருளையும் வாரி வாரி கொடுத்தாங்க, ஆனால் அவற்றையெல்லாம் நாங்கள் வாங்கவில்லை. மனசாட்சிபடி வாக்களித்தோம்!" என்று ஸ்ரீரங்கம் முதன்தலைமுறை வாக்காளர்கள் தெரிவித்தனர்.

ஶ்ரீரங்கம் தொகுதியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைத்தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய, வாக்காளர்கள் காலையில் இருந்தே தங்கள் வாக்குகளை வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு கடந்த சில வாரங்களாக ஓட்டுக்கு நோட்டு மழை பொழிந்ததாக கட்சியினர் மீது புகார் எழுந்தது. ஆனாலும்  பிரதான கட்சிகளான அ.தி.மு.க  ஆயிரத்திலிருந்து  5 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு வாரி இறைத்ததாகவும், கூடவே வேட்டி, சேலை, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கியதாகவும், தி.மு.க.வினர் ஓட்டுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தேர்தல் ஆணையம்  பயங்கர கெடுபிடிகளை செய்து வருவதால் அரசியல் கட்சிகள் செய்வதறியாமல் நிற்கிறார்கள். அதேபோல் தேர்தல் ஆணையமும், 'வாக்கு விற்பனைக்கல்ல சிந்திப்பீர்.. செயல்படுவீர்' என விளம்பரம் வேறு செய்து வருகிறது. இப்படியிருக்க பணம் கொடுத்தவர்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என கட்சியினர் சொல்லிவரும் நிலையில், இளம் வாக்காளர்கள் என்ன சொல்கிறார்கள்? என அவர்களிடம் கேட்டோம்.


வாக்குச் சாவடியில் நின்றுகொண்டிருந்த ஶ்ரீரங்கம் ராஜகோரபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வியிடம் பேசினோம்.
"எங்கள் ஏரியாவுலயும் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்க. ஆனால் நான் பணம்  வாங்கிக்கிட்டு அவங்க சொல்கிறவங்களுக்கு ஓட்டுப்போடமாட்டேங்க. என் மனசாட்சிப்படி, மக்களுக்கு நல்லதிட்டங்கள், நல்லது செய்கிற கட்சியுடைய வேட்பாளருக்குத்தான் என்னோட ஓட்டு, எங்கப்பா, அம்மா எல்லாம் இதுக்கு ஓட்டு போடு, அதுக்கு போடுன்னு சொன்னாங்க. ஆனால் அவங்க சொல்படி இதுல கேட்கல. அதுக்காக நான் வருத்தப்படவும் மாட்டேன்" என்றார்.

அடுத்து கீதாபுரத்தை சேர்ந்த தரணிப்பிரியா, "இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்க, நாங்க இவ்வளவு பணம் தருகிறோம்னு வீடுவீடாக வந்து பணத்தையும் பரிசு பொருளையும் வாரி வாரி கொடுத்தாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கல. நமக்கு பிடிச்சவங்களுக்கு ஓட்டுபோடுவதற்கு இவங்க ஏன் பணம்  கொடுக்கணும். மக்களோட வரிப்பணத்தை வசூலித்து அதை நமக்கே கொடுக்கிற கேடுகெட்ட நிலைமை இந்த நாட்டுலதான் நடக்குது.
ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு எனக்கு ஓட்டுன்னு என் மனசாட்சி சொல்லுதோ அவங்களுக்குத்தான் வாக்களிப்பேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது" என்றார்.No comments:

Post a Comment