சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

நம்புங்கள்... பாகிஸ்தானுக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு சாதனையாளர் கங்குலிதான்!



லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 15ஆம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும்  மோதுகின்றன. உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம் காண்பது இது  6வது முறை ஆகும். இதற்கு முன் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

1992 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 216 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 173 ரன்களில் சுருண்டது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு பெங்களுரூவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 287 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சித்துவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

1999ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் சூப்பர் சிக்ஸ் போட்டியிலும் இந்திய அணியே முதலிட் பேட் செய்து 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆட்ட நாயகன் வெங்கடேஷ பிரசாத் ஆவார்.

2003ஆம் ஆண்டு செஞ்சூரியன் நகரில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 273 ரன்கள் இலக்கினை இந்திய அணி எளிதாக எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறை ஆட்ட நாயகன் சச்சின்.

கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு மொகாலியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில்,  இந்தியா பாகிஸ்தான் அணிகள் மீண்டும் சந்தித்தன. இந்த முறை இந்திய அணி 260 ரன்களை  இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 231 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறையும் ஆட்ட நாயகள் விருது சச்சினுக்குதான்...!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் 126 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 72 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு 50 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது. 4 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் உலகக் கோப்பை போட்டியை பொறுத்த வரை, இந்திய அணி 100 சதவீத ரிக்கார்ட் வைத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளுமே தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

இந்த இரு அணிகளுக்குடையேயான மோதலில் இந்திய அணியே அதிகபட்ச ஸ்கோர் குவித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 344 ரன்கள் எடுத்துள்ளது.

குறைந்த பட்சமாக இந்திய அணி 112 ரன்களும், பாகிஸ்தான் அணி 116 ரன்களும் எடுத்துள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 67 இன்னிங்ஸ் ஆடியுள்ள சச்சின் 2,526 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார். இதில் 5 சதமும், 16 அரை சதமும் அடங்கும். பாகிஸ்தான் தரப்பில் இன்சமாம் உல் ஹக் 64 இன்னிங்சில் 2,403 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதமும், 12 அரைசதமும் உள்ளது.

 பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 194 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்திய தரப்பில் விராட் கோலி 183 ரன்கள் எடுத்துள்ளார்.

பந்துவீச்சாளர்களை பொறுத்த வரை, 48 போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் அக்ரம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய வீரர் அனில் கும்ளே 34 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சிறந்த பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் வீரர் அக்யூப் ஜாவித் 37 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்திய தரப்பில் பந்துவீச்சாளர்களுக்கு இந்த புகழ் கிடைக்கவில்லை.  கடந்த 1997ஆம் ஆண்டு டொரான்டோவில் நடந்த போட்டியில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கங்குலிதான் முதலிடத்தில் உள்ளார்.



No comments:

Post a Comment