சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

'நாமே கொடுத்தால் டிப்ஸ்...கட்டாயப்படுத்தி வாங்கினால்?'

கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது டெலிவரி பாய்கள் ரூ.30 முதல் ரூ.50 வரை கட்டாயமாக பணம் வசூலித்து வருவது பற்றி இந்திய ஆயில் நிறுவனங்களுக்கு தொடர் புகார்கள். அதனை அடுத்து, 'டெலிவரி பாய்களுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில் அந்த கியாஸ் ஏஜென்சி மீதும், ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தது.

இவ்வாறு 'டிப்ஸ்' இல்லாமல் டெலிவரி பாய்களிடம் இருந்து கியாஸ் சிலிண்டர்களை வாங்குவது உங்களுக்கு சாத்தியமாகி உள்ளதா... அல்லது கசப்பான அனுபவம்தானா என்று விவாதக் களம் பகுதியில் வாசகர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தோம். அவர்களின் காரசாரமான விவாதத்தில் இருந்து...


murugan69: டிப்ஸ் எல்லாம் இல்லை. சர்வீஸ் சார்ஜ்னு சொல்லியே வாங்குறாங்க. இதுல பொங்கல் காசு, தீபாவளி காசுனு வேற வாங்குறாங்க. டெலிவரி பாய்களிடம் இருந்து டிப்ஸ்' இல்லாமல் சிலிண்டர்களை வாங்குவது சாத்தியமில்லை

Raghupathy: இது வெறும் ஏட்டு சுரைக்காய். பணம் கொடுக்கவில்லை என்றால், அடுத்த முறை சிலிண்டர் வராது. வீட்டில் ஆள் இல்லை என்று பில் கேன்சல் செய்யப்படும்.

Riyo taIN30-க்கு பதில் 20 ரூபா கொடுத்ததற்காக, அடுத்த முறை வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வராமலே பில் கேன்சல் செய்துவிட்டார்கள்.
Raj: அடுத்த முறை டெலிவரி செய்ய தாமதம் செய்துவிடுவார்கள்... அல்லது, எடை குறைவான சிலிண்டர் டெலிவரி செய்வார்கள் என்கிற கவலையே பணம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு ப்ரீபெய்டு முறையே சிறந்தது. ஆன்லைனில் பணம் கட்டியதும் டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆன்லைனில் பணம் கட்டியவர்களுக்கு டெலிவரி செய்பவர்கள் மிகவும் கூச்சத்துடன் எக்ஸ்ட்ரா பணம் எதிர்பார்ப்பார்கள். எனவே, அவர்கள் நம்மை கட்டாயப்படுத்த வாய்ப்பில்லை. ஆனால், தற்போது மொத்த தொகையாக அவர்கள் வசூலித்துவிடுவதால் நாம் இனாமாக வசூலிக்கிறோம் என்று அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. அது தவறு என்றும் உணர்வதும் இல்லை. 

Mannan: சில புறநகர் பகுதிகளில் மழை நேரங்களில் சேற்றில் இறங்கி நடந்து வந்து டெலிவரி செய்யும்போது டிப்ஸ் கொடுப்பது ஒன்றும் பெரிய தவறாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஒரு இடத்தில் வாங்கி பழக்கப்பட்டு அதைப்போல் அனைவரும் அதிகமாகத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பு

radan: டிப்ஸ் தருவது, நாமே விரும்பி கொடுப்பது. அந்த டிப்ஸ் பணத்தை அவர்களே எவ்வளவு என்று முடிவு செய்து கேட்டு வாங்குவதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

V.Ramesh:ஏதோ வெயிலிலும், மழையிலும் வந்து டெலிவரி செய்கிறார்களே என்று, நாமே பரிதாபப்பட்டு ரூ.10 அல்லது ரூ.20 கொடுப்போம். அதை வாங்கிக்கொண்டு அவர்கள் அமைதியாகச் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, 'நீ இவ்வளவுதான் கொடுக்க வேண்டும்' என்று கட்டாயப்படுத்தக் கூடாது. ஒருமுறை, என் வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்த பாய், ரூ.25 கொடுக்க வேண்டும் என்று வீட்டில் இருந்த ஒரு பெண் உறவினரிடம் கட்டாயப்படுத்தினான். அவர் கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கெல்லாம் ரூ.5-க்கு மேல் கொடுக்க மாட்டார்களாம். அதையே அவனிடம் குறிப்பிட்டு வாதத்தில் இறங்கினார்கள். டெலிவரி பாய், பெண்ணென்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி திட்டி இருக்கிறான். அந்த சமயம் நான் வீட்டுக்குள் பிரவேசித்தேன். பெண் உறவினரை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தேன். பிறகு டெலிவரி பாயிடம் பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்று கூறினேன். அவன் கேட்பதாகத் தெரியவில்லை. கடைசியில் என்னிடமே வாதாட முன்வந்தான். எனக்கு வந்ததே கோபம்... கியாஸ் சப்ளை செய்யும் டீலரிடம் புகார் செய்து, அங்குள்ள பொறுப்புள்ள அதிகாரி ஒருவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவரிடம் நடந்ததைக் கூறினேன். அவர் டெலிவரி பாயை நன்றாக கடிந்துகொண்டு புத்தி புகட்டினார். 

காவித் தமிழன்: கொஞ்சம் கம்யூனிஸம் பேசுவோமா? சிலிண்டர் கொண்டு வரும் பசங்களுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பதில் தப்பே இல்லை. வெயிலில், மழையில் வேலை செய்கிறார்கள். தவிர, கடின உழைப்பு. அப்படி அவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது தவறு என்றால், நாம் எங்குமே யாருக்குமே டிப்ஸ் கொடுக்கக் கூடாது. உண்டு கொழுத்த அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். அவர்கள் என்ன பஞ்சம் காரணமாகவா வாங்குகின்றனர்? ஹோட்டலில் குளுகுளு அறையில் வந்து சர்வ் செய்பவருக்கு டிப்ஸ் கொடுக்கிறோம். கடும் வெயிலில், மாடி ஏறி வந்து சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு கொடுப்பதில் தப்பே இல்லை. நகைக் கடைகளில் சேதாரம் என்ற பெயரில் நாம் ஏமாறும் தொகை முன் இந்த டிப்ஸ் எல்லாம் ஜிஜுபி. கொடுங்கப்பா... போகும்போது என்னத்தை வாரிக்கிட்டு போகப்போறோம்?.

vinod: நிச்சயம் சாத்தியமே. நானே அதற்கு சிறந்த உதாரணம். 3 ஆண்டுகளுக்கு முன் வரை கியாஸ் கொடுப்பவருக்கு 5 ரூபாய் கொடுத்து வந்தேன். அவர் ஏதோ ஏழ்மையில் இருப்பதாக என் மனதுக்குள் நான் பெரிய குபேரன் எனும் இறுமாப்பால் அவருக்கு 5 கொடுத்து வந்தேன். நான் வீட்டில் இல்லாதபோது, என் வீட்டில் இருந்தவர்களிடம் 25 ரூபாய்  கொடுத்தால்தான் சிலிண்டர் கொடுப்பேன் என மிரட்டி வாங்கிச் சென்றுவிட்டார். உடனே நான் கியாஸ் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் புகார் கொடுத்தேன். அவர்கள் எனக்கு கால் செய்து விவரம் அறிந்ததொடு, என் வீட்டுக்கு திரும்பி வந்து ரூ.25 கொடுத்துவிட்டு செல்ல வைத்தனர். உடனே கியாஸ் ஏஜென்சி உரிமையாளரும் எனக்கு போன் செய்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியதோடு அல்லாமல் இனி எந்த பணமும் தரவேண்டாம் என உத்தரவாதம் அளித்தார். இன்று வரை பில்லில் இருக்கும் பணம் மட்டுமே நான் தருகிறேன். 5 ருபாய் கூட இருந்தால் (405-க்கு 410 கொடுத்தால்) மீதி 5 ருபாய் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்.



No comments:

Post a Comment