சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

நாட்டாமையை விரட்டும் சண்டக்கோழி

துவரை நடிகர் சங்கத்தில் தனிக்காட்டு ராஜாவாக தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தனர் நாட்டாமை ப்ளஸ்  பரிவாரங்கள். திடீரென்று சண்டக்கோழி நடிகர் முண்டாதட்டி இறங்க ஷாக்காகி சஞ்சலத்தில் தவிக் கிறது நாட்டாமை தரப்பு.  சென்னைக்கு வெளியே அரிதாராம் பூசி அரிச்சந்திரா நாடகங்கள் நடத்திவரும் நாடக நடிகர்கள் இப்படி ஒரு தடாலடி போட்டியை  எதிர்பார்க்கவில்லை. அதைவிட வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து பிரமித்த சண்டக்கோழி உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் ஊருக்கே தங்களை தேடிவந்து உரிமை கொண்டாடியதில் புதுக்கோட்டை, மதுரை, கரூர் நாடக நடிகர்கள் வியப்பில் வியர்த்து விதிர்த்துப் போய் இருக்கிறார்கள்.


வெளியூரில் வசித்துவரும் நாடக நடிகர்கள் வாழ்வில் நடந்து வந்த நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் தவறாது கலந்து கொண்டு அவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருந்து வருபவர் ரத்தக்கண்ணீர் வாரிசு. சினிமா நடிகர்கள் வேண்டுமானால் சண்டக்கோழி தரப்பிடம் சரண்டராகி வாக்குகளை வாரி வழங்கலாம்,  வெளியூர் 'காயாத கானகத்தே...' நாடக நடிகர்களின் வாக்குகள் ரத்தக்கண்ணீர் வாரிசுவின் சட்டை பாக்கெட்டில்.  அதனால் அவருடைய கோட்டையை யாரும் அசைக்க முடியாது என்பது எல்லோரது ஏகோபித்த எண்ணம்.

பொதுவாக வெளியூர் நாடக நடிகர்கள் ஏழைகள், அப்பாவிகள், வெள்ளந்திகள். நடிகர் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் சமயங்களில் சங்கத்தின் செலவில் பஸ்ஸில் அழைத்து வரப்படுவார்கள். ஒருவேளை கல்யாணச் சோறு போடுவார்கள்  அத்தோடு முடிந்தது. அத்திப்பூத்தற்போல் எப்போதாவது ஒருமுறை  தங்கள் சொந்த செலவில் சென்னைக்கு வருவார்கள். கிண்டி ஸ்நாக் பார்க், மியூசியம், மெரினா பீச், எம்.ஜி. ஆர். சாமாதியை வாய்பிளந்து எப்படி ஆச்சர்யமாய் பார்க்கிறார்களோ, அதுபோலவே நடிகர் சங்கத்தில் கட்டப்பட்டு இருந்த சங்கரதாஸ் கலையரங்கத்தையும் வியப்போடு விழிகள்விரிய பார்ப்பார்கள். ஏதோ தங்கள் சொந்த வீடு மாதிரி அரங்கத்தின் இருக்கையை ஆரத்தழுவிக் கொள்வார்கள்.
இப்போது அந்த சங்கரதாஸ் கலையரங்கம் இடிக்கப்பட்டு தரைமட்டமாய் கிடப்பதைப் பார்த்து நாடக நடிகர்கள் பதைபதைத்து கண்சிவந்து கொதிக்கிறார்கள். கட்டடம் இடிக்கப்பட காரணம் நாட்டாமையும், ரத்தக்கண்ணீரார் வாரிசும்தான் என்பதறிந்து திகைப்பில் திக்பிரமை பிடித்து நிற்கிறார்கள். அப்படி கலக்கத்துடன் இருக்கும் கலைஞர்களை நோக்கி சரண்டராகி வருகிறது சண்டக்கோழி தரப்பு. சினிமா நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு ரகசியமாக நடந்து வருகிறது.

'இப்பத்தான் போயிட்டு வந்தேன். அம்மா, நடிகர் சங்கத்தைப்பத்தி விசாரிச்சாங்க' என்று அவ்வப்போது அவிழ்த்துவிட்டு நாட்டாமை எதிர்தரப்பின் பல்ஸை எதிறவைத்து வருகிறார். அந்தக் காலத்தில் 'கந்தன் கருணை' படத்தில்  ஜெ-வுக்கு ஜோடியாக நடித்த மார்க்கண்டேயரை நாட்டாமைக்கு  எதிராக நிற்கவைக்க திட்டமிட்டார்கள். 'தேர்தலில் நிற்க மாட்டேன் மறைமுகமாக உதவி செய்யத் தயார்' என்று மறுத்து விட்டார், மார்க்கண்டேயர்.

இப்போது சண்டக்கோழி தரப்பில் தலைவர் பதவிக்கு மூக்கு பிரசித்தி பெற்ற மூத்த நடிகரை நிறுத்த முடிவுசெய்து இருக்கிறார்கள். நடிகர் சங்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்  தேர்தலில் எந்தெந்த பொறுப்புக்கு யார் நிற்பது என்கிற அறிவிப்பை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள். தேர்தலில் எப்படி ஜெயிப்பது? என்று சென்னையின் பிரதான பகுதியான தி.நகரில் இருக்கும் ஒரு பங்களாவில் தினசரி ரகசிய கூட்டத்தை சண்டக்கோழி தரப்பு நடத்தி வருகிறது. 

No comments:

Post a Comment