சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

நள்ளிரவில் ஓட்டம் பிடித்த நடிகை...

ரு படத்தில் டான்ஸ் நடிகரோடு ஒரு  நடிகை நடித்து விட்டால், அம்புடுதேன்... அப்படியே பெவிக்கால் போட்ட மாதிரி, 'பச்சக்...' என்று பசையாக ஒட்டிக்கொள்வார்.  அந்தளவுக்கு டான்ஸரின் ஃபெர்பாமென்ஸ் பிரமிக்க வைக்கும்.
பிரம்மாண்ட இயக்கம் தனது இரண்டாவது படத்தில் டான்ஸரை நடிகராக்கியது. அப்போது வடநாட்டு உப்மா நடிகைதான் அவருக்கு ஜோடி. அதன்பின் இருவரின் நெருக்கத்தை பார்த்து கோடம்பாக்கமே பெரிதாக பெருமூச்சு விட்டது.  டான்ஸர்  இன்னொரு  பெண் டான்ஸரை திடீரென  திருமணம் செய்துகொள்ள, வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்த உப்மா நடிகை கடும் அப்செட்.  

ஹோட்டல் அறையைவிட்டே இரண்டுநாள் வெளிவரவில்லை. அதன்பின் நாட்டாமை நடிகரோடு உப்மா  நடிகை காட்டிய நெருக்கம் தமிழ் தரணி நன்கறியும்.

திருமணம்தான் முடிந்தது, டான்ஸரின் திருவிளையாடல் தொடர்ந்தது. அடுத்து டான்ஸர் இரண்டு வேஷம் கட்டும் படத்தில் டான்ஸருக்கு ஜோடி கண்ணழகி நடிகை. அப்போதுதான் முதன்முறையாக டான்ஸரை படப்பிடிப்பில் சந்தித்தார். அப்போதே டான்ஸரிடம் நடிகை க்ளீன் போல்டு. ஷூட்டிங் இல்லாத நாட்களிலும், கேமரா இல்லாமல் இருவரும் டூயட் பாடினார்கள். கண்ணழகியின் கண்கள் திசைமாறி சுழல்வதை கண்டு திடுக்கிட்டார்,  தாய்குலமான மாஜி நடிகை.  மகளை வைத்து கட்டவிருந்த கரன்சி மாளிகையை டான்ஸர் சிகரெட் நெருப்பு போட்டு சிதைத்து விடுவாரோ என அஞ்சினார், அம்மா நடிகை.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக டான்ஸர், ப்ளஸ் கண்ணழகி இருவரும் காதலாகி, கசிந்துருகினர். ஒரு கட்டத்தில் கண்ணாலம் கட்டிக்கொள்ளும் ரேஞ்சுக்கு வந்தனர். ஒருநாள் திடீரென நள்ளிரவில் நடிகை வீட்டைவிட்டு அம்மாவுக்கு தெரியாமல்  ஓட்டம் பிடித்தார். டான்ஸருக்கு தெரிந்த பங்களா ஒன்றில் தஞ்சம் புகுந்தார். கண்ணழகியின்  தாய்க்குலம் கதி கலங்கி போனார்.  

முன்னாள் நடிகையாக இருந்தபோது தாய்குலத்துக்கு டான்ஸரின் டாடி தாடி நன்கு பழக்கம். தாய்க்குலத்துக்கு அழுகையால் ஒரு கண்ணும், விடியவிடிய விழித்ததால் மறு கண்ணும் சிவந்து இருந்தது. 


அதிகாலை  பரபரவென கிளம்பி டான்ஸரின் டாடி வீட்டுக்கு காரில் பறந்தார், தாய்குலம். "என் குடும்ப மானமே உங்கள் கையில்தான். ஏகப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தாச்சு, கை நீட்டி காசும் வாங்கியாச்சு. இந்த நேரத்துல உங்க பிள்ளையை கல்யாணம் செய்யப் போறேன்னு சொல்றா, உங்க பையனும் பிடிவாதமா நிக்கிறார்" என்று சந்திரமதிக்கு சற்றும் குறையாமல் அழுது புலம்பினார். 

எல்லோரையும் ஆட்டுவிக்கும் நடனசிகாமணி, மாஜி நடிகையின் மனக்குமுறல் கேட்டு ஆடிப்போனார்.  டான்ஸ் நடிகரை அழைத்து கண்டித்தார்;  கண்ணழகியையும் கூப்பிட்டு டோஸ் விட,  கிளிசரின் போடாமல் அழுதார் நடிகை. "இந்த விஷயம் வெளியில தெரியறதுக்கு முன்னாடி முதல்ல வீட்டுக்கு கிளம்பு" என்று நடிகையை வீட்டுக்கு பேக்கப் செய்தார், டாடி தாடி.   No comments:

Post a Comment