சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

துப்பாக்கி கேட்ட துர்பாக்கிய தயாரிப்பாளர்...

ப்போதும் வெள்ளுடை வேந்தராக பவனி வரும் பெருந்தன்மை தயாரிப்பாளர் அவர். தனது தற்காப்புக்காக எப்போதும் அரசு அனுமதி பெற்ற கருப்பு துப்பாக்கி, வெள்ளை பேன்ட் பாக்கெட்டில் ஒளிந்திருக்கும். ஒரு காலத்தில் அவ்விடபூமி சுப்ரீம் ஸ்டாரையும், இவ்விடபூமி சூப்பர் ஸ்டாரையும் இணைத்து படம் எடுத்த இரண்டெழுத்து தயாரிப்பாளர் ஒருவரும், பெருந்தன்மையும், சரக்கும் தண்ணீரும் போல இரண்டற கலந்தவர்கள். 


ஷாஜகான் காதலியின் பெயரைக் கொண்ட ஸ்டார் ஓட்டலில் இருவருக்கென்று எப்போதும் சூட் ரூம் காத்திருக்கும். சரக்குத் தோழர்கள் இருவரும் சேர்ந்து விட்டால் சந்தோஷம் கரைபுரளும் அந்தளவுக்கு . இருவரும் பயங்கர க்ளாஸ்மெட். சாயங்கலாம் ஆரம்பிக்கும் சரக்கு மேளா, அதிகாலைவரை கதிரவன் கண்சிவக்கும் வரை இவர்களது கண்களும் சிவந்தபடி இருக்கும். திடீரென்று யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் சிங்கப்பூர் பறந்து விடுவார்கள்; அங்குள்ள ரகசிய நண்பர்களுடன் சேர்ந்து ரங்கராட்டினம் ஆடுவார்கள்.

குஷி, கும்மாளத்தைத் தாண்டி இருவரும் குடும்ப நண்பர்கள். தண்ணீர் ஊற்றி சரக்கு அடிப்பது மட்டுமல்ல... அவ்வப்போது கண்ணீர் மல்க குடும்பம் ப்ளஸ் பண பிரச்னைகளையும் மனம்விட்டு பேசிக்கொள்வார்கள். கடன் கழுத்தை நெறுக்கிய சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுத்து உதவிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இரண்டு எழுத்து தயாரிப்பாளர் பெருங்கடனில் சிக்கி விழிபிதுங்கி தவித்தார். தனது நண்பர்கள் எல்லோருக்கும் போன் போட்டு உதவி கேட்டார் பலர் கைவிரித்தனர். 

சிலர் போனை எடுக்காமலே தவிர்த்தனர். கரன்சி மெத்தையில் கண்ணுறங்கிய இரண்டெழுத்தின் உறவினரான இனிஷியல் தயாரிப்பாளரும் இவரை கண்டு கொள்ளவில்லை அவ்வப்போது ஆபத்பாந்தன் ஆக இருந்து உதவி செய்து வந்த வெள்ளுடை வேந்தரான பெருந்தன்மை தயாரிப்பாளரையும் கடன் வெள்ளம் சூழ்ந்து கொண்டு இருந்தது.
ஒருநாள் இரவு கடன் வெள்ளத்தின் சுழலில் சிக்கித்தவித்தார். எப்போதும் மென்மைச் சிரிப்போடு எல்லா விஷயங்களையும் எதிர் கொள்பவர், மிகுந்த மன உளைச்சலில் சிக்கி சோந்து போனார் இரண்டெழுத்து. தானே காரை எடுத்துக் கொண்டு பெருந்தன்மை வீட்டுக்கு போனார். நீண்ட நேரம் தனக்குள்ள நெருக்கடிச் சூழ்நிலையை விவரித்தார். தன்னால் உதவி பெற்றவர்கள் எல்லோரும் தன்னைக் கண்டுகொள்ளவே இல்லை என்று வேதனையை வெளியே கொட்டினார். 

தன்னால் உதவ முடியவில்லையே என்று கண் கலங்கினார் பெருந்தன்மை. திடீரென்று டென்ஷனான இரண்டெழுத்து ' உன் துப்பாக்கியைக் கொடு... பேசாம நான் சுட்டுக்கிட்டு செத்துப்போகிறேன்..." என்று ஆவேசமானார். பதைபதைத்துப் போன வெள்ளுடை, தோள்மீது கைவைத்து ஆசுவாசப்படுத்திய பெருந்தன்மை சமாதானம் செய்து அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 

அதிகாலை பெருந்தன்மை வீட்டு போன் அலறியது, மீசையை தடவிக்கொண்டே போனை காதில் வைத்தார், எதிர்முனையில், இரண்டெழுத்து தயாரிப்பு தூக்கு மாட்டி இறந்து விட்டதாக இழவுச் செய்தி சொன்னார்கள். அதிர்ச்சியின் விளிம்புக்கு போனார் பெருந்தன்மை!



No comments:

Post a Comment