சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

தோனி பாதி... கோலி பாதி... சேர்ந்து கலக்கும் ரஹானே!

அசப்பில் டிராவிட்டை போல இருக்கும் ரஹானே, டிராவிட்டை போலவே டெக்னிக்கலாக  விளையாட கூடியவர்.
உலகில் தற்போதைய சிறந்த பேட்ஸ்மேன்களில்  ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித் வரிசையில்  ரஹானேவும் முக்கியமானவர். அமைதி தோனி, ஆவேச கோலியை காட்டிலும் எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக தனக்கென உரிய பாணியில் திட்டங்கள் வைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ரஹானே.


தோனிக்கு பதிலாக விராட் கோலி, ரெய்னா ஆகியோர் இதற்கு முன்னர் கேப்டனாக அவ்வப்போது அயல்நாடு சுற்றுப்பயணங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். கோலியும், ரெய்னாவும் கேப்டனாக இருந்த  தொடர்களில்,  ஓரளவு அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருந்தனர். ஆனால் இம்முறை  ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார் தவிர  அநேகம் பேர்  25  போட்டிகள் கூட இதுவரை இந்திய அணிக்காக விளையாடதவர்கள். கேப்டன் தோனிக்கு பிறகு மாற்றாக நல்ல விக்கெட் கீப்பர் இன்றளவும்  இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. உத்தப்பா இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்தும் பட்சத்தில்,  விரைவில் இந்தியாவின் சீனியர் அணியிலும் உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தற்போதைய ரஹானே தலைமையிலான இந்திய அணி,  ஜிம்பாப்வே அணியுடன் ஒப்பிடுகையில் சற்று வலு குறைந்தே காணப்படுகிறது. வலிமை வாய்ந்த பாகிஸ்தான் பந்துவீச்சையே சிதறடித்து அனாயசமாக 300 ரன்களை குவிக்கும் ஜிம்பாப்வே அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவது அவ்வளவு எளிது கிடையாது. எனவே ரஹானேவுக்கு இது ஒரு சோதனைக் களம்தான். கடந்த ஓரிரு வருடங்களாக ஒரு தின போட்டிகளில் பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பி வருகிறது, இந்த இளம் படை அந்த குறையை போக்கும் என நம்பலாம்.
 
உலகின் எந்த ஒரு மைதானத்திலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்களில் ரஹானேவும் ஒருவர். சச்சினால் கூட தனது வாழ்நாளில் சதமடிக்க முடியாத லார்ட்ஸ் மைதானத்தில், அங்கு  விளையாடிய முதல் போட்டியில் சதமடித்தவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  மெல்பர்ன் மைதானத்திலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனிலும் சதமடித்தவர். அதுமட்டுமின்றி  அயல்நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மைதானங்களில் சிறப்பாக விளையாடிவர்.
வங்கதேசத்தில் ஒரே ஒரு ஒருநாள்  போட்டியில் சொதப்பியதற்கு அப்போதைய கேப்டன்  தோனி,  ரஹானே பேட்டிங் குறித்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், அடுத்த தொடரில் தனக்கு  கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும் என கனவில் கூட நினைத்து பார்த்து இருக்கமாட்டார் ரஹானே.
வாய்ப்புகள் ஒரு தேவதை போல என்பார்கள். ரஹானேவுக்கு பின்னால் 120 கோடி மனிதர்கள் நிற்கிறார்கள். ரஹானே புது சரித்திரம் படைக்க நம் வாழ்த்துக்களை சொல்வோம்...! 



No comments:

Post a Comment