சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

'சாமி' பட பாணியில் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர் !


தூத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டை கிராமம் கைப்பந்து விளையாட்டுக்கு பெயர் போனது. வீட்டுக்கு ஒரு கைப்பந்து வீரர் இந்த கிராமத்தில் இருப்பார்கள். இதே கிராமத்தை சேர்ந்த நவீன் (வயது 28). சர்வதேச கைப்பந்து வீரரான இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறார். நவீன் மீது  மீது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பிரியங்கா (வயது 26) என்ற இளம்பெண் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரடியாக சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது


பெங்களூர், கிர்லாஸ்கர், லட்சுமி நகரில் பெற்றோருடன் வசிக்கிறேன். எனது தந்தை தொழில் அதிபர். எனது குடும்பம் கவுரவமான குடும்பம்த்தை சேர்ந்தவள். எம்.பி.ஏ படித்துள்ள நானும் கைப்பந்து வீராங்கனைதான். என்னைப்போல நவீனும் சர்வதேச கைப்பந்து வீரர். அப்படிதான் எனக்கு அவர்  பழக்கமானார். தீடீரென்று என்னிடம் வந்த, நவீன் என்னை காதலிப்பதாக சொன்னார். அவரது காதலை நான் முதலில் ஏற்கவில்லை. ஆனால், நவீன் என்னை பல நாட்கள் பின் தொடர்ந்து  காதலிப்பதாக சொன்னார். ஒருகட்டத்தில் எனது காலில் விழுந்து கெஞ்சினார்.

பிளேடால் கைகளை கீறினார்


ஒருநாள் திடீரென்று தனது கைகளில் பிளேடால் வெட்டி, ரத்தத்தை எடுத்து அதில் ‘ஐ லவ் யூ’ என்று எழுதி காட்டினார். அவரது காதலை ஏற்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வதாக  கூறினார்.. அவரது காதலின் ஆழத்தை பார்த்து, எனது மனம் மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் காதலர்களாக மட்டுமல்ல கணவன்–மனைவியாக  உலாவந்தோம். 

சாமி படம் போல சத்தியம்

 
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நவீன் வீட்டில் நான் பல நாள் தங்கி உள்ளேன். அவரது தந்தையிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நானும் எனது குடும்பத்தினரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளேன். சாமி படத்தில் சத்தியம் செய்து, என்னை அவரது மனைவி என்று எனது குடும்பத்தினரிடம் நவீன் உறுதியாக சொன்னார். எனது நெற்றியில் குங்குமம் வைத்தும் சத்தியம் செய்தார். வாரத்தில் கடைசி நாட்கள் நவீன் பெங்களூர் வந்து எனது வீட்டில் தங்குவார்.

சுண்டங்கோட்டைக்கு சென்றோம்

 
என்னை அவரது சொந்த ஊரான சுண்டங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது சகோதரி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். அவரது ஊர்க்காரர்களிடம் என்னை அவரது மனைவி என்றே  அறிமுப்படுத்தினார். அவரது பெற்றோர் உறவினர்கள் என்னிடம் அன்புடன் பழகினார்கள். நவீனுக்கு என்னை ஊரறிய திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும் அதற்கு , 300 சவரன் நகைகளுடன் ஆடி சொகுசு கார், சென்னையில் ஒரு பங்களா வீடு வாங்கித்தர வேண்டும் என்று கூறினர். நான் எனது பெற்றோருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. எனவே அவர்களுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்தை எனக்கு தருவார்கள் என்று அவர்களிடம் கூறினேன். 

குறுக்கே வந்த போலீஸ் அதிகாரி மகள்
இந்த நிலையில், எனக்கு தெரியாமல், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவரின் மகளை நவீனுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்து விட்டனர். திருமணத்திற்காக  பேசி பத்திரிக்கையும் அடித்துவிட்டனர். வரும் 13–ந் தேதி கோவையில் திருமணம் நடக்கவுள்ளது. நவீனிடம் கேட்டபோது, என் பெற்றோர் பார்த்த பெண்ணை பெற்றோருக்காக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்.  காதலுக்காக உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சர்வசாதாரணமாக கூறினார். 

அதுமட்டுமல்லாமல் என்னை ஒதுங்கிக்கொள்ளும்படி அவரது பெற்றோர், சிலருடன் பெங்களூர் வந்தே  என்னை மிரட்டினார்கள். நவீனுக்கு அவரது மகளை திருமணம் செய்து வைக்க போகும் கோவை போலீஸ் அதிகாரி என்னை போனில் மிரட்டினார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.

நவீன்தான் என்றைக்கும் எனது கணவர். அவர் எனக்கு கிடைக்காவிட்டால், கற்பனையில் கூட நான் இன்னொருவரை கணவராக ஏற்கமாட்டேன். அவர் என்னை ஏற்காவிட்டால், அவர் எனக்கு செய்த துரோகத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பிடித்து விசாரணை
 
இந்த புகார் மனு மீது கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், மாம்பலம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா விசாரணை நடத்தி வருகிறார். நவீன், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நவீனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிடாமல், டி.ஜி.பி. அலுவலக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்ததாக கூறப்படுகிறது.No comments:

Post a Comment