சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

16 மணி நேர சி.பி.ஐ. விசாரணை நடப்பது என்ன ? தயாநிதிக்கு பிடி இறுகுகிறது !

த்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது முதல் சன் டி.வி-க்கு நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதற்கு முன்பு வரை, தயாநிதி மாறன் பிரச்னையாக மட்டுமே இருந்த பி.எஸ்.என்.எல் விவகாரம், ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரம் எல்லாம் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, சன் தொலைக்காட்சியின் உரிமம், சன் டி.வி-க்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம் என்று புது திசையில் பயணிக்கத் தொடங்கி உள்ளன. இதை எதிர்கொள்ள சன் தொலைக்காட்சி நிர்வாகம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழக்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்துகொண்டிருக்கிறது!
பாதுகாப்பு அஸ்திரம்!
சன் தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மத்திய அரசு அனுமதி தரவில்லை. கல் கேபிள் நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், அந்த நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், ‘கல் கேபிள் என்பது தொலைக்காட்சியை ஒளிபரப்பும் ஒரு விநியோக நிறுவனம் போன்றது. அதற்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசு, ஏன் அதன் மூலம் ஒளிபரப்புச் செய்யப்படும் சன் தொலைக்காட்சியின் உரிமத்தையே ரத்து செய்யலாமே?’ என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சன் தொலைக்காட்சிக்கு அனுமதி தர மறுக்க முடிவெடுத்துள்ளது.

‘‘நீதிபதி ராமசுப்பிரமணியன் சன் தொலைக்​காட்சி பற்றி சொன்ன வார்த்தைகளை நீக்க வேண்டும்” என்று முடிவு செய்த சன் தொலைக்காட்சி, தற்போது அதற்கு தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. அதில், கல் கேபிள் தொடர்பான வழக்கில் ‘தேவையில்லாமல், சன் தொலைக்காட்சியை இழுத்து, அதுபற்றி நீதிமன்றம் தேவையற்ற வார்த்தைகளைப் பதிவு செய்துள்ளது. இதனால், சன் தொலைக்காட்சிக்கு உரிமம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிபதியின் வார்த்தைகளை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தனி டெலிபோன் எக்சேஞ்!
பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், சி.பி.ஐ போலீஸ் பிடி இறுகுகிறது. இதுவரை என்ன நடக்கிறது என்று தெரியாத  கண்ணா​மூச்சிகளாக நடந்து வந்த விவகாரத்தில், சி.பி.ஐ போலீஸார் தயாநிதிமாறனை அழைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். டெல்லி விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி கடந்த 29-ம் தேதி, தயாநிதி​மாறனுக்கு ஃபேக்ஸ் மூலமும் தொலைபேசி மூலமும் தகவல் சொன்னது சி.பி.ஐ. ஏற்கெனவே, இந்த வழக்கில் கண்ணன், ரவி, கௌதமன் என சன் டி.வி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பதறிப்போன தயாநிதிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
அதற்கு தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனுவும் அதை எதிர்த்து சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவும் தயாநிதிமாறனுக்கு இந்த விவகாரத்தில் நெருக்கடிகள் முற்றி இருப்பதையே காட்டுகின்றன.
‘‘மிரட்டும் வகையில் விசாரணைக்கு அழைத்தார்கள்!”
 தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனுவில்,  ‘‘பி.எஸ்.என்.எல் இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினேன் என்று கூறி சி.பி.ஐ கிரிமினல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் என் மீது வழக்குப் பதிவு செய்தது தவறு. நான் பயன்படுத்திய இணைப்புகளுக்குப் பணம் கட்டவில்லை என்றால், அது சிவில் சட்டத்தின் கீழ் அணுகப்பட வேண்டிய விவகாரம். மேலும், 2004 முதல் 2007 காலகட்டம் தொடர்பான இந்தப் பிரச்னைக்கு முதல்கட்ட விசாரணையே 2011-ம் ஆண்டில்தான் நடைபெற்றது. அதன் பிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு இதில் சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திடீரென 2013-ம் ஆண்டில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து மீண்டும் இந்தப் பிரச்னையைக் கிளற ஆரம்பித்தனர். பல முறை என்னிடம் விசாரணை நடைபெற்றது. அவை அனைத்துக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பு அளித்தேன். அதுதவிர,  பி.எஸ்.என்.எல் இணைப்புகளை, தான் முறைகேடாக பயன்படுத்தவில்லை என்பதை விளக்கி 2014-ம் ஆண்டு இரண்டு கடிதங்களும் 2015-ம் ஆண்டு இரண்டு கடிதங்களும் சி.பி.ஐ-க்கு எழுதி உள்ளேன். இதற்கிடையில் இந்த விவகாரத்தில், 60 சாட்சிகளிடம் விசாரித்தும், 200 ஆவணங்களைப் பரிசீலித்தும்கூட சி.பி.ஐ  இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஏனென்றால் என் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இப்படி 8 வருடங்களாக போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியாத ஒரு விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி, என்னைத் தொலைபேசியிலும் ஃபேக்ஸ் மூலமும் தொடர்பு கொண்டு, மிரட்டும் தொனியில், 1-ம் தேதி டெல்லிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று சொல்லி உள்ளனர். அப்போது நான் கைதுசெய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
‘‘தயாநிதி ஒத்துழைக்கவில்லை!”
 தயாநிதிமாறனின் வாதங்களை  எதிர்த்து, சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருக்கு அமைச்சர் என்ற முறையில் மூன்று இலவச தொலைபேசி இணைப்புகள்தான் கொடுக்கப்படும். ஆனால், அந்த இலவச இணைப்புகளை ரகசியமாக நீட்டித்து, அதில் இருந்து 364 தொலைபேசி இணைப்புகளை தயாநிதிமாறன் தன்னுடைய சகோதரர் கலாநிதிமாறனுக்கு சொந்தமான  தொலைக்காட்சிக்குக் கொண்டு சென்றுள்ளார். மேலும் 19 பிரிபெய்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி உள்ளார். அதன்மூலம் சன் தொலைக்காட்சிக்குத் தேவையான வீடியோக்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தயாநிதிமாறன் சொல்வதுபோல் சிவில் பிரச்னை அல்ல. தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை ரகசியமாக 364 இணைப்புகளாக நீட்டித்தது, அதற்கான கட்டணம் பதிவாகாதவாறு, தொழில்நுட்ப மோசடியில் ஈடுபட்டது, இதற்காக ரகசியமாக பூமிக்கடியில் பள்ளம் தோண்டி உயர் ரக பைபர் கேபிள் பதித்தது, இந்த முறைகேடுகளை செய்ய தன்னுடைய வீட்டில் ஒரு சிறிய டெலிபோன் எக்சேஞ்ஜ் அமைப்பே நிறுவியது, இதற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் முதன்மை பொது மேலாளர்களாக இருந்த பிரம்மானந்தம், வேலுச்சாமி ஆகியோரை இந்தச் சதியில் ஈடுபட வைத்தது போன்றவை சிவில் பிரச்னை அல்ல. இதில் கூட்டுச்சதி, நம்பிக்கைக் துரோகம், ஏமாற்றுதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது, ஊழல் புரிந்தது போன்ற குற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதனால்தான், தயாநிதிமாறன் உள்ளிட்டவர்கள் மீது கிரிமினல் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தயாநிதிமாறன் சொல்வதுபோல், இதுவரை நடைபெற்ற விசாரணைகளுக்கு அவர் சரியாக ஒத்துழைப்புக் கொடுத்தது இல்லை. இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தின் படி தயாநிதிமாறனுக்கு எதிராகவே உள்ளன. எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று தங்களின் வாதங்களைக் குறிப்பிட்டு இருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா பரிசீலித்தார். தயாநிதி மாறனுக்கு 6 வார காலம் முன்ஜாமீன் வழங்கினார். ஆனால்,  ‘‘தயாநிதிமாறன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத நேரத்தில், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை சி.பி.ஐ அணுகலாம்” என்று குறிப்பிட்டு முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி.

இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குச் சென்றார் தயாநிதிமாறன். ஆனால், விசாரணை அத்தனை எளிதாக இல்லை. கடந்த 1-ம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 2-ம் தேதியும் தொடர்ந்து விசாரணை  நடைபெற்றது. ‘‘சி.பி.ஐ அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்துக்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு தயாநிதிமாறனால் பதில் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ-யிடம் பலரும் இதுவரை அளித்துள்ள வாக்குமூலங்கள் தற்போது தயாநிதிமாறனுக்குப் பெரும் குடைச்சலாக மாறி உள்ளது. முன் ஜாமீன் தேதி முடிந்ததும், தயாநிதிமாறனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி சி.பி.ஐ-யிடம் இருந்து காத்திருக்கிறது” என்கின்றனர் டெல்லி வட்டாரத்தினர்.
திடீர் வழக்கு!
ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் மத்திய அமலாக்கப் பிரிவு, சன் தொலைக்காட்சிக்கு சொந்தமான சொத்துகளை கடந்த மார்ச் மாதம்  முடக்கியது.  சன் தொலைக்காட்சியின் 714 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது தவறு என்றும் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், சன் தொலைக்காட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சன் தொலைக்காட்சியின் சொத்துகளை மீட்க வழக்குத் தொடுத்துள்ளனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி உள்ளார். 

‘‘தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது இது சம்பந்தமான சி.பி.ஐ-யின் பிடியும் இறுகும்” என்று டெல்லித் தகவல்கள் சொல்கின்றன!



No comments:

Post a Comment