சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

நேர்மைக்கு பரிசு இடமாற்றமா; ஈரோடு பரபர!

மணல் முறைகேட்டில் நேர்மையாக நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரியை இடமாற்றம் செய்த விவகாரம் ஈரோட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஈரோடு வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் மேனகா. நேர்மைக்கு பேர் போன இவரைத்தான் ட்ரான்ஸ்பர் செய்ததோடு காத்திருப்போர் பட்டியலிலும் வைத்திருக்கிறார்கள். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகிலிருக்கிறது கருமாண்டி செல்லிபாளையம். இந்த பகுதியில் பட்டா நிலங்களில் கிராவல் மண் அள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மண்ணை அள்ளியிருக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரான பிரபாகரிடம் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் போயிருக்கிறது. இதை விசாரிக்கும் பொறுப்பை கோட்டாட்சியர் மேனகாவிடம் ஒப்படைத்திருக்கிறார் ஆட்சியர். 

சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு சென்ற மேனகா தனது விசாரணையில் அங்கு அரசு அனுமதிஅளித்த அளவை விட கூடுதலாக மண் எடுத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்த விபரம் தெரிய வந்தது.
 


இந்த குவாரியை நடத்துபவர் சுற்றுச்சூழல்துறை அமைச்சரான தோப்பு வெங்கிடாசலத்தின் நெருங்கிய நண் பர். இருப்பினும் நேர்மையான அதிகாரியான மேனகா, அவர் மீது வழக்கு பதிந்து தற்போது அந்த வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மோசடி குறித்த விபரங்களை முதல் வருக்கு கோட்டாட்சியர் மேனகா அனுப்பியதாக செய்தி பரவ, இந்த மேசடிக்கு உடந்தையாக இருந்த பல அதிகாரிகளும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்த தகவல் அமைச்சரின் காதுகளுக்கு போயிருக் கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோட்டாட்சியர் மேனகாவை பணியிட மாற்றம் செய்ததோடு வேறு பணியும் ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். 

மணல் விவகாரத்தில்  சட்டப்படி நடவடிக்கை எடுத்த அதிகாரியை சத்தமில்லாமல் ட்ரான்ஸ்பர் செய்த விவகாரம்தான் ஈரோடு முழுக்க பரபரத்துக்கிடக்கிறது. 

ஏற்கனவே கனிமவள கொள்ளை தொடர்பாக மதுரை பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை செய்துகொண்டிருக்கிறார். 

அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலைமிரட்டல் வரை வந்தது. எதற்கும் அஞ்சாத சகாயம் தனது கடமையை நேர்மை யோடு செய்கிறார். எங்கே இங்கும் அப்படி ஒரு நிலை வந்து விடுமோ என எண்ணிய மணல் கடத்தும் கும்பல் உடனே இந்த அதிகாரியை ட்ரான்ஸ்பர் செய்து இனி வரும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.No comments:

Post a Comment