கார் வாங்கி அஞ்சு வருஷம் ஆயிடுச்சா... உடனே வித்துடு. இந்த கார் இனிமேல் செலவு மேல செலவு வைக்கும்!’’ - இந்த அட்வைஸை கார் வாங்கி ஐந்து ஆண்டுகள் அல்ல, மூன்று ஆண்டுகளிலேயேகூட பலரும் கேட்டிருப்போம். உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை வைத்திருந்தால், அதிக செலவு வைக்குமா? இல்லாவிட்டால் இதை விற்றுவிட்டு, அதைவிடக் கொஞ்சம் பெரிய காரை வாங்குவது லாபமா, நஷ்டமா?
ஒரு காரை வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டால், அந்த காரை அப்படியே டீலர்ஷிப்பில் கொடுத்துவிட்டு, அதைவிட பெரிய காரை வாங்கினால், எவ்வளவு செலவாகும்? பழைய காரையே தொடர்ந்து மேலும் 5 ஆண்டுகள் பயன்படுத்தினால், எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு இருக்கிறோம். இதன் மூலம், ஒரு காரைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பயன்படுத்துவது லாபமா அல்லது விற்பனை செய்துவிட்டு, புது கார் வாங்குவது லாபமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
கணக்கு எப்படி?
கணக்கு எப்படி?
ஆண்டுக்கு அதிகபட்சம் 15,000 கி.மீ பயணிப்பார்கள் என்கிற அடிப்படையில், 5 ஆண்டுகள் ஆன பழைய கார் சுமார் 75,000 கி.மீ ஓடியிருக்கும் எனக் கணக்கிடுவோம். பழைய கார் என்பதால் வங்கிக் கடன், தவணை எல்லாம் முடிந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதேபோல், ஆறாவது ஆண்டில் இருந்து 10-ம் ஆண்டு வரை பராமரிப்புச் செலவுகளைக் கணக்கிடுவோம்.
5 ஆண்டுகள் ஓடிய ஃபோர்டு ஃபிகோவின் செலவுகள் என்னென்ன?
நீங்கள் கையில் வைத்திருக்கும் கார், 2010-ம் ஆண்டு வாங்கிய ஃபோர்டு ஃபிகோ டீசல் காரின் டாப் வேரியன்ட். ஐந்து ஆண்டுகளாகிவிட்ட இதன் தற்போதைய மதிப்பு, 4 லட்சம் ரூபாய். ஆறாவது ஆண்டில் இருந்து 10-ம் ஆண்டு வரை, ஓர் ஆண்டுக்கு சர்வீஸுக்காக 20,000 ரூபாய் செலவு செய்வதாகக் கணக்கில் வைத்துக்கொள்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் பராமரிப்புச் செலவுக்காக மட்டும், ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்வீர்கள். டீசல் கார் என்பதால், இடையில் பெரிய செலவுகள் வரலாம். இதற்கென கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கிக்கொள்வோம். பழைய காருக்கு இன்ஷூரன்ஸ் சுமார் 6,000 ரூபாய் வரை செலவாகும். அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 30,000 ரூபாய் இதற்குச் செலவழிப்பீர்கள். ஃபிகோ பொதுவாக, லிட்டருக்கு 16.3 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 15,000 கி.மீ பயணம் என்ற வகையில், டீசலுக்கு ஆண்டுக்கு 48,000 ரூபாய் வரை செலவாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் டீசலுக்காக 2,40,000 ரூபாய் வரை செலவு செய்வீர்கள். டீசல் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்பதால், ஆண்டுக்கு 10,000 என்கிற வகையில் 50,000 ரூபாய் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது நீங்கள் டீசலுக்காக மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு 3.10 லட்சம் ரூபாய் செலவழிப்பீர்கள்.
மேற்சொன்ன செலவுகள் அனைத்-தையும் கூட்டினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ஃபோர்டு ஃபிகோவுக்காகச் செலவு செய்யும் தொகை, 5.20 லட்சம் ரூபாய்.
மேற்சொன்ன செலவுகள் அனைத்-தையும் கூட்டினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ஃபோர்டு ஃபிகோவுக்காகச் செலவு செய்யும் தொகை, 5.20 லட்சம் ரூபாய்.
ஹோண்டா அமேஸ் வாங்கினால்?
இப்போது 5 ஆண்டுகள் ஆன பழைய ஃபோர்டு ஃபிகோவை, 4 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, அதைவிடக் கொஞ்சம் பெரிய காரான ஹோண்டா அமேஸ் டீசல் காரை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஹோண்டா அமேஸ் டாப் வேரியன்ட் டீசல் காரின் விலை, 8.80 லட்சம் ரூபாய். நீங்கள் 4 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்திவிட்டால், மீதி 4.80 லட்சம் ரூபாய்க்குத்தான் தவணை செலுத்துவீர்கள். இந்தத் தொகைக்கான மாதத் தவணை 10,700 ரூபாய். ஆண்டுக்கு 1.28 லட்சம் ரூபாய் தவணை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 4.8 லட்சம் ரூபாய் கடனுக்கு, நீங்கள் கட்டிய தொகை 6,42,000. ஹோண்டா அமேஸ் சராசரியாக லிட்டருக்கு 18 கி.மீ மைலேஜ் தரும். ஓர் ஆண்டுக்கு 15,000 கி.மீ காரைப் பயன்படுத்தினால், டீசலுக்குச் செலவு செய்யும் தொகை 43,333 ரூபாய். அடுத்த ஐந்து ஆண்டுகளில் டீசல் விலை ஏறக்கூடும் என்கிற பட்சத்தில், ஆண்டுக்கு 10,000 ரூபாய் வீதம் உயர்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு 50,000 ரூபாய் சேர்த்துக்கொள்வோம். டீசலுக்காகச் செலவு செய்யும் மொத்தத் தொகை 2.66 லட்சம் ரூபாய். ஹோண்டா அமேஸின் இன்ஷூரன்ஸ் தொகை என்பது ஆண்டுக்கு சுமார் 10,000 ரூபாய் என்றால், ஐந்து ஆண்டுகளில் இன்ஷூரன்ஸூக்காக மட்டும் சுமார் 50,000 ரூபாய் வரை செலவாகும். முதல் ஐந்து ஆண்டுகளில் ஹோண்டா அமேஸின் சர்வீஸ் செலவுகளுக்காக, அதிகபட்சமாக 50,000 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ஹோண்டா அமேஸுக்குச் செலவு செய்யும் தொகையானது, 10.08 லட்சம் ரூபாய். ஃபிகோவின் செலவைவிட கிட்டத்தட்ட 4.88 லட்சம் ரூபாயைக் கூடுதலாகச் செலவு செய்கிறீர்கள்.
10 ஆண்டுகள் ஆன பழைய ஃபிகோவின் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாயை இதில் கழித்துவிட்டால், அமேஸுக்காக நீங்கள் கூடுதலாகச் செலவுசெய்த தொகை 3.38 லட்சம் ரூபாய்.
ஃபிகோவைவிட அதிக இடவசதி, அதிக சிறப்பம்சங்கள் மற்றும் கையில் இருப்பது புது கார் என்ற வகையில், இந்தக் கூடுதல் 3.38 லட்சம் ரூபாய் ஓகேதான் என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அமேஸ் வாங்காமல் இருந்திருந்தால், தவணை கட்டிய 6.42 லட்ச ரூபாயை நீங்கள் ரெக்கரிங் டெப்பாசிட்டில் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு 8.06 லட்ச ரூபாயாகியிருக்கும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஹோண்டா சிட்டி வாங்கினால்?
ஹோண்டா சிட்டி வாங்கினால்?
இப்போது ஃபிகோவை விற்றுவிட்டு, ஹோண்டா சிட்டி காரை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் மாடலின் தற்போதைய விலை, 10.58 லட்சம் ரூபாய். நீங்கள் ஃபோர்டு ஃபிகோவை 4 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு ஹோண்டா சிட்டியை வாங்குகிறீர்கள். 6.58 லட்சம் ரூபாய்க்கு மாதத் தவணையாக 14,651 ரூபாய் தவணை கட்டுவீர்கள். ஆண்டுக்கு 1,75,812 ரூபாய் கட்டுவீர்கள். ஐந்து ஆண்டுகளில் 8.79 லட்சம் ரூபாய் தவணை கட்ட வேண்டியிருக்கும். பெட்ரோல் செலவு ஆண்டுக்கு 66,400 ரூபாய் வரை செலவாகும்.பெட்ரோல் விலை ஏற்றத்தையும் கணக்கில் கொண்டு 50,000 ரூபாய் சேர்த்துக் கொள்வோம். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு 3.82 லட்சம் ரூபாய் எரிபொருளுக்காகச் செலவாகும்.
முதல் ஐந்து ஆண்டுகளில் பராமரிப்புச் செலவுகள் அதிகம் இருக்காது என்பதால், 75,000 ரூபாய் எனக் கணக்கில் வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு இன்ஷூரன்ஸ் 15,000 ரூபாய்க்குள் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸுக்காக 75,000 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 14.86 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வீர்கள்.
முதல் ஐந்து ஆண்டுகளில் பராமரிப்புச் செலவுகள் அதிகம் இருக்காது என்பதால், 75,000 ரூபாய் எனக் கணக்கில் வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு இன்ஷூரன்ஸ் 15,000 ரூபாய்க்குள் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸுக்காக 75,000 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 14.86 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வீர்கள்.
ஃபோர்டு ஃபிகோவைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களின் செலவு 5.2 லட்சம் ரூபாய். நீங்கள் விற்றுவிட்டு செடான் காரான ஹோண்டா சிட்டியை வாங்கினால், நீங்கள் செலவு செய்யும் தொகை 14.11 லட்சம் ரூபாய். இதில் ஐந்து ஆண்டுகள் ஆன ஹோண்டா சிட்டியின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாக இருக்கும். இதை 14 லட்சம் ரூபாயில் கழித்துவிட்டால் நீங்கள் ஹோண்டா சிட்டிக்காக செலவு செய்திருக்கும் தொகை மட்டும் 9 லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது; பெரிய கார் நிச்சயம் வேண்டும்; அதிகப் பொருட்கள் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது; பெரிய டிக்கிகொண்ட கார் வேண்டும் என்கிற வகையில், பெரிய காருக்கு அப்கிரேடு செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், 5 ஆண்டுகள் ஆகிவிட்டன; செலவு அதிகமாகிவிடும் என்பதற்காக, புது காரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. செலவு குறைவதற்குப் பதில், அதிகமாக ஆகும் என்பதே உண்மை!
No comments:
Post a Comment