சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Jul 2015

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!

கிரிக்கெட்டை பொறுத்த வரை கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த வங்கதேசம் தற்போது ஜாம்பவான் அணிகளை கூட வேட்டையாடத் தொடங்கி விட்டது. பாகிஸ்தான், இந்தியா அணிகளை தொடர்ந்து தற்போது தென்ஆப்ரிக்காவும் வங்கதேசத்திடம் தொடரை இழந்து ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிட்டாங்கில் நடந்த 3வது ஒருநாள் பகலிரவு போட்டியில் வங்கதேச அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பந்து வீசியது.பந்துவீச்சை  தாக்குபிடிக்க முடியாமல்குயின்டன் டி காக் 7 ரன்னிலும் டுப்லெசிஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். ஆம்லா 15 ரன்னிலும் ரோசவ் 17 ரன்களிலும் அவுட் ஆனார்கள். தென்ஆப்ரிக்க அணி 23 ஓவர்களில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்ஆப்ரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.

டக்வெர்த்லீவிஸ் விதிப்படி 40 ஓவர்களில் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்கள் தமிம் இக்பாலும் சவும்யா சர்க்காரும் தென்ஆப்ரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 154 ரன்களை அதிரடியாக சேர்த்தது. சவும்யா சர்க்கார் 75 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.
தமிம் இக்பால் 61 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 26.1 ஓவர்களில் 170 ரன்களை எடுத்து 
9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றாலும் அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக வங்கதேசம் தொடரை வெல்வது இதுவே முதல் முறை. 

கிரிக்கெட்டில் புதிய சாம்பியனாக மாறி வரும் வங்க தேச அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 4வது முறையாக தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வே அணியை 5-0 என்று வொயிட் வாஷ் செய்தது. பாகிஸ்தான் 3-0 என்று வொயிட் வாஷ் ஆனது. இந்தியா 2-1 என்று தொடரை இழந்தது. தற்போது தென்ஆப்ரிக்காவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.



No comments:

Post a Comment