சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

புலிகள்! ட்ரையம்ப் டைகர் ஃப்ர்ஸ்ட் ரைடு TRIUMPH TIGER

புதிய ஆண்டுக்காக புதிய அப்டேட்களோடு களத்தில் இறங்கியிருக்கின்றன ட்ரையம்ப் டைகர் பைக் சீரிஸ். முன்பைவிட ஆன் -ரோடிலும், ஆஃப்-ரோடிலும் டெரர் டைகர்களாகப் பாய வேண்டும் என்ற லட்சியத்தோடு உழைத்திருக்கிறது ட்ரையம்ப். பழைய டைகர் பைக்குகளின் இன்ஜின், ஆஃப் ரோடிங் பெர்ஃபாமென்ஸில் சிறப்பாக இல்லை என்பது தெரியும். புதிய புலிகள் எப்படி இருக்கின்றன?
டிஸைன்
இப்போது ‘டைகர் சீரிஸில்’ கூடுதலாக இரண்டு மாடல்களைச் சேர்த்துள்ளது ட்ரையம்ப். 2015 மாடலில் XR எனப்படும் புதிய வேரியன்ட் இணைந்துள்ளது. இது, ஆன் ரோடு அனுபவத்துக்காக ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. XC மாடல்-தான் முழுமையான ஆஃப் ரோடிங் டைகர் பைக். 
டிஸைனைப் பொறுத்தவரை, சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சேஸிக்கு டைட்டானியம் பவுடர் கோட்டிங், புதிய எக்ஸாஸ்ட் ஷீல்டு, ரேடியேட்டர் கவர் போன்ற புதிய அம்சங்கள், டைகர்களுக்கு மிரட்டலான தோற்றத்தைக் கொடுத்திருக்கின்றன.

இன்ஜின்
அப்டேட் செய்யப்பட்ட மாடல் என்றாலே, பொதுவாக இன்ஜினின் ஹார்ஸ் பவர் மற்றும் டார்க்கைக் கூட்டுவார்கள். ஆனால், புதிய டைகர் பைக்குகளில் சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக, இன்ஜினை இன்னும் ரெஸ்பான்ஸிவ்வாகவும் ஸ்மூத்தாகவும் ட்யூன் செய்திருக்கிறார்கள். ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம். எலெக்ட்ரிக்கல்ஸ், வால்வுகள், கியர்பாக்ஸ், கூலிங் சிஸ்டம், எக்ஸாஸ்ட் போன்றவை மாற்றியமைக் கப்பட்டிருக்கின்றன.  இதன் 800 சிசி இன்ஜின், டேடோனா பைக்கில் இருக்கும் 675 சிசி இன்ஜினின் மறுவடிவம்தான். அதனால், டேடோனா பைக்கின் இன்ஜின் வால்வ் ஸ்ப்ரிங்குகள், கேம் ஷாஃப்ட்டுகள், கியர்பாக்ஸ் பாகங்கள் போன்றவற்றை புதிய டைகர்களில் சேர்த்து விட்டது ட்ரையம்ப்.
 
ஓட்டுதல், கையாளுமை
டைகர் XRx பைக்கில் டார்க் டெலிவரி ஐடிலிங்கில் இருந்தே சிறப்பாக இருக்கிறது. மலைப் பகுதியில் ஏறும்போதுகூட 6-வது கியரில் 40 கி.மீ-ல் இருந்தே இழுக்கிறது இன்ஜின். கியர்பாக்ஸ் தரம் சூப்பர். ‘ரோடு’ மோடில் வைத்து ஓட்டும்போது, திராட்டில் ரெஸ்பான்ஸ் ஸ்மூத்தாகவும், ‘ரெய்ன்’ மோடில் இன்னும் சாஃப்ட்டான பவர் டெலிவரியும் உள்ளது. ‘ரைடர்’ மோடில், ஸ்போர்ட் த்ராட்டில் மேப் செட் செய்து ஓட்டினால், இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் எகிறிப் பாய்கிறது டைகர்.
XCx பைக்கின் 20 மிமீ  ரீச் அட்ஜஸ்ட்டபிள் ஹேண்டில்பார், 15 மிமீ உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால்,  பழைய பைக்போல இல்லாமல், சீட்டிங் பொசிஷன் வசதியாக உள்ளது. 
முழுக்கவே ஆஃப் ரோடு பைக்காக இருந்தாலும், ஆன் ரோடிலும் அருமையாக இருக்கிறது டைகர் XCx. நாள் முழுக்க பைக்கில் சுற்றினாலும், நம்மைச் சோர்வாக்காமல் இருப்பது இதன் ஓட்டுதல் தரத்தின் பெரிய ப்ளஸ்.
ட்ரையம்ப்-ன் டைகர் பைக்குகள் இப்போது தெளிவான நோக்கத்தோடு களத்தில் இறங்கிவிட்டன. XRx வேரியன்ட் ஒரு பட்ஜெட் அட்வென்ச்சர் ஆர்வலருக்கான கச்சிதமான ஃபார்முலா பைக். XCx வேரியன்ட்டோ முழுக்க முழுக்க, காட்டில் அட்வென்ச்சர் செய்ய விரும்பும் ஆர்வலருக்கான பைக்.   லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள், ஸ்ட்ராங்கான இன்ஜின் போன்றவை டைகர்களை இன்னும் சீறவைத்திருக்கிறது என்றாலும், விலை எகிறிவிட்டது. இந்தியாவில் அசெம்பிள் செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால்  XC, XR டைகர்களில் ஏறி வேட்டையாட ஒரு கூட்டமே காத்துக்கிடக்கிறது!



No comments:

Post a Comment