சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Jul 2015

சென்னை அணி விளையாட வாய்ப்பேயில்லை... தண்டனைக்கு காரணமான நீதிபதி பேட்டி!

ஐ.பி.எல். தொடரில் இரண்டு சீசன்களில் விளையாட சென்னை அணிக்கு எந்த நிலையிலும் வாய்ப்பில்லை என்று நீதிபதி முகுந்த் முத்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர்களில் நடந்த சூதாட்டம் குறித்து முகுந்த் முத்கல் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி லோதா நேற்று தண்டனை விபரங்களை அறிவித்தார். இதன்படி சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடையும், சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் ராஜ் குந்த்ராவுக்கும் கிரிக்கெட் நடவடிக்கைகளில் இருந்து வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முகுந்த் முத்கல், '' முழுமையான தண்டனை விபரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஒரு franchise தடை செய்யப்பட்டு விட்ட பின்னர், அந்த அணி எப்படி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்?. இத்தாலி கால்பந்து தொடரான சீரி 'ஏ'வில் 
விளையாடிய ஜுவான்டஸ் அணியின் நிர்வாகிகள் இதே போன்று சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜுவான்டஸ் அணியை சீரி 'பி 'தொடருக்கு தர இறக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து 2 சீசன்களில் ஜுவான்டஸ் அணி சீரி 'பி' தொடரில் விளையாடியது. அங்கும் ஒருவரோ இருவரோதான் தவறு செய்துள்ளனர். ஆனால் தண்டனை, அணிக்குதான் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல்தான் இதுவும். இந்த நடவடிக்கை தற்போது கடினமானதாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஐ.பி.எல்.லுக்கும் கிரிக்கெட்டுக்குமே மிகவும் நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது அமையும். 

ஐ.பி.எல்.லில் மேட்ச்பிக்சிங் நடக்கிறது என்ற எண்ணம் தோன்றிவிட்டால், மக்கள் மனதில் இருந்து அதனை அகற்றுவது கடினம். தற்போதைய நடவடிக்கையால்,  ஐ.பி.எல். மீதான ரசிகர்களின் நம்பிக்கை அதிகாரிக்கும்"  என்று  கூறியுள்ளார்.
இதற்கிடையே தண்டனைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்ப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment