சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Jul 2015

ப்ளுடோவை படம் பிடித்த முதல் விண்கலம் - 15 சுவாரஸ்ய தகவல்கள்

சூரிய மண்டலத்தில் இருக்கும்கிரகமும் அல்லாத கோளும் அல்லாத பெரிய திட பொருளான புலூட்டோவின் சுற்று வட்ட பாதையில் இருந்து முதல் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது நாசாவின் நியூ ஹாரிசான்ஸ் ( New Horizons)  விண்கலம்பல அனுமானங்களுக்கு உள்ளான ப்ளுடோவைப் பற்றியதகவல்களை சேகரிக்க ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்டது இந்த விண்கலம்இதுவரை ப்ளுடோ என்று நாம் பார்த்த அனைத்து படங்களுமே ஒரு அனுமானம்தான்ப்ளுடோவிலிருந்து 766,000கிலோமீட்டர்கள் தொலைவில் இந்திய நேரப்படி இன்று (14.07.15)  அதிகாலை 1.30 மணிக்கு எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் தொடர்பு மையத்துக்கு கிடைத்ததுஅந்த படங்கள் நாசா சேனலில் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.புலோட்டோவின் மேற்புறத்திலிருந்து 12,500 கிலோமீட்டர் தொலைவிலிருந்து புலோட்டோவின் விரிவான படங்கள் இந்திய நேரம் மாலை 5.19 மணிக்கு கிடைத்ததுஇந்த படங்கள் நாளை (15-16 july) நள்ளிரவு வெளியிடப்படும் என்று நாசா அறிவித்துள்ளது
ஆனால் இந்த பயணம் வெற்றி பெற்றதா என்பது நாளை காலை 7.25 மணிக்கு நீயூ ஹாரிசானிடமிருந்து கிடைக்கும் சக்சஸ் தகவலுக்கு பிறகு தான் தெரியவரும்மேலும் இஒது பற்றிய தகவல்களுக்கு @NASANewHorizons என்ற ஹாஷ்டாக் மூலம் டிவிட்டரிலும்,

http://www.nasa.gov/multimedia/nasatv/index.html
என்ற நாசாவின் இணையதள சேனலிலும் காணலாம்இது வரையில் இல்லாத முயற்சியாக ப்ளூடோவின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது நாசா.
இந்த நெடுங்கால பயணத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள் : 
1. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன் பயணத்தை தொடங்கிய நீயூ ஹாரிசான் ஆண்டுகள்(3463 நாட்கள்) 5 கிரகங்களைக் கடந்துஒரு மணி நேரத்திற்கு 34000 மீ வேகத்தில் பயணம் செய்து சுமார் பில்லியன் கிலோமீட்டர்கள் கடந்து இந்த சாதனையை எட்டியுள்ளது.
7,66000 கிமீ தொலைவில் ப்ளோடோவின் படம்

2. ஏவப்பட்ட மாதங்களில் ப்ளுடோ கோள் அல்ல என்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி கழகம் அறிவித்ததுசூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகளில் இருந்து இது வேறுபட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
3. 700 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த வெற்றி கிட்டியுள்ளது.
4. முந்தைய கணிப்புகளை விட ப்ளுடோவின் அளவு மிகப் பெரியது என்று அறியபட்டுள்ளது.அதன் டையாமீடார் 2370 கிமீ தற்போது கிடத்துள்ள படங்கள் மூலம் தெரிய வருகிறதுஇது சூரிய மண்டலத்திலேயே பெரிய திடப் பொருளாகும்.
5. அதன் அடிப்பகுதியில் பனியின் அளவு அதிகமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதுஇது ப்ளுடோவின் மேற்புறத்தை பளிச்சிட வைக்கிறது.
6. பூமியின் சுற்றுவட்டப் பாதையின் கோணத்திலிருந்து 17.1 டிகிரி மாறுபடுகிறது.
7. விண்கலத்தின் Long Range Reconnaissance Imager (LORRI) என்ற கேமரா இப்போதைய கேமரா தொழில் நுட்பத்தைக் காட்டிலும் மிகவும் குறைந்த தரத்திலான படங்களையே கொடுக்கும்,என்றாலும் இதுவே நல்ல போதுமானதாக இருக்கும்.
8. சாரோன் நிக்ஸ்ஸ்டிக்ஸ்கெர்பெரோஸ்ஹைட்ரா என ப்ளுடோவைச் சுற்றி நிலாக்கள் சுழல்கின்றன.
9. சாரோன் 1208 கிமீ டையாமீட்டர்கள் கொண்டதுஇது பூமியிலிருந்து டெலெஸ்கோப்புகள் மூலம் கண்டறியப்பட்டுது.
10. நிக்ஸ் மற்றும் ஹைட்ரா 2005-ம் ஆண்டு ஹப்பில் ஸ்பேஸ் டெலெஸ்கோப் மூலம் விண்வெளியிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
11. கெர்பெரோஸ் மற்றும் ஸ்டிக்ஸ் மிகச் சிறிய நிலாக்கள் என்பதால் அதன் அளவு கணிக்க முடியாமல் இருந்ததுஆனால் இப்போது கிடைத்துள்ள படங்கள் மூலம் அதைக் கணிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
12. விண்கல ஆராய்ச்சி இயந்திரம் மிகப் பெரிய அளவு தகவல்களை சேகரிக்கிறதுஇவை அனைத்தையும் பெற 16 மாதங்கள் ஆகும்.
13. விண்கலம் பயணிக்கும் வேகத்துக்கு ஒரு சின்ன அரிசி அளவு பொருள் மோதினாலும்,வெடித்துச் சிதறி விடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்ஆனால் அதற்கு 10 ஆயிரத்தில் ஒரு பங்கு வாய்ப்பு தான் இருக்கும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.
14. முதன் முதலில் ப்ளுடோவை லாய்ட் டாம்பாக் என்ற விஞ்ஞானி 1930-ம் ஆண்டு கண்டு பிடித்தார்.
15. இந்த சாதனையோடு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களையும் ஆராய்ச்சி செய்த ஒரே நாடு என்ற பெருமை பெற்றுள்ளது.
source : NASA
source : NASANo comments:

Post a Comment