சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Jul 2015

இந்தியாவுக்குள் ஒரு ரூபாய்க்கு பறக்கலாம்! புதிய உத்தியில் ஸ்பைஸ்ஜெட் ஆஃபர்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சிறப்பு ஆஃபராக உள்ளூர் விமான சேவையில் இந்தியாவில் எந்த நகரங்களுக்கு இடையேயும் ஆப்ஸ் மூலம் புக் செய்யும் பயணத்திற்கு ஒரு ரூபாய் தான் கட்டணம்  என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரை பயன்படுத்தி இன்று முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை பயணிக்கலாம் என ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.
இந்த ஆஃபருக்கு சில நிபந்தனைகளையும் முன் வைத்துள்ளது ஸ்பைஸ்ஜெட். இந்த ஆஃபரை ஆப்ஸ் வழியாக மட்டுமே பெற முடியும் என்றும், மேலும் இந்த ஆஃபரை இரு வழி பயணத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதிலும் நீங்கள் ஒரு வழி பயணத்துக்கு இந்த ஆஃபர் விலையிலும், மற்றோரு பயணத்துக்கு முழுமையான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும், இந்த ஒரு ரூபாய் என்பது வரி சேர்க்கப்படாத விலை என்றும் அதற்கான வரியை மட்டும் ஒரு ரூபாயோடு சேர்த்து செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

ஜூலை 15ம் தேதி துவங்கும் இந்த ஆஃபர் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும் என்று கூறியுள்ளது ஸ்பைஸ்ஜெட். இதன் மூலம் ஒரு லட்சம் டிக்கெட்டுகளை விற்க இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
இ-காமர்ஸ் உத்தியை தொடருகிறதா ஸ்பைஸ்ஜெட்:
இ-காமர்ஸ் நிறுவனங்கள் இதே போன்று ஆப்ஸில் பொருட்களை விற்க துவங்கியுள்ளது. மிந்த்ரா போன்ற நிறுவனங்கள் தங்கள் இணையதள சேவையை நிறுத்தி ஆப்ஸ் சேவையை மட்டும் தொடருகின்றன. இதே உத்தியை தான் ஸ்பைஸ்ஜெட்டும் கையில் எடுத்துள்ளது. இப்படி செய்யும் போது ஆப்ஸை நிறைய பேர் டவுன்லோட் செய்யவும் அதன் மூலம் அந்த பிராண்டை மக்களுக்கு அடிக்கடி நினைவு படுத்த முடியும் என்பது இதுபோன்ற நிறுவனங்களின் நோக்கம்.
என்ன பயன்?
ஒரு குறிபிட்ட நிறுவனத்தின் ஆப்ஸை ட்வுன்லோட் செய்துவிட்டால் நாம் அடிக்கடி விரும்பும்  பயண இடங்களையோ அல்லது அடிக்கடி பயணம் செய்யும் மாதத்தையோ ஆப்ஸ் நினைவில் வைத்திருக்கும் அதற்கேற்ப புஷ் நோட்டிஃபிகேஷன் எனும் சிறப்பு ஆஃபர் செய்திகளை திரையில் திடீர் அறிவிப்புகளாக வெளியிடும். அப்படி வெளியிடும் ஆஃபர்களை மக்கள் எளிதில் பயன்படுத்தி கொள்ள முடியும் அதேசமயம் வேறு  பிராண்டுக்கு மாறாமலும் இருப்பார்கள் என்பதே உத்தி.

கணினியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கையில் செல்போன் மூலம் இணைய சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டி போட மற்றும் இலக்கை அடைய நினைக்கும் கருவி தான் இந்த ஆப்ஸ்கள்.
இந்த ஆஃபர்கள் ஒரு இம்பல்ஸ் பர்சேஸ் தான். ஒரு வழி பயணத்துக்கு ஒரு ரூபாய் என ஆஃபரில் பயணிக்க நினைத்து மறு வழியில் பழைய கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற மனநிலைக்கு வருபவர்களுக்கு இது சரியானதாக இருக்கும். ஆனால் அடுத்த வருடம் பயணிக்க இன்று புக் செய்பவர்களுக்கு இது பயணளிக்காது என்றாலும் அவர்களை தொடர்ந்து தொடர்பில் வைத்திருக்க இந்த ஆப்ஸ் உத்தி உதவும் என்றும் விமான பயணிகள் கருதுகின்றனர்.
இது போன்ற ஆஃபர்கள் வெறும் ஆஃபர்கள் மட்டுமல்ல அதன் பின் மிகப்பெரிய சந்தைப்படுத்துதல், வியாபார உத்திகள் இருக்கும் என்பதே உண்மை.



No comments:

Post a Comment