சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Jul 2015

இந்தியாவின் முதல் பெண் 'பாடி பில்டர் ': ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி அஸ்வினி!

பொதுவாக பாடி பில்டிங் என்பது ஆண்கள் பங்கேற்கும் விளையாட்டு. இந்திய பெண்கள் அந்த பக்கமே திரும்புவதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை உடைத்து எறிந்திருக்கிறார் ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி ஒருவர். மும்பையைசேர்ந்த அஸ்வினி வாஸ்கர் என்பவர்தான் அவர். இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் பாடிபில்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரை அஸ்வின சாதாரண இந்திய பெண்களை போலத்தான் இருந்தார்.  ஓவர் வெயிட் காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்தார். தோழிகள் கூறியதன் பேரில், உடல் வெயிட்டை குறைக்க ஜிம்முக்கு சென்றவர்தான் தற்போது பாடி பில்டராக மாறி விட்டார். 

ஜிம்மில் முதலில் சாதாரண வெயிட்டை தூக்க பழகிய அஸ்வினி, அதற்கேற்றார் போல் புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொண்டார். உணவுக்கேற்ற வகையில்  உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அஸ்வினியின் உடல் மெல்ல மெல்ல முருக்கேறத் தொடங்கியது.
இதன் காரணமாக அஸ்வினியின் ஆர்வம் அதிகரித்தது. முழு நேர பாடிபில்டிங்கில் ஈடுபடுவதற்காக மீன்வளத்துறை ஆராய்ச்சி கல்லூரியில் பார்த்து வந்த வேலையையும் உதறினார். அஸ்வினியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரது தந்தை மிகுந்த ஊக்கமளித்தார்.

தற்போது 32 வயதான அஸ்வினி 2013ஆம் ஆண்டு முதல் பாடி பில்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 7 சர்வதேச போட்டிகளில் அஸ்வினி பங்கேற்றுள்ளார்.  ஆணழகர்களுக்கு கிடைப்பது போன்ற ஸ்பான்ஷர்கள் பெண்ணழகிகளுக்கு கிடைப்பதில்லை என்ற நிலை இந்த துறையில் இருக்கிறது.  இதுவரை ஒரு நிறுவனம் கூட அஸ்வினியை ஸ்பான்ஷர் செய்ய முன்வரவில்லை . ஆனால் அஸ்வினியின் கடின உழைப்பு விரைவில் அவருக்கு நல்ல ஸ்பான்ஷர்ஷிப் கிடைக்க வழி வகை செய்யும் என்று அஸ்வினி நம்புகின்றார்.



No comments:

Post a Comment