வீட்டு சமையலறையில் எந்த ஒரு வாடகையும் தராமல், சொந்த வீடு போல் இருப்பது தான் கரப்பான் பூச்சி. எப்போது சமையலறைக்கு போய் லைட்டை போட்டாலும், அங்கும் இங்கும் ஜாலியாக ஓடிக்கொண்டிருக்கும். அதுமட்டுமில்லாமல், அது பெரும்பாலும் இருக்கும் இடம் சமையலறையில் இருக்கும் ஷெல்ப், கேபினட், சிங்க் போன்றவை தான். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும், அதை விட்டு, வீட்டில் கரப்பான் பூச்சியோடு இருந்தால், நோய் கூட விருந்தாளிப் போல் வந்துவிடும். எனவே அத்தகைய கரப்பான் பூச்சியை அழிக்க என்ன தான் ஸ்ப்ரே அடித்தாலும் மறுபடியும் வந்துவிடும். ஆனால் இப்போது ஒரு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை விரட்டுங்கள்!!!
* சர்க்கரையை வைத்து கரப்பான் பூச்சியை அழிக்கலாம். அதற்கு சர்க்கரையை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது போரிக் ஆசிட் பவுடரைப் போட்டு கலந்து, கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வெளிப்படையாக வைத்தால், அதை சாப்பிட்டுவிட்டு, இறந்துவிடும்.
* முட்டையின் ஓடுகள் கரப்பான் பூச்சிக்கு எதிரி. முட்டையின் ஓட்டை ஷெல்ப் மற்றும் கேபினட்டின் மூலைகளில் வைத்துவிட்டால், அதன் நாற்றத்திற்கு கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
* கிராம்பு ஒரு வகையான காரமான பொருள். இதனை குழம்பு, கிரேவி மற்றும் ஹெர்பல் டீ போன்றவற்றில் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த நாற்றத்திற்கும் கரப்பான் பூச்சிகள் நிச்சயம் வராது. அதற்கு சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் வைத்துவிட்டால், அதனை தீண்டாமல் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.
* வீட்டில் உள்ள பூச்சிகளை அழிக்க போராக்ஸ் பவுடரைத் தான் பயன்படுத்துவோம். ஆகவே அளவுக்கு அதிகமான அளவில் கரப்பான் பூச்சி இருந்தால், இரவில் படுக்கும் முன் இந்த பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். அதுவே
2-4 கரப்பான் பூச்சிகள் இருந்தால், அந்த பவுடரை லேசாக தூவி விடலாம். ஆனால் இந்த பவுடர் போய்விட்டால், கரப்பான் பூச்சி மறுபடியும் வந்துவிடும். ஆகவே 15
நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்.
* ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதனை கேபினட்டில் வைத்து, கேபினட்டை மூடி விட வேண்டும். ஆனால்
10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் அதன் வாசனை போய்விடும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மேலும் வாரத்திற்கு ஒரு முறை கிச்சனை சுத்தம் செய்தால் நல்லது
No comments:
Post a Comment