சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Feb 2015

வரி செலுத்தாத வி.ஐ.பி.க்கள் யார் யார்? : பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் சில அரசியல் வி..பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது.
அதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது. இருப்பினும் மாநகராட்சியின் நடவடிக்கைகளை சிலர் கண்டுகொள்ளவில்லை. வரி செலுத்தாதவர்கள் 'கொடாக்கண்டன் என்றால் இந்த முறை மாநகராட்சி விடாக்கண்டனாக' வரியை செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த பட்டியலில் முதலில் இடம் பிடித்து இருப்பவர் தி.மு..வின் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசியா. இவருக்கு சொந்தமான ஓட்டல் தி.நகரில் உள்ளது. இந்த ஓட்டல் 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரத்து 19  ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த தொகையை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததும் ஒரு கோடி ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு மீதமுள்ள தொகைக்கு மாநகராட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது ஓட்டல் நிர்வாகம். தி.மு.. பிரமுகரைப் போல மேலும் சில வி..பி.க்களின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.


மாநகராட்சி வெளியிட்ட பட்டியலில் அடுத்த இடத்தில் 'கிவ்ராஜ் டெக் பார்க் பிரைவெட் லிமிடெட்' உள்ளது. இந்த நிறுவனம் 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 679 வரி பாக்கி வைத்துள்ளது. இதே போன்று ரமணி ஓட்டல் லிமிடெட் ராமி மாலுக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 811 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள டிஎம்பி அன்வர் அலி, 98 லட்சத்து 94 ஆயிரத்து 652 ரூபாயும், மீனம்பாக்கம், நியூ கார்கோ காம்பளக்ஸிக்கு 57 லட்சத்து 72 ஆயிரத்து 494 ரூபாயும், மயிலாப்பூர் சென்னை சிட்டி சென்டர் 38 லட்சத்து 18 ஆயிரத்து 149 ரூபாயும், சி.எஸ்.. டயோசீசன் 23 லட்சத்து 60 ஆயிரத்து 492 ரூபாயும், தி.நகரில் உள்ள சைரன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலைப்பள்ளி 13 லட்சத்து 34 ஆயிரத்து 60 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள பார்க் ஓட்டல் லிமிடெட் 11 லட்சத்து 7 ஆயிரத்து 356 ரூபாயும் உள்பட 182 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரத்து 139 ரூபாய் வரி பாக்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் திடீரென வரிவசூலில் ஆர்வம் காட்டுவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.
பெயரைக் குறிப்பிட விரும்பாத சில வருவாய் துறை அதிகாரிகள், "கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் மாநகராட்சியில் திணறி வருகிறது. இங்கு ஒப்பந்தப்பணியில் பணியாற்றும் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உள்ளது. திட்டமிடாமல் அதிகளவில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததே இதற்கு காரணம். இதனால் மாநகராட்சி முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன" என்றனர்.

மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். "நிதி நெருக்கடியை சமாளிக்க சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் வரி பாக்கியை வசூலிக்க வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது அந்த துறையில் உள்ளவர்கள் ஊழியர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இதனால் கல்வித்துறை, சுகாதாரத்துறை ஆகிய இரண்டு துறைகளில் உள்ள ஊழியர்களும் வரி வசூல் பணியை மேற்கொள்ள வேண்டும். வரும் நிதி ஆண்டுக்குள் வரிப்பாக்கியை வசூலிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதனால் வரி வசூலில் முழு முயற்சியில் ஊழியர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இருப்பினும் வரி பாக்கி தொகை முழுமையாக வசூலிக்கப்படவில்லை.

அம்மா உணவகத்தால் 70 லட்சம் ரூபாய் இழப்பு

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் 200 வார்டுகள் உள்ளன. நகரின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு குறுகிய காலத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மேலும் அம்மா உணவகம் மூலம் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் வருவாய், வருவாய்துறையை மட்டுமே நம்பி இருக்கிறது. அதிலும் வரிப்பாக்கி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இவற்றை இந்த நிதியாண்டுக்குள் வசூலிக்க ஒரே அடியாக ஆர்வம் காட்டப்பட்டுள்ளது" என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரி பாக்கியை வசூலிக்க திருநங்கைகள் ஆட வைக்கப்பட்டுள்ளனர். இது திருநங்கைகளை சேர்ந்த ஒரு தரப்பினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சியின் வருவாய் அலுவலர் திவாகரிடம் பேசினோம். "இந்த நிதியாண்டுக்குள் 550 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும். இதில் 408 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரிபாக்கி வைத்துள்ளவர்களின் விவரங்கள் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.

மாநகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்டி வரும் தேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், "அம்மாவை திருப்திப்படுத்தவே பல கவர்ச்சிகரமான திட்டங்கள் மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை முழுமையாக நிதி தேவை. ஆனால் அதையெல்லாம் திட்டமிடாமல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவைகள் பாதியில் நிற்கின்றன. குறிப்பாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் முழுமையாக நிறைவேறாததால் மழைக்காலத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வடசென்னையில் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டடுக்கு சமூக நலக்கூடத்தை கட்ட அடிக்கல் நாட்டியதோடு சரி. இந்த தொகுதி அமைச்சர் வளர்மதி வசம் இருந்தாலும் மாநகராட்சி நிதியில்லாதால் இதுவரை அந்தப்பணிகள் தொடங்கப்படவில்லை. கிடப்பில் பணிகள் போடப்பட்டதால் மணல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை டெண்டர் எஸ்டிமேட்டை விட 20 சதவிகிதம் இப்போது அதிகரித்து விட்டது.
இதனால் மாநகராட்சி நிதி ஒதுக்கினாலும் ஒப்பந்தகாரர்களால் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை சில இடங்களில் உள்ளன. மேலும் ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சுமார் 200 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எதையும்  திட்டமிட்டு செயல்பட்டால் அதை முழுமையாக முடிக்கலாம்" என்றார்.



No comments:

Post a Comment