சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Feb 2015

நண்பரை காதலனாக ஏற்றுக்கொள்ள பெண்கள் மறுப்பது ஏன்?

மீபத்தில் மேலைநாட்டு பெண்களிடம் நீங்கள் உங்கள் நண்பரை காதலனாக ஏற்றுகொள்வீர்களா? என்று ஒரு சர்வே நடத்தபட்டது. அதில் பங்கு எடுத்த பல பெண்கள், 'முடியவே முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை எல்லை' என்று பதில் தந்தனர். ஏன் அப்படி சொல்கிறீர்? என்று திருப்பி கேட்டதுக்கு அவர்கள் அத்தனைப் பேரும் கோரசாக சொன்ன பதில் 'ஷெல்லி வொயிட் ஹெட்'. சமீபத்தில் ஷெல்லியிடம் அவரது பால்ய தோழன் இவான் 'உன்னுடன் வாழ்ந்த ஏழு வருட திருமண வாழ்க்கையை  இதோடு முடித்து கொள்வோம்' என்று விலகியிருக்கிறார். அவர் விலகிய பின் ஷெல்லிவிட்ட அறிக்கைதான் பெண்களை, இனிமேல் நண்பர்களை நண்பர்களாகவே பார்ப்போம் என்று சொல்ல வைத்திருக்கிறது.

இதைப் பற்றி ஷெல்லி பேசுகையில் "நானும் இவானும் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடம் ஆகிறது. எங்களுக்குள் எந்த மன கசப்பும் இல்லை. எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும் போது இவானை முதன் முதலில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவனது குடும்ப உறுப்பினர்களும், எங்கள் குடும்ப உறுப்பினர்களும் நல்ல நண்பர்கள். நானும் அவனும் மணிக்கணக்கில் விளையாடுவோம். அவன் அப்போதே பயங்கர அறிவாளி. ஏதாவது ஜோக் அடித்து என்னை சிரிக்க வைத்து கொண்டேயிருப்பான். சிறு வயதில் அவனோடு விளையாடிய நாட்களை என் வாழ்நாளின் சிறந்த பொழுதுகள் என்பேன்.


அவனது அம்மா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு என் மாமாவை கல்யாணம் செய்து கொண்டார். அது எங்களை இன்னும் இனைத்தது. பள்ளியைவிட்டு நேராக அவன் வீட்டுக்கு சென்று விடுவேன். எனக்கு பதினாறு வயது இருந்த போது இவான் டிஸ்கோக்கு போகலாம் என்று அழைத்தான். அப்போது எனது பாய் ஃப்ரெண்டு மறுத்ததால் அவனுடன் போக முடியவில்லை. எனக்கு 19 வயது இருக்கும் போது சிமோன் (simon) என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக இவானின் அம்மாவிடம் சொன்னேன். 'நீ இவானைத் திருமணம் செய்து கொள்வாய் என நினைத்தேன்' என்று அழுதுவிட்டார். ஆனால் அவர் என் மேல் கோபிக்கவில்லை. அவரது வீட்டை எங்கள் கல்யாண பந்தலுக்காக கொடுத்தார். அவர் 'நீ ஏன் என் மகனை திருமணம் செய்து கொள்ளகூடாது' என்ற கேட்ட பின்புதான் முதன்முதலில் அவனை மனதில் அப்படி உருவகப்படுத்தி பார்த்தேன்.

பின்பு அவனது வீட்டிலேயே என் முதல் கல்யாணம் நடந்தது. நான் திருமண உடை அணிந்து நடந்து வந்த போது குழந்தைச் சிரிப்புடன் 'உன் கண்ணு இப்படி இருக்கு, ஹேர் கலர் சூப்பர்' என்று வர்ணித்த இவானை என்னால் மறக்கவே முடியாது. வாழ்க்கை சக்கரம் ஓடி கொண்டேயிருந்தது. என் கணவர் சிமோன் மார்க்கேட்டிங் துறையில் இருந்தார். எங்களுக்கு பணம் பிரச்னை வந்ததேயில்லை. திருமணமாகி மூன்று வருடம் கழித்து நான் கருவுற்றேன். அதனால் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே தங்கினேன். எனக்கு திருமணமான பிறகு இவானால் என்னுடன் பெரிதாக பேச முடியவில்லை.

அப்போது அவனுக்கு பயணங்களிலே நாட்டம் இருந்தது. ஊர் சுற்றி கொண்டேயிருப்பான். ஆனால் அவன் எங்கு இருந்தாலும் என் பிறந்த நாளன்று எனக்கு போன் செய்து விடுவான். எனக்கும் சிமோனுடனான தாம்பதிய வாழ்க்கையில் மூன்று குழந்தைகளைப் பெற்று எடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் விளையாடியது புற்றுநோய். சிமோன் புற்றுநோய் பாதிக்கப்பட்டு 49 வயதில் இறந்து போனார். அவர் உயிரோடு இருந்தவரை அவருக்கு நல்ல மனைவியாக இருந்தேன். வருடங்கள் ஓடின. கிறிஸ்துமஸ் தினத்தன்று இவான் போன் செய்து என்னுடன் காபி சாப்பிட வருகிறாயா? என்றான். அவனுடன் இருக்கும் போதெல்லாம்  எல்லா பிரச்னைகளையும் மறந்து ஜாலியாக இருப்பேன். இரண்டு நாட்கள் கழித்து புத்தாண்டு பார்ட்டு வீட்டுக்கு வந்துடு என்றான். அப்போது கிட்டதட்ட இருபது நண்பர்கள் என்னை புது வருட பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். இருந்தும் நான் இவானுடன் நேரம் செலவழிப்பதே விரும்பினேன்.

சரியாக மணி 12 அடித்தது. இவான் என் முன் முட்டி போட்டு, கையில் முத்தம் கொடுத்தான். பின்பு என் கண்களைப் பார்த்து என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? இனியும் என்னால் உன்னை இழக்க முடியாது. ஏன்னென்றால் என் பள்ளி பருவத்தில் இருந்து நான் உன்னைக் காதலித்து வருகிறேன் என்றான். இதைச் சொன்னபோது அவன் கண்கள் கலங்கியிருந்தன. அவன் கேட்ட அடுத்த நிமிடமே நான் மறுக்காமல் சம்மதித்தேன். அதன் பிறகு ஏழு வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஒருநாள் திடீரென என்னிடம் வந்து 'நாம் பிரிந்துவிடுவோம்' என்றான்.


அன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி. அதனால்தான் என்னுடன் விளையாடுகிறான் என்று நினைத்து அதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஒரு வாரம் கழித்து அவனை வேறுயொரு பெண்ணுடன் பார்த்துவிட்டு கிட்டதட்ட செத்தேபோனேன். அவனிடம் எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லிவிட்டான். அவனுக்கு என் மேல் எதோ வருத்தம். எனக்கு எதாவது பிரச்னை வந்தால் இவான் தோளில் சாய்ந்தே அழுவேன். நாங்கள் நல்ல நண்பர்கள்; ஆனால் தம்பதிகளா? என்பது சந்தேகேமே... என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்களே! நீங்கள் தயவு செய்து உங்கள் நண்பரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். எதேனும் பிரிவு நேர்ந்தால் நீங்கள் உங்கள் கணவரை மட்டும் இழக்கப் போவதில்லை. உங்கள் நண்பரையும் சேர்த்துதான் இழந்து விடுகிறீர்கள். எனக்கு இப்போது என் கணவர் இவான் வேண்டாம், ஆனால் நிச்சயம் என் நண்பன் இவான் வேண்டும். ஆனால் அவனோ இப்போது எல்லாமே முடிந்துவிட்டது என்கிறான். ஒருவர் என்ன உறவுடன் நமக்கு அறிமுகமாகிறாரோ, அந்த உறவு முறையிலேயே அவர் இருக்க வேண்டும். மாற்ற நினைத்தால் ஆபத்துதான் என்பதை இப்போது கண்டு கொண்டேன்'' எனக் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment