சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் இங்கே...
* கடந்த 1983 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், மேற்கு இந்திய அணியை தோற்கடித்து இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் அதற்கு பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1986 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் வெற்றியை ருசித்தது. அதேபோல் 2011ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மூன்றுஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது


*இந்திய அணி மட்டும்தான் 1983 ஆம் ஆண்டு 60 ஓவர் உலகக் கோப்பைத் தொடர்,  2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. 

*கடந்த 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக இளம் வீரர்  சாகித் அப்ரிடி களமிறங்கினார். கென்யத் தலைநகர் நைரேபியில் இலங்கைக்கு எதிரான நடந்த ஆட்டத்தில் விளையாட அவருக்கென்று பிரத்யேக பேட் இல்லை. அந்த சமயத்தில் டெண்டுல்கர் பயன்படுத்திய பேட் ஒன்றை  பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ், சாகித் அப்ரிடிக்கு  வழங்கினார். இந்த பேட்டை கொண்டு விளையாடிய சாகித் அப்ரிடி,  37 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். முதன் முதலில் மிக விரைவில் அடிக்கப்பட்ட அபார சதம் இது. 

*டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கிறிஸ் கெயில். கடந்த 2012 ஆம் ஆண்டு பங்ளாதேஷ் அணிக்கு  எதிராக இந்த சாதனையை படைத்தார் அவர் . 137 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் முதல் பந்தில் சிக்சர் அடித்தது இல்லை. 

மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் அப்பாஸ் அலி ஆவார். கடந்த 1960ஆம் ஆண்டு மும்பை பிராபோன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அவர் 50வது ரன் அடித்த போது, மைதானத்திற்குள் புகுந்த இளம் ரசிகை ஒருவர் அப்பாஸ் அலியின் கன்னத்தில் முத்தமிட்டு பாராட்டினார்.

டெஸ்ட் போட்டியில் சச்சினை விட காம்ப்ளியின் சராசரி ரன்விகிதம் அதிகம். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சராசரி ரன் விகிதம், 53.78 ஆகும். 17 போட்டிகளில் விளையாடியுள்ள காம்ப்ளியின் சராசரி  ரன்விகிதம் 54.20 .

டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனையை படைத்தவர் சுனில் கவாஸ்கர். இதே கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் மூன்று முறை முதல் பந்திலேயே அவுட் ஆகியும் சாதனை படைத்துள்ளார்.


*இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 8-6-63 பிறந்தார். அது என்னவோ என்ன மாயமோ தெரியவில்லை... டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கையும் 8663 தான். 

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆலன் பார்டர்  153 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். 

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பீட்டர் சிடில் பிறந்த நாளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிறந்த நாளில் தனது, பிரிஸ்பேன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 





No comments:

Post a Comment