Posted Date : 11:25 (11/02/2015)Last updated : 12:28 (11/02/2015)
சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்... இதே வார்த்தையை தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் பல காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் சொல் மட்டும்தான், அவர் சமூகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து. தற்போது அதே வார்த்தையை கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கரும் உதிர்த்துள்ளார். சச்சின் இந்த சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார்? அல்லது இதுவரை என்ன செய்துள்ளார் என்றால் அதற்கு சரிவர பதில் கிடைக்காது.
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்ற மாயை விளையாட்டால் எல்லாவிதமான வசதிகளையும் பெற்றவர் சச்சின். சாதாரண ஆசிரியருக்கு மகனாக பிறந்து, சுனில் கவாஸ்கரை குருவாக கொண்டு அவரைப் போலவே கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். பெரும்பாலான போட்டிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே சச்சின் போராடுவார் என்று சக கிரிக்கெட் வீரர்கள் கூட அவர் மீது குற்றம் சுமத்துவது உண்டு
விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்னா வழங்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்த போது, ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்துக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம். ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், தயான்சந்திடம் எங்கள் நாட்டுக்கு வந்துவிடுங்கள் உங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருகிறேன் என்று நேரடியாக அழைப்பு விடுத்த போது, எனது தேசம்தான் எனக்கு முக்கியம் என்று அதனை ஏற்க மறுத்த தேசபற்றாளர் அவர். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான விளையாட்டு வீரரையே பின்னுக்குத் தள்ளி விட்டு கிரிக்கெட் என்ற ஒற்றை மந்திரம் சச்சினுக்கு பாரத ரத்னாவையே பெற்று தந்தது.
கிரிக்கெட் வழியாக ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்த சச்சின், தனக்கு பரிசாக வந்த வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு கேட்ட கதையும் உண்டு. எல்லாவற்றையும் விட மேல்சபை எம்.பி.யாகி நேரடியாக இந்த சமூகத்துக்கு பணிபுரியும் வாய்ப்பும் சச்சினுக்கு வழங்கப்பட்டது. அப்போதும் ஒரு நாள் கூட அவைக்கு செல்லாமல் பலரது கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறார் இந்தியாவின் இந்த நட்சத்திர பேட்ஸ்மேன். இவை எல்லாவற்றையும் மறந்து விடுவோம்...! இந்த சமூகம் அவரிடம் எதுவும் கேட்காமலேயே இப்போது சச்சினும் சொல்கிறார்... 'இந்த சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்...' என!
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்கிறார் என்று...
|
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
11 Feb 2015
'சமூகத்துக்காக ஏதாவது செய்யணும்..!'- இப்போது இவரும் துடிக்கிறார்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment