Posted
Date : 18:16 (30/01/2015)Last updated : 18:23 (30/01/2015)
பொட்டுவின் மனைவி ரோகிணி மீனா ''என் கணவர் நல்லவரோ கெட்டவரோ,
ஆனால், அவர் கடைசி வரையில் தி.மு.க.வில்தான் இருந்தார். தலைவரின் மகனுக்குத்தான் விசுவாசமாக இருந்தார். அவர்களுக்காகத்தான் சம்பாதித்து கொடுத்தார். அதனால் பகையை சம்பாதித்தார்.
அவரிடம் வாங்கி தின்றவர்கள் எல்லோரும் இன்று மறந்து விட்டார்கள். இன்று எங்கள் குடும்பத்தை கவனிக்க யாருமில்லை. அப்படி என்ன தப்பு செய்துவிட்டார் என் கணவர்? இன்னைக்கு மதுரையிலும், சென்னையிலும் கட்சியில் இருப்பவர்கள் எல்லோரும் யோக்கியமா? ஏன் என் கணவரின் கொலை வழக்கில் கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதுவரை எங்களை பார்க்க யாரும் வரவில்லை'' என்று பார்ப்பவரிடமெல்லாம் புலம்பி வருகிறாராம்.
இதையே பொட்டுவின் சகோதரர்களும் கேட்டு வருகிறார்கள். இது அப்பகுதியில் இருக்கும் அ.தி.மு.க.வினருக்கு தெரிந்து அவர்கள் பொட்டுவின் குடும்பத்தாரை அணுகி அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டு நியாயம் கேளுங்கள் என்று பேசி வருவதாக தகவல் வருகிறது. இதற்கான பதிலை, அழகிரி பிறந்த நாள் முடிந்து, மறுநாள் பொட்டுவின் நினைவு தினத்தில் அறிவிப்பார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அப்படி அவர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்தோ அல்லது மீடியாக்களை அழைத்தோ பேசி விடக்கூடாது, அதனால் தங்களுக்கு சிக்கல் வரும் என்பதில் தி.மு.க.வின் முக்கியப்புள்ளிகள் கண்காணித்து வருகிறார்களாம். ஆனால், மதுரை தி.மு.க.வினரோ, ''பொட்டு ஒன்றும் பரம்பரை கட்சிக்காரர் இல்லை. பிழைப்புக்காக வந்தவர். சாதிப்பாசத்தில் பி.டி.ஆருடன் இருந்து, பின் அழகிரியின் வீக்னசை தெரிந்து கொண்டு ஒட்டிக்கொண்டவர். கட்சிக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. கட்சிக்காரனுக்கு உதவி செய்ததுமில்லை. பொட்டு, அழகிரிக்கு எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். பொட்டுவால் கட்சிக்காரன் ஒருத்தன் கூட பயணடைந்ததில்லை. இவரைப்போலவே அழகிரியுடன் இன்னொரு அடாவடிக் கும்பல் கொட்டமடித்து வந்தது. அப்படிப்பட்ட பொட்டுவுக்கும், அட்டாக்குக்கும் இடையே நடந்த பிரச்னையாகத்தான் இதை பார்க்கணும்'' என்கின்றனர். உதாரணத்துக்கு... தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரையில் உணவுக் கடத்தல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி.யாக இருந்த ஜெயஸ்ரீ, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் மாமூல் வசூல் செய்து பல லட்சங்களோடு வசமாக மாட்டிக் கொண்டார். இவருக்கு எதிராக ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியது. இந்த வழக்கை இசக்கி ஆனந்தன் என்ற நேர்மையான அதிகாரி விசாரித்தார். அந்த பெண் போலீஸ் அதிகாரி, பொட்டு சுரேஷ்க்கு ரொம்ப வேண்டப்பட்டவர் என்பதால், அப்போது பவர்சென்டராக இருந்த பொட்டுவின் நண்பரான உளவுத்துறை ஜாபர்சேட் மூலம் ஜெயஸ்ரீ மீதான வழக்கை ஊத்தி மூடவைத்தார். இதில் கொடுமை என்னவென்றால் அந்த லஞ்ச வழக்கை விசாரித்த இசக்கி ஆனந்தன் அத்துறையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் பல புகார்கள் கிளம்பிய அந்த ஜெயஸ்ரீயை மதுரை மாநகரின் டி.சி.யாக்கி அழகு பார்த்தார் பொட்டு. நீரா ராடியாவுடன் முன்னாள் அமைச்சர் பூங்கோதை உரையாடியதாக வெளியான டேப்பில் அழகிரியை பற்றி கமெண்ட் செய்ததாக அப்போது கூறப்பட்டது. அதனால் அழகிரி, பூங்கோதை மீது கோபத்தில் இருந்தார். அதில் உங்களை கூறவில்லை என்று அழகிரியை சமாதானப்படுத்தியது ஜாபர் சேட்டும், பொட்டுவும்தான்.ஆனால்,பொட்டுவுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது என்பது அழகிரிக்கு தெரியவில்லை. அந்தளவுக்கு ஜாபரும், பொட்டுவும் நண்பர்களாக இருந்து பல விஷயங்களை சாதித்தார்கள். கிரானைட் புள்ளிகளிடம் பொட்டு மிக நெருக்கமாக இருந்தார். தன்னை பற்றி எழுதி விட்டார்கள் என்பதற்காக மதுரையில் ஒரு பத்திரிகை நிருபர் மீது பொய் வழக்கு போட்டு, அவர்கள் குடும்பத்தினருக்கு போலீஸ் மூலம் ஏகப்பட்ட டார்ச்சரை கொடுத்தார் பொட்டு. இப்படி தன்னை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் போலீஸ் மூலம் பழி வாங்குவதுதான் பொட்டுவின் வேலை. இதற்கு அவருக்கு அப்போது உதவியவர் ஜாபர்சேட். ஆனால், பொட்டுவின் ஆட்டம் அப்போது மதுரை கமிஷனராக பணியில் அமர்ந்த கண்ணப்பனிடம் பலிக்கவில்லை. தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டார்கள் என்று தி.மு.க. ஆட்சியில் போலீஸ் எஸ்கார்ட் வாங்கியிருந்தார். அதை நீட்டிக்க கண்ணப்பன் மறுத்து விட்டார். அதற்கு பின் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில் எஸ்ஸார் கோபியோடு, பொட்டுவும் கைதானார். இப்படி அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் பொட்டுவுக்கு சனி பிடிக்க ஆரம்பித்தது. ஜெயலலிதாவே ஒரு கூட்டத்தில் பேசும்போது, அழகிரி தென்மண்டல முலமைச்சர் என்றால், துணை முதல்வர் பொட்டு சுரேஷ் என்று கிண்டலடித்தார். அந்தளவுக்கு பொட்டுவின் கொடி உயரப் பறந்தது. அதே நேரத்தில் அட்டாக்கும் சாதாரணமான ஆளில்லை. ரவுடியாக உருவாகி ஒரு அரசியல் பின்னணியில் நுழைந்துகொண்டு அவர் பண்ணாத சேட்டைகள் இல்லை. அவரது உறவினர் ஒருவர் எம்.எல்.எம். பிசினசில் ஈடுபட்டு ஏகப்பட்ட பணத்தை சேர்த்திருந்தார். அவரை மிரட்டி பணத்தை பிடுங்கியவர் அட்டாக் பாண்டி. அதுபோல் ஒரு பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் மூன்று பேர் சாவதற்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர். மதுரையில் யார் சொத்து வாங்கினாலும், அங்கு வில்லங்கம் செய்து பணம் சம்பாதித்தவர் என்று இவர் மேல் ஏகப்பட்ட புகார்கள். அட்டாக் பாண்டிக்கு காவல்துறையில் நட்பு தொடர்வதால்தான் அவரை இன்னும் பிடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. சரி, தற்போது அட்டாக் பாண்டி எங்குதான் இருக்கிறார்...? |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
9 Feb 2015
பொட்டு சுரேஷ் கொலை... அட்டாக் என்ன ஆனார்? (மினி தொடர்-4)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment