சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Feb 2015

வாஸ்து சாஸ்திரம் - பகுதி 2


இருக்குமிடம் Orientation
வாஸ்துவில் இருப்பிடம் முக்கியத்துவம் உடையது. வீட்டு வழியாக சக்தி நகர வழி கொடுக்கிறது. உள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக வீட்டில் வழி செய்கிறது. பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவது ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது. (Ideally Balanced)) என்பதை முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வீட்டு மனையைப் பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிட வேண்டும். வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana) வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது. இது தென்மேற்கு திசைக்கு நகருமுன் ஏற்படுகிறது. கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது.
கோடுகளும், திசைகளும் Lines and Directions
முன் சொல்லப்பட்டது போல சதுரம் பூமியைக் குறிக்கிறது. கிழக்கு&மேற்கு, வடக்கு&தெற்கு திசைகள் அவற்றின் சந்திப்பான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கிறது. இருப்பிடமும் அதன் திசையும் வாஸ்துவின் இரு முக்கிய கொள்கைகள். வாஸ்துப்படி வடக்கு&தெற்கு கோடு நெருப்புக்கோடு & அக்னி ரேகை மேல் நோக்கு திசையுடையது. அது வையகத்தின் முதுகு எலும்பு போன்றது. கிழக்கு&மேற்கு கோடு தண்ணீர் கோடு. விரிவடையும் உணர்வோடு நிலையாக சமநிலையில் உள்ளது. வடகிழக்கு&தென்மேற்கு திசைகள் காற்றுக்கோடு விணீக்ஷீutணீ வேகமான நகருவதற்கு உதவுகிறது. இந்தக் கோடுகள் ஒரு குறுக்குப் புள்ளியில் சந்திக்கிறது. இது (பிரம்மாகுறி) (பிரம்மஸ்தானம்) கருப்பை என அழைக்கப்படுகிறது. இது உருவங்களின் முழுத்தோற்றங்களையும் பிறக்க வைக்கிறது. எட்டுதிக்குகள் பயனுள்ள சக்தியளிக்கும் திசைகள் கடவுள் உருவில் காக்கும் தேவதைகளாக நம் முன்னோர்களால் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேவதையும் தனித்தன்மை மிக்கது. மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கிறது. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்கு ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு. செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்க ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு, செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு சொந்தமானது. ஒவ்வொரு மூலைக்கும், தனி குணமும் தனி தேவதையும் உண்டு. வடகிழக்கு தேவதை ஈசானியன் தேவர்களில் இனியவர். காரணம் வடகிழக்கிலிருந்து தான் காஸ்மிக் எனர்ஜி இயற்கையாகவே பாய்கிறது. நெருப்பு தேவதை அக்னி வீட்டிலுள்ள பெண்களின் உடல் நலம் காப்பவர். இவர் தென்கிழக்கு மூலையின் அதிபதி. சுபகாரியங்களுக்கு உரியவர். (கன்னி) நிருதி அழிக்கும் பெண் தெய்வ அரக்கர்களின் தெய்வம். தென்மேற்கு மூலையின் அதிபதி. இவர் தலைவன், தலைமகள் அதிகாரம், உடல் ஆரோக்யம் வருமானம் இவைகளுக்கு அதிபதி. காற்று தேவதை வாயு வடமேற்கு மூலையின் அதிபதி. இவர் உடல்நலம், முன்னேற்றம் போன்றவைகளுக்கு அதிபதி. வருணன் மழைக்கு அதிபதியானவர் என கூறுகிறது. இந்திரன், இளம் வயதினர்க அதிபதியானவர். எமன், உயிர் உடலுக்கு அதிபதியானவர். குபேரன், செல்வத்திற்கு அதிபதியானவர். இந்த தேவதைகளின் செயல்பாடுகள் அவைகள் ஆளும் மூலையின் உடல் உள்ளம் இவற்றின் குணங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
பஞ்சபூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவைகள் ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும்.
ஆகாயம்
மற்ற நான்கு பூதங்களும் தடையின்றி சுழல்வதற்கு உதவுகிறது. மனிதனி¢ன் கேட்கும் திறமையும் இதைப் பொறுத்தே உள்ளது. இனிய, மென்மையான ஒலிக்கின்ற அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஆகாயம் ஆட்சி புரிகிறது. நன்மைகளை ஊக்குவிக்கும் காஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கம் தியானம், யோகா செய்வதற்கும் கல்வி, நற்காரியங்களுக்கும் வடகிழக்கு திசை தலைசிறந்தது.
வாயு
வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு அக்னியுடன் கூட்டுறவு கொண்டது. காரணம் காற்று நெருப்பை ஊக்குவிக்கும். இவ்விரண்டு பூதங்களும் சதா அசைந்து கொண்டிருக்கும் குணம் உடையவை. மனித உடலைத் தொடும் உணர்வினால் அறியப்படுகிறது. ஆதலால் அழகிய தோற்றமும், பொலிவும் நல்ல காற்றோட்டமும் மிகுந்த வீடுகள் அமைத்தல் நல்லது. வீட்டின் வடமேற்கு பகுதியின் ஸ்தானதிபதி ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்.
நெருப்பு அல்லது அக்னி
பஞ்சபூதங்களில் மிக முக்கியமானது. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. மனிதனின் பார்வைக்க தொடர்புடையது. வீட்டினில வெளிச்சம் பற்பல வண்ணங்கள் தட்பவெப்பநிலை மிக முக்கியமான அம்சங்கள் நெருப்பு முக்கோணமான வடிவில் உள்ள வீட்டுமனையை தவிர்க்க வேண்டும். அது விரும்பி வேண்டாத நெருப்பை தூண்டும். வீட்டின் தென்கிழக்கு பாகம் நெருப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சமையல் அறைக்கு உகந்த இடம் அக்னி. நமது ஜீரண உறுப்புகளோடும் சம்பந்தப்பட்டது. ஆதலால் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமைக்கப்பட்டது. உணவு, உடல் நலம் காக்கும் என்பதன் உறுதி செய்கிறது.
நீர்
நீர். திரவ லநயில் உள்ளதால் ஓயாது அசைந்து கொண்டே இருக்கும். அது வட்டத்தால் குறிப்பிடப்படுகிறது. வட்டவடிவமான கட்டம் ஓய்வு அற்ற நிலையின் உணர்வை உண்டாக்குகிறது. உதாரணம் (பார்லிமென்ட் கட்டடம்&டெல்லி) இது சுவை நீரைக் குறிக்கிறது. வாசனை அறியும் உணர்வுடன் தொடர்வுடையது. வீட்டில் தண்ணீர் குழாய் பாதையையும் ஒளி பிரதிபலிக்-கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடியின் மேல்மட்டம். முலாம் பூசாத கண்ணாடியின் மேல்மட்டத்தையும் குறிப்பிடுகிறது. வடமேற்க பாகம் குளியல் அறை, விருந்தினர் அறை அமைக்க மிகச் சிறந்த இடம். இங்கு பலதரப்பட்ட ஜனங்கள் அதிக நாள் தங்காது வந்து போகும் வாய்ப்பு உள்ளது.
பூமி
நிலம் அமைப்பின் குணத்தை குறிப்பிடுகிறது. பூமியின் மீதுள்ள நீர், நெருப்பு, காற்று இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து வாசனை அறியும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மணமும், நல்ல மணம் பரப்பும் (அரோமஸ்) மிகுந்த அளவில் வீட்டில் இருக்க வேண்டும். தென்மேற்கு (மூலை) பாகம் பூமியால் ஆளப்படுகிறது. பூமியின் ஒத்துப் போகும் குணம் அதிக எடை தாங்கும் குணம் உடையது. மதிப்பு மிகு மரச்சாமான்களும், சேமிப்பு அலமாரிகளும் வைக்க மிகவும் சிறந்த இடம் தென்மேற்கு. இந்த (ஐந்து) பஞ்சபூதங்களும் ஒன்றையொன்று அனைத்து செல்லும்போது முழுசக்தியின் தோற்றம் உருவாகிறது. இது வாஸ்து புருஷ மண்டலம் என அழைக்கப்படுகிறது. இது அளிவின் அடிப்படையில் கருதாது ஒவ்வொரு பூதங்களும் செயல்படும் பங்கு அளவின் விகித அடிப்படையில் அறிந்துகொண்ண வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பாகத்தில் பல அடுக்கு சக்திகளின் செயல்பாடுகளைக் குறிக்கிறது.
வாஸ்து புருஷ மண்டலம்
கட்டடமோ அல்லது ஒரு அறையோ வரைபடம் இல்லாமல் கட்டக்கூடாது. வாஸ்துவில் உபயோகப்படும் வரைப்படம் (வீட்டு பிளான் வாஸ் புருஷ மண்டலம் என்பது இது ஒரு தனிமனிதன் வடகிழக்கு&தென்மேற்கு வட்டத்தில் முகம் பூமியைப் பார்க்கும் நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையை குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் காஸ்மிக் சக்தி செயலாற்றும் உருவைக் குறிக்கிறது. வாஸ்து புருஷ மண்டலம் கோயில், வீடு, கட்டடம் திட்டமிட வழிவகுக்கிறது. இது மைக்ரோகோசம் (Microcosm) மைக்ரோ கோசத்துடன் சரியாக அமையவும், சூரிய ஒளி பரவுதலால் அதிக நன்மை அடையவும் உதவுகிறது. கட்டடம் உருவம் பெரியது. சிறியதுவாக இருக்க வேண்டுமெனும் கட்டுப்பாடில்லை. இது தனிக்கட்டடங்கள் திட்டமிடவும் முழு அளவில் பெரிய நகரம் திட்டமிடவும் உதவுகிறது. இடங்களின் அமைப்பு, ஒரு கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியின் விகிதாச்சாரம் அது கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் எல்லாம் வாஸ்து சொல்கிறது. மண்டலத்தின் வரைப்படத்திலிருந்து எந்த ஒரு வாழ்கின்ற, இயங்குகின்ற நிலையையும் சரியாக அமைக்கிறது. மண்டலம் ஒரு சதுரமாக இருப்பது. இது பூமியின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் திசை காட்டியின் எட்டுதிசைகளைக் குறிக்கிறது. ஒரு கட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு பாகத்திற்கும் அதி முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டின் சில குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இவை வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பகங்கள், நாபிக்கமலம்(தொப்புள்) போன்றவற்றை குறிக்கிறது. இந்த பாகங்களுக்-கு எந்த ஒரு தொந்தரவுமின்றி, இடருமின்றி அமையும் படிச் செய்ய வேண்டும். அதிக எடையோ அல்லது அதிக கல்கட்டு வேலையோ மேற்கூறிய பாகங்களில் இருக்கக்கூடாது. உதாரணமாக, வாஸ்து புரு-ஷனின் தலையாகிய வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைக்கக்கூடாது. இது வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி நோயைத் தரும். வாஸ்து புருஷனின் முகம் பூமியைப் பார்த்து இருப்பது ஆரம்ப நிலையாக இருந்தபோதிலும், அது வேறு இரு உடல்களை உடையது. ஒன்று நித்ய வாஸ்து என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒருமுறை கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. மற்றது சரவாஸ்து கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாதங்கள் ஒய்வெடுத்து பிறகு சுற்றுகிறது. பூமியின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்த அசைவு ஏற்படுகின்றது. சூரியன் பூமியின் அரை கோளத்திலிருந்து தென் அரை கோளத்திற்கு நகரும்போது வீட்டுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம் (காற்று வீசும் திசை கூட) போன்றவை மாறுகிறது. சில காலநிலை மாற்றம் குறிப்பிட்ட திசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பிட்ட திசையில் உள்ள வீட்டில் காலநிலைக்கேற்ப ஜன்னல் கதவை திறந்து வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் நமக்கு நலன் அளிக்க வல்லது.
முன்னோர்களின் காரணம் அறிந்து காரியம் செய்யும் முறை The Logic of the Amients
ஒருநாளில் ஒவ்வொரு நேரத்தின் இயல்புக்கேற்ற மனதும், உடலும் பலவிதமான வேலைகளைச் செய்கின்றது என்பதனை ஆதி மனிதர்கள் அளிந்திருந்தனர். பூமியின் குழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்றப்படி மனிதனின் இயக்கத்தில் மாற்றம் நடப்பதும் நன்கு அறிந்து, அதன்படி சூரியனால், மனிதனுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டின் ஒவ்வொரு பாகங்களையும் நன்கு திட்டமிட்டு வீடு அமைத்தனர். 24 மணி நேரங்களை 8 பிரிவாகப் பிரித்தார்கள். எட்டு திசைகளை கருத்தில் கொண்டு இவ்விதம் செய்தனர். ஒவ்வொரு செயல்பாடுகளின் இயல்பு ஒவ்வொரு திசைகளின் குணங்களைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு ஏற்ப நன்கு அமையாத வீடுகள் அமைதியின்மை போன்ற இன்னல்களைத் தரும்.

நேரமும் செயல்களும் Time and Activity
அதிகாலை 2 மணி 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும் சிறந்த நேரம். காலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில் இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை கிழக்கு. காலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும் தண்ணீரால் ஈரமாக்கப்படும். காய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என அழைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம்.


No comments:

Post a Comment