சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jul 2015

குஜராத் கலவரத்திற்கு காரணம் பாஜக:முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல்?

ல பேரின் உயிரைப் பலிவாங்கிய குஜராத் கலவரத்திற்கு `எங்கள் தவறே காரணம்` என்று முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் ஒப்புக் கொண்டதாகவும், அதற்காக மன வருத்தத்தை வெளிப்படுத்தியதாகவும் `ரா` உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் தெரிவித்துள்ளது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
 
நிதிமோசடியில் சிக்கி மத்திய அமலாக்கப் பிரிவால் தேடப்பட்டுவரும் இங்கிலாந்தில் பதுங்கியுள்ள லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கடந்த ஒரு மாதமாக வலியுறுத்தி வருகிறது.

இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாகவும், காங்கிரஸ் கூறிவருகிறது. நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என்றும் காங்கிரஸ் சார்பில் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான்  பாஜக மூத்த தலைவர் அத்வானி சமீபத்தில் அளித்த பேட்டியில், நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை போன்ற சம்பவம் நடைபெறாது என்று நம்பிக்கை இல்லை என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். 


சிக்கலின் தொடர்ச்சியாக ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் பேட்டி அமைந்து உள்ளது பாஜகவை பரபரப்பில் வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், 2002 குஜராத் கலவரத்திற்கு எங்களது தவறே காரணம் என்று வருத்தம் அடைந்தார் என்று ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் தெரிவித்து உள்ளார். வாஜ்பாய் உடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்த அவர் இதனை வெளிப்படுத்தி உள்ளார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு ஆலோசகராக பணியாற்றிய துலாத், 2000- ஆம் ஆண்டு வரையில் ‘ரா’ உளவுஅமைப்பின் தலைவராக பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு எங்களது தவறே காரணம் என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார்.

சிலதவறுகளால் குஜராத் கலவரம் தனது அரசு கையாண்ட விதம் குறித்து வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். தங்களின் சில தவறுகளாலேயே குஜராத் கலவரம் ஏற்பட்டது என கூறினார். குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது என்று கூறியுள்ளார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராகப்  பணியாற்றியபோதே குஜராத் கலவரம் நடைபெற்றது. 1999 ஆம் ஆண்டைய கந்தஹார் விமான கடத்தல் தொடர்பாகக் கருத்து தெரிவித்து உள்ள துலாத், ‘ரா’ உளவுப் பிரிவு ஆலோசனை நடத்திய பின்னர், இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்ய முடிவுசெய்யப்பட்டது.

பின்னர் மத்திய அரசு எடுத்த முடிவு தவறு என்று உணர்ந்த அப்போதை ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா ராஜினாமா செய்யப்போவதாகக் கூறினார்.

விமானம் டிசம்பர் 24 ஆம் தேதி கடத்தப்பட்டபோது, நெருக்கடிநிலை மேலாண்மை குழு தவறு செய்துவிட்டது,  விமானம் அமிர்தசரஸில் நிறுத்தப்பட்டபோது அங்கிருந்து விமானத்தை வெளியே கொண்டு செல்வதைத்  தடுக்க  உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. “விமானம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க யாரும் மிகவும் விருப்பத்துடன் இல்லை, மிகவும் குழப்பமான நிலையில், தனிப்பட்ட நிலையில் செயல்பட்ட பஞ்சாப் மாநில போலீசாருக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது விமானமானது பறந்து சென்றுவிட்டது.” என்று குறிப்பிட்டு உள்ளார். 

விமானம் கடத்தப்பட்டபோது இந்திய நெருக்கடிநிலை மேலாண்மை குழு, 155 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களை மீட்பதற்காக 3 தீவிரவாதிகளை விடுதலை செய்ய ஒத்துக் கொண்டது. பின்னர் கடத்தல் விவகாரம் சுமார் 8 நாட்களுக்கு பின்னர் முடிவுக்கு வந்தது. 

குஜராத் கலவரத்திற்கு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு காரணம் என்று தற்போது புதிய சர்ச்சை அவர் பெயரிலேயே எழுந்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது



No comments:

Post a Comment