சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Jul 2015

போக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு! (வீடியோ)

அமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் விமானம் ஒன்று தரையிறங்கிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையின் மைய பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென சிறிய விமானம் ஒன்று தரையிறங்கி ஓடத்தொடங்கியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அனைவரும் பயந்து அலறி தங்களது காரை சாலையோரமாக கொண்டு சென்றனர். இதை பார்த்த விமானி விமானத்தை சாலையின் மையத்தில் இருந்த புல்வெளிக்கு திருப்பினார்.
 
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தின் இறக்கை சேதம் அடைந்ததாக  உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஸ்டாப்போர்ட் நகர காவல்துறையினர் கூறுகையில், "சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானத்தை கிழக்கு கடற்கரை ஸ்கை டைவிங் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்துள்ளனர். திடீரென என்ஜின் சக்தி இழந்ததால் பைலட் விமானத்தை அவசரமாக தரை இறக்கி உள்ளார். அந்த விமானத்தில் 5 பேர் இருந்துள்ளனர். விமானம் சாலையில் இறங்கியது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment