சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jul 2015

சென்னையிலிருந்து சுவிட்சர்லாந்து சென்ற 2ஜி ஊழல் பணம்:10 ஆயிரம் கோடி பதுக்கல்!

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2ஜி ஊழலில் சுருட்டப்பட்ட பணத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் சென்னையிலிருந்து சுவிட்சர்லாந்து  கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள வங்கிகிகளில் பதுக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.     

ரூ.5,395 கோடி ஹவாலா மோசடி தொடர்பாக அண்மையில் அப்ரோஸ் பத்தா மற்றும் மதன்லால் ஜெயின் என்னும் வைர வியாபாரிகள் இருவரை குஜராத் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்,பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளது.


துபாயில் ‘மாப்ரோக் டிரேடிங்’ என்ற பெயரில் வைர வியாபாரம் செய்து வரும் சூரத் நகரைச் சேர்ந்த மணிஷ் ஷா என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. துபாயில் மதன்லாலுக்காக இவர் வைர வியாபாரம் செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மணிஷ் ஷாவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 1 ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. மணிஷ் ஷா, ஏற்கனவே கைதான அப்ரோஸ் பத்தா, மதன்லால் மற்றும் பல வழிகளில் ரூ.700 கோடி வரை பணத்தை சென்னையில் இருந்து சூரத் வழியாக வரி ஏய்ப்பு செய்வோரின் புகலிடமாக திகழும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

இது குறித்து அகமதாபாத் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மணிஷ் ஷா, டிசம்பர் மாதம் 2013 முதல் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஹவாலா மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

2ஜி ஊழல் பணம் சட்டவிரோதமாக சென்னையில் இருந்து சூரத் வழியாக குவைத், ஹாங்காங், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இது 2ஜி ஊழல் வழக்கிற்கு மிக முக்கிய ஆதாரமாகும்’’ என்று தெரிவித்தன.அப்ரோஸ், மதன்லால் ஆகியோருக்காக துபாயில் இயங்கும் பல்வேறு ஹவாலா மோசடிதாரர்கள் மூலம் மணிஷ் ஷா வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிவைத்து இருப்பதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்ரோசும், மதன்லாலும் வெளிநாடுகளில் இருந்து வைரங்களை இறக்குமதி செய்ததாக போலி பில்களை தயாரித்து, அதற்கு வெளிநாடுகளில் உள்ள வைரக் கம்பெனிகளுக்கு பணம் செலுத்தியதுபோல் மோசடி செய்து தங்களுடைய வங்கி கணக்குகள் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் ஒரு கிராம் வைரம் அளவிற்குக் கூட இறக்குமதி செய்யாமலேயே இந்தியாவில் இருந்து பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. 



No comments:

Post a Comment