சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jul 2015

விலை போகாத தனுஷின் 'மாரி': சேனல்களுக்கு கடிவாளம் போடும் தயாரிப்பாளர்கள் சங்கம்!

ஜூலை 24-ம்தேதி முதல் புதுப்படங்களின் ட்ரெய்லர், பாடல்காட்சி, காமெடி சீன் போன்றவற்றை சானல்களுக்கு தரப்போவது இல்லை என்றும், புதுப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கும் சேனல்களுக்கு மட்டுமே அந்த படத்தின் விளம்பரம் தரப்படும் என்றும்  திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள கெடுபிடியால் தமிழ்ச் சேனல் வட்டாரங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 

கடந்த 9 ஆம்தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இரண்டு அமைப்புகளும் திடீரென ஒன்றுகூடி ரகசிய கூட்டம் நடத்தியது. சமீபகாலத்தில் வெளிவந்த புதுப்படங்களின் விளம்பரங்கள், ட்ரெய்லர்கள், பாடல்களை எல்லா சேனல்களும் வெளியிட்டன. ஆனால் ஒன்றுகூட புதுப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கவில்லை, மறுத்து விட்டன. 


சேனல்களை தேடிப்போன தயாரிப்பாளர்களும் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தனர்.  ஜெயா டிவி, ரஜினி நடித்த 'லிங்கா" படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியது. அதன் பிறகு வெளியான எந்த புதுப்படங்களின் உரிமையையும் ஏனோ வாங்கவில்லை. சன் டிவி கமல் நடித்த 'பாபநாசம்' விஜய்யின் 'புலி" என்று பெரிய நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் உரிமையை மட்டும் வாங்கி இருக்கிறது. சின்னபட்ஜெட் படங்களுக்கு கறாராக 'நோ' சொல்லி விட்டது.   

தனுஷ் நடித்து வெளிவந்த  படங்கள் நல்ல பெயரையும், வசூல் ரீதியாகவும் வெற்றியும் பெற்றன. இருப்பினும் அவரது புதுப்படமான 'மாரி" படத்தினை சேனல்கள் வாங்க மறுத்து விட்டன அதனால் தானே  9 கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை  வாங்கி வைத்துக் கொண்டார், தனுஷ்.
புதுப்படங்களின் வியாபாரம் குறித்து கவுன்சில் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன.  விளம்பரங்களுக்கு லட்சம் லட்சமாய் பணம் வாங்கிக் கொள்ளும் சேனல்கள், படங்களை வாங்க மறுப்பது ஏன் என்பது குறித்தும் அலசப்பட்டன. பெரிய நடிகர்கள் படங்களுக்கு விளம்பரம் கொடுப்பதே தவறு என்று சொல்லப்பட்டது.
அப்போது, "முன்பு எல்லாம் ரஜினி படங்களுக்கு  விளம்பரமே செய்ய மாட்டார்கள். நான் வழக்கமாக வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்கு ரஜினி படத்தை வாங்கி வெளியிடுவேன். ரஜினியின் ரசிகர்களே சுவற்றில் எழுதியும் போஸ்டர் அடித்தும் விளம்பரம் செய்து விடுவார்கள். முதல் வாரத்துக்கு தயாரிப்பாளர் தரும் போஸ்டரை பயன்படுத்த மாட்டேன். அடுத்த வாரத்தில்தான் ஒட்டுவேன். இப்போது ரஜினி பட விளம்பரங்களுக்கு டிவி சேனல்களுக்கு மட்டும் 3 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்" என்று அன்பாலயா பிரபாகரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தலைவர் தாணுவில் இருந்து ஞானவேல்ராஜா, சி.வி.குமார் உட்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். ஜூலை 24-ம்தேதி முதல் புதுப்படங்களின் ட்ரெய்லர், பாடல்காட்சி, காமெடி சீன் போன்றவை இனிமேல் சேனல்களுக்கு தரப்போவது இல்லை. எந்த சேனல் புதுப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குகிறதோ  அந்த  சேனலுக்கு மட்டுமே  அந்த படத்தின் விளம்பரம் தரப்படும். அதுவும் 2 கோடி ரூபாய்க்கு உரிமையை வாங்கிவிட்டு, ஒன்றரை கோடிக்கு விளம்பரம் கேட்டால் தரமுடியாது. 

25 லட்சம்வரைதான் விளம்பரம் தரப்படும் என்று வரையறை வகுத்து இருக்கிறார்கள். இந்த திட்டத்தை வருகிற 24-ம்தேதி முதல் அமல்படுத்த இருக்கிறார்கள். கவுன்சிலின் கறார் முடிவு குறித்து சேனல்கள் ஷாக்காகி இருக்கிறது.



No comments:

Post a Comment