சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jul 2015

கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹாலிவுட்டின் டாப் 10 திரைப்படங்கள்!

ஹாலிவுட் படங்களில் செலவு செய்ய சற்றும் யோசிக்க மாட்டார்கள். பணத்தை கொட்டி படம் எடுப்பதில் கில்லாடிகள். கோடிகள் புரளும் ஹாலிவுட்டில் டாப் 10 ஹாலிவுட் மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் படங்கள் இதோ,  

பைரேட்ஸ் ஆஃப் த கரிபியன் ; டெட் மேன்ஸ் செஸ்ட்

உலக மக்களின் கவனம் ஈர்த்த அதிக அளவில் ரசிகப்பட்ட படங்களில் பைரேட்ஸ் ஆஃப் த கரிபியனும் ஒன்று. 2003ல் இதன் முதல் பாகமான “தி க்ரூஸ் ஆஃப் த ப்ளாக் பியர்ல்” ரசிகர்களை புது உலகத்திற்குள்ளேயே கொண்டு சென்றது. இதன் தொடர்ச்சியாக 2006ல் வெளிவந்த திரைப்படம் 'டெட் மேன்ஸ் செஸ்ட்' படம் தான் 225 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஹிட் அடித்தது. இதன் மொத்த வசூல் 1.06 பில்லியன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைப் படைத்தது. நான்கு பாகம் வெளியாகி, 2017ல் ஐந்தாம் பாகம் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேன் ஆஃப் ஸ்டீல்  

சூப்பர் ஹீரோஸ் சார்ந்த காமிக்ஸ் புத்தகத்திலிருந்து வெளிவந்த சூப்பர் மேன் திரைப்படமே மேன் ஆஃப் ஸ்டீல். சூப்பர் மேன் திரைப்படங்களின் வரிசையில் 2006ல் வெளியான சூப்பர் மேன் ரிட்டன்ஸ் சரியான அளவிற்கு லாபத்தை ஈட்டவில்லை. பின்னர்  7 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ல் வெளியான படம் 'மேன் ஆஃப் ஸ்டீல்'. பெரும் எதிர் பார்ப்புடன் வெளியாகி 30,000 திரையரங்குகளில் வெளியானது. 220 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு 668 மில்லியன் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது. ஸேக் ஸ்னிடர் இயக்கத்தில் ஹென்ரி கவில் இப்படத்தில் சூப்பர் மேனாக நடித்திருப்பார். 

க்ரானிகல்ஸ் ஆஃப் நார்னியா! 

மிகப்பெரிய பட்ஜெட்டுகளில் உருவான குழந்தைகளுக்கான திரைப்படம் தான் ’க்ரானிகல்ஸ் ஆஃப் நார்னியா’. 2005ல் உருவான இதன் முதல் பாகம் பெரும் வரவேற்ப்பை பெற தொடர்ச்சியாக 2008ல் தயாரானது ’ப்ரின்ஸ் கேஸ்பியன்’. இதன் மொத்த பட்ஜெட் 225 மில்லியன் தொகையில் உருவானது. 419 மில்லியன் வரை வசூல் சாதனையும் படைத்தது. 

தி டார்க் நைட் ரைசஸ்:

250 மில்லியன் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 'பேட் மேன்; தி டார்க் நைட் ரைசஸ்'. 2012ல் வெளியான இப்படத்தை கிரிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். இதன் முந்தைய தொடர்ச்சியான டார்க் நைட் படமும் இவர் இயக்கியதே. பாக்ஸ் ஆபிஸில் 1.08 பில்லியன் வரை வசூலித்தது. இதன் தொடர்ச்சியாக பேட்மேன் Vs சூப்பர் மேன் திரைப்படம் அடுத்த வருடம் வெளிவரவிருக்கிறது. இதன் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியுள்ளது. 

அவதார்: 

’டைட்டானிக்’ என்ற காதல் காவியத்தை படைத்த ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் 240 மில்லியன் செலவில் வெளியான திரைப்படம் அவதார். மோஷன் கேப்சரிங் போன்ற அதி நவீன அனிமேஷன் மூலம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை உருவாக்கி கற்பனையின் உச்சமாக உருவானது அவதார். இப்படம் 2.78 பில்லியனை வசூலித்தது. மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்று. வேற்று கிரகத்து அவதார்ஸ் எனப்படும் மக்களை அழிக்கும் மனித இனம் சார்த்த எதிர்கால சிந்தனையுடன் உருவாக்கியப்படமே அவதார். 

ஜான் கார்டர்: 


’ஜான் கார்டர் ஆஃப் மார்ஸ்’ படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்திருந்தது. சைன்ஸ் ஃபிக்ஸன் கலந்த ஃபேண்டசி படமே ஜான் கார்டர். இப்படத்தை அன்ட்ரிவ் ஸ்டான்டோன் இயக்கினார். 2012ல் வெளியான அனிமேஷன் கலந்த இப்படம் 250 மில்லியன் டாலரில் உருவாகி 285 மில்லியன் வரை வசூல் சாதனைப் படைத்தது. படத்தின் வசுல் சற்று குறைவு தான் எனினும் படத்தின் பட்ஜெட் தாறுமாறு ரகம்.
ஹாரி பாட்டர்: 

ஜெ.கே.ரௌலிங் எழுதிய கதையை மையமாக வைத்து உருவான பாகங்களே ஹாரிபாட்டர் திரைப்படம். இன்று வரை மாய மந்திரங்களில் சிறுவர்களை கட்டிப் போட்டிருக்கிறது. 8 பாகங்களில் வெளியான ஹாரிபாட்டரின் ஆறாவது பாகமான ஹாஃப் ப்ளட் ப்ரின்ஸ் பாகமே 250 மில்லியன் பட்ஜெட்டில் உருவானது. என்றுமே எவர் க்ரீன் மாயாஜால திரைப்படமே ஹாரிபாட்டர். இதுவரை 934 மில்லியன் வரை வசூலித்தது. 

டாங்கில்ட்

டிஸ்னியின் மாபெரும் படைப்பு தான் 2010ல் வெளியான டாங்கில்ட். அனிமேஷனில் உருவான முடி நீளமான ’ரேபன்ஸெல்’ கதையில் இன்னொரு வகை இளவரசி கதை. அவளை காப்பாற்றும் கதாநாயகன், இளமைக்காக இளவரசியை வசப்படுத்தும் மந்திரகாரி பின் இளவர்சியை குடும்பத்தோடு சேர்த்துவைத்து சுபம் என முடியும் கதை. 260 மில்லியன் வரை பட்ஜெட்டில் உருவாகி 600 மில்லியன் வரை வசூல் சாதனைப் படைத்தது.  அமெரிக்காவில் மட்டும் 200 மில்லியன் வரை வசூலித்தது.

ஸ்பைடன் மேன் 

சூப்பர் ஹீரோக்களில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரமே ஸ்பைடர் மேன். பீட்டர் கதாப்பாத்திரத்தையும், மேரி கதாப்பாத்திரத்தையும் உலகம் மறக்க வாய்ப்பே இல்லை. இதன் மூன்றாம் பாகமான ஸ்பைடன் மேன் 3 படம் 260 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி 890 மில்லியன் வரை வசூலித்தது. இதுவரை வெளியான பாகங்களிலேயே அதிகமான பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் இதுவே. 

பைரைட்ஸ் ஆஃப் கரிபியன்; அட் த வேர்ல்ட்ஸ் எண்ட்
வசூலிலும், விமர்சனத்திலும் சிறப்பாக சென்ற திரைப்படமே ’அட் த வேர்ல்ட்ஸ் எண்ட்’. 310 மில்லியன் பட்ஜெட்டில் உருவான முதல் ஹாலிவுட் திரைப்படம். ஜானி டெப் தன்னுடைய நடிப்பின் உச்சத்தை நிரூபித்த கமர்சியல் கலந்த வேறு உலக பயணமே பைரேட்ஸ் ஆஃப் த கரிபியன். மேலும் ஜாக் ஸ்பேரோவின் முதல் காட்சி. அவன் தப்பிக்கும் சாகசம் கலந்த காமெடியும் அதில் மாயாஜாலமும் கலந்த திரைப்படமே ’அட் த வேர்ல்ட்ஸ் எண்ட்’. 936 மில்லியன் வரை வசூல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment