சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Feb 2015

'ஆட்சிக்கே வரவில்லை...அதுக்குள்ளேவா?'


துநாள் வரை மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலதிபர்கள் மீது அதிரடி ஊழல் புகார்களை கூறி பரபரப்பை கிளப்பிக்கொண்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது அவரது கட்சி மீதே கட்சி நிதி திரட்டியதில் மெகா ஊழல் புகார் கூறப்பட்டுள்ளதாl பரபரத்து கிடக்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்.

போலி கம்பெனிகளின் பெயரில் கடந்த ஆண்டில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றுள்ளதாக, இந்த தொகை ஹவாலா பணபரிமாற்ற தொழிலில் ஈடுபடுபவர்களுடையது என்றும் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளது ' ஆவாம்' ( AAP Volunteer Action Manch -AVAM) என்ற அமைப்புஅரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்றும், அவரது செயல்பாடுகளை விமர்சித்தால் கோபப்படுவதாகவும் குற்றம் சாட்டி, ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறியவர்கள் தொடங்கியதுதான் மேற்கூறிய அமைப்பு. 

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அந்த அமைப்பினர், நன்கொடை கொடுத்தவர்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் எல்லாமே போலியானவே. அப்படிப்பட்ட நிறுவனங்களே செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினர். 

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்துள்ள ஷாஜியா இல்மி, ஆம் ஆத்மி கட்சிதொடங்கப்பட்டபோது அதன் நிறுவன தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த மே மாதம் அக்கட்சியிலிருந்து விலகியவர் இல்மி. 

அவரும் தன் பங்கிற்குகட்சி நிதியாக வந்த மேற்கூறிய பண பரிமாற்றம்கடந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நள்ளிரவில் நடைபெற்றதாகவும், இதனை 'ஹவாலா மிட்நைட்' எனக் கூறலாம் என்றும் போட்டு தாக்குகிறார். 

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரண்டாம் முறையாக தமக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தருமாறு டெல்லி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார் கெஜ்ரிவால். இந்த நிலையில் அவரது கட்சி மீது கிளம்பி உள்ள இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இன்னும் சொந்த பலத்தில் முழு மெஜாரிட்டியுடன் ஒருமுறை கூட ஆட்சியமைக்காத நிலையில், அதற்குள்ளாகவே  ஆம் ஆத்மி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அந்த கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலால் எரிச்சலுற்றே பா.ஜனதா, இப்படி சிலரை தூண்டிவிட்டு புழுதிவாரி தூற்றுவதாக ஆம் ஆத்மி தரப்பினர் ஆவேசம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தங்கள் கட்சி மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் கட்சிக்காக பெறப்பட்ட அனைத்து நன்கொடைகளும் காசோலை மூலமாகவே பெறப்பட்டுள்ளதாகவும், நன்கொடை அளித்த நிறுவனங்கள் விதிமீறல்கள் மூலம் பணம் திரட்டி இருந்தால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளதோடு, "மத்தியில் பா.ஜனதா அரசுதானே ஆட்சியில் உள்ளது. அவர்கள் விசாரிக்கட்டும். ஏதாவது தவறு என்று தெரிந்தால் என்னை தண்டிக்கட்டும்எனக் கூறியுள்ளார். 

தேர்தல் நெருக்கத்தில் இன்னும் என்னென்ன புகார்கள், எந்தெந்த கட்சிகள் மீது வெடித்துக் கிளம்பப்போகிறதோ? 


No comments:

Post a Comment